பொதுவான முதலீடு என்றாலே மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் முதலீட்டு ஆலோசகர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இன்று நாம் பார்க்கவிருப்பது யூலிப் திட்டம் பற்றித் தான்.
யூலிப் என்பது யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டமாகும். இது பல்வேறு நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யப்படும் ஒரு முதலீட்டு ஆப்சனுடன் கூடிய, ஒரு காப்பீட்டு பாலிசி. இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் இன்சூரன்ஸ் + முதலீடு என்ற இரண்டும் சேர்ந்த ஒரு திட்டமாகும்.
இதுவும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்று தான் செயல்படும். இதிலும் குறிப்பிட்ட விகிதத்தில் பணம் செலுத்தலாம். இது உங்களின் தேவை மற்றும் ரிஸ்க் விகிதத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
யூலிப் விதிமுறைகள்
எனினும் யூலிப் திட்டங்களை பொறுத்தவரையில் லாக் இன் பீரியர்டு 5 ஆண்டுகளாகும். யூலிப்-பில் பொதுவாக முன் கூட்டியே பணத்தை பெற நினைத்தால் இன்சூரன்ஸ் திட்டத்தினை இழக்க நேரிடலாம். ஆக இந்த திட்டத்தினை எடுக்கும்போது இதனையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. இது திட்டங்களுக்கு திட்டம் மாறுபடும்.
யுடிஐ - யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம்
இன்று நாம் பார்க்கவிருப்பது யுடிஐ - யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் (Direct plan). இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என இரண்டையும் ஒரே திட்டத்தில் வழங்குகிறது. இது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது காப்பீடு செய்யப்பட்டவர்கள் எதிர்பாராத தருணங்களில் இறந்து விட்டால் ஏற்படும் நிதி சார்ந்த இழப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. அதே நேரம் சேமிப்பினையும் வலுப்படுத்துகிறது. மொத்தத்தில் 2இன் 1 ஆக செயல்படுகிறது.
AUM - NAV
இந்த யுடிஐ - யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் அக்டோபர் 01, 1971ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மொத்த AUM விகிதமானது, 5299.27 கோடி ரூபாயாகும். இதன் நிகர சொத்து மதிப்பு (NAV) 34.1236 ரூபாயாகும். இது 0.88% செலவின விகிதத்தினை கொண்டுள்ளது. இது அதன் சராசரி செலவினத்தினை போலவே உள்ளது.
முதலீட்டு ஆப்சன்
இந்த யூலிப் திட்டத்தில் 40%-க்கு மேல் பங்கு மற்றும் பங்கு தொடர்பான பத்திரங்களில் முதலீடு செய்ய திட்டமிடுகிறது. மீதமுள்ள தொகை கடன் சந்தை அல்லது ரிஸ்க் சற்று குறைவான நிதி சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் சந்தையுடன் இணைந்து முதலீடு செய்யப்படுவதால் லாப விகிதமும் அதிகம் கிடைக்கும். இந்த திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு பிரிவு 80சியின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.
குறைந்தபட்ச முதலீட்டு தொகை
இது சற்று ரிஸ்கான திட்டமாகும். யூலிப்புக்கு குறைந்தபட்ச முதலீட்டு தொகை 15,000 தேவைப்படுகிறது. இதே எஸ்ஐபி-யில் குறைந்தபட்ச தொகை 500 ரூபாய் தேவைப்படுகிறது. இந்த திட்டத்தில் லாக் இன் காலம் மற்றும் வெளியேறும் காலம் இல்லை.
வருமான விகிதம் -
SIP -யில் வருமானம்
1 வருடம் - 2.35%
2 வருடம் - 13.62%
3 வருடம் - 20.25%
5 வருடம் - 26.40%
Lum sum investment0-ல் வருமானம்
1 வருடம் - 11.47%
2 வருடம் - 43.90%
3 வருடம் - 27.59%
5 வருடம் - 48.47%
தொடங்கியதில் இருந்து - 130.43%
போர்ட்போலியோ
பங்குகளில் 38.29%
கடன் சந்தையில் - 60%
அரசு பத்திரங்களில் - 28.27%
குறைந்த ரிஸ்க் உடைய செக்யூரிட்டீகள் - 30.65%
அதேபோல நிதித்துறை, டெக்னாலஜி, மூலதன துறை உள்ளிட்ட பல துறைகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகின்றது.
இந்த ஃபண்டினை அதீஆளவில் GOI, குஜராத் அரசு, ஹெச். டி.எஃப்.சி லிமிடெட், கனரா வங்கி, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் வங்கிகள் அதிகளவில் வைத்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications