மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் ஃபண்டுகளை தேர்தெடுக்கும்போது பொதுவாக ரேட்டிங்கினையும் கவனிப்பது உண்டு. குறிப்பாக நீண்டகால முதலீடு எனும் போது இதபோன்ற பல விஷயங்களையும் அலசி ஆராய வேண்டியுள்ளது.
ரேட்டிங் மட்டும் அல்ல, அது எந்த வகையான ஃபண்ட், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். உங்களின் இலக்கு என்பன போன்ற பல விஷயங்களும் கவனிக்க வேண்டியவைகளில் உள்ளன.
எப்படியிருப்பினும் உங்களது முதலீட்டினை பிரித்து செய்வது அவசியமான ஒன்று. அதேசமயம் பணவீக்கத்தினை தாண்டி லாபம் தரக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டும். அந்த வகையின் நாம் இன்று பார்க்கவிருப்பது 5 ஸ்டார் மதிப்புள்ள 3 ஃபண்டுகளை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். இதில் மாதம் 10,000 ரூபாய் எஸ் ஐபி மூலமாக முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மூலம் உங்களது கார்ப்பஸ் எவ்வளவாக இருக்கும்?
3 வருடத்திற்கு முன் & பின்
ஒரு முதலீட்டாளர்கள் இந்த ஃபண்டில் 1 லட்சம் ரூபாய் முதலீடு அல்லது எஸ்ஐபி முதலீடு மூலம் மாதம் 10,000 ரூபாய், 3 வருடத்திற்கு முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். மூன்று வருடத்திற்கு பிறகு அவரின் மொத்த முதலீடு மதிப்பு 10,05,531 ரூபாயாக அதிகரித்திருக்கும். கடந்த ஆண்டில் மட்டும் 17.83 ரூபாயாக வருமானம் கொடுத்துள்ளது.
இந்த ஃபண்டின் போர்ட்போலியோவில் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐடிசி லிமிடெட், லார்சன் & டூப்ரோ லிமிடெட், அதானி போர்ட்ஸ், ஸ்பெஷல் உள்ளிட்ட பங்குகள் டாப் 5 ஹோடிங் பங்குளாக உள்ளன.
பேங்க் ஆப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் - டேரக்ட் பிளான்
பேங்க் ஆப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் ஆனது டிசம்பர் 19, 2018 அன்று தொடங்கப்பட்டது. இது 5 ஸ்டார் மதிப்புடையது. இதன் AUM மதிப்பானது செப்டம்பர் 16, 2022 நிலவரப்படி 353.51 கோடி ரூபாயாகும். இதன் என்ஏவி-யானது 29.01 ரூபாயாகும். இதன் செலவு விகிதம் 1.12% ஆகும். இதே வகை சார்ந்த மற்ற ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது நல்ல லாபகரமான ஃபண்ட் ஆகும். கடந்த 3 ஆண்டுகளில் இதன் வருடாந்திர லாபம் 43.25% லாபம் கொடுத்துள்ளது. இந்த ஃபண்டில் 1 லட்சம் ரூபாய் முதலீடு அல்லது எஸ்ஐபி முதலீடு மூலம் மாதம் 10,000 ரூபாய், 3 வருடத்திற்கு முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம்.
பேங்க் ஆப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் - 3 வருடத்திற்கு பிறகு
மூன்று வருடத்திற்கு பிறகு அவரின் மொத்த முதலீடு மதிப்பு 9,45,874 ரூபாயாக அதிகரித்திருக்கும். கடந்த ஆண்டில் மட்டும் 17.83 ரூபாயாக வருமானம் கொடுத்துள்ளது.
இந்த ஃபண்டில் ஐசிஐசிஐ வங்கி, டிம்கென் இந்தியா, சிட்டி யூனியன் வங்கி, ஹோம் பர்ஸ்ட் ஃபைனான்ஸ் இந்தியா லிமிடெட், ஃபோனிக்ஸ் மில்லிஸ் லிமிடெட் உள்ளிட்ட பங்குகள் டாப் 5 ஹோல்டிங் நிறுவனமாகும்.
கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் - டேரக்ட் திட்டம்
கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த பிப்ரவரி 15, 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஃபண்டிற்கு 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டது. இதன் ஏயுஎம் மதிப்பானது 3455.06 கோடி ரூபாயாகும். இதன் என்ஏவி செப்டம்பர் 16, 2022 நிலவரப்படி 26.9 ரூபாயாகும். இதன் செலவினம் 0.47% ஆகும். இதில் 1 லட்சம் ரூபாய் அல்லது மாதம் 10,000 ரூபாய் என 3 வருடம் எஸ்ஐபி-யில் முதலீடு செய்திருந்தால், இன்றைய மதிப்பு 9,82,585 ரூபாயாகும். இதன் வருடாந்திர லாபம் 45.46% ஆகும்.


Click it and Unblock the Notifications