வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு (NRI's) நிதி மேலாண்மை என்பது சிக்கலான ஒன்றாக இருக்கலாம். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI), இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்தியர்களின் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கி சேவைகளை வழங்கியுள்ளது. இந்தப் பதிவில் ஆர்பிஐ NRI-களுக்கு வழங்கும் வெவ்வேறு வகையான வங்கி கணக்குகளின் விவரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
NRE அக்கவுண்ட்: தங்களுடைய வெளிநாட்டு வருமானத்தை இந்தியாவிற்கு அனுப்ப விரும்புவோருக்கு, "Non-resident external account" சிறந்தது. NRE கணக்குகளில் பெறப்படும் வட்டிக்கு இந்தியாவில் வரி கிடையாது. இது NRI-களுக்கு ஒரு சிறந்த விருப்பமாக அமைகிறது. NRE கணக்குகளில் டெபாசிட்கள் வெளிநாட்டு நாணயத்தில் செய்யப்பட்டு இந்திய ரூபாயாக மாற்றப்படுகிறது. NRI-கள் தங்கள் இந்திய செலவுகளை நிர்வகிக்க NRE அக்கவுண்ட் உதவுகிறது.

NRO அக்கவுண்ட்: இந்தியாவில் வாடகை வருமானம், ஓய்வூதியம், பங்குகள் மற்றும் பிற வருமானங்கள் போன்ற வருமான ஆதாரங்கள் கொண்ட NRI-களுக்கு NRO (Non-Resident Ordinary) கணக்கு மிகவும் பொருத்தமானது. இந்த கணக்கு இந்தியாவில் உள்ள தினசரி செலவுகள் மற்றும் கட்டணங்களை நிர்வகிக்க பயனுள்ளதாக இருக்கும். NRE கணக்குகளைப் போலல்லாமல், NRO கணக்குகளில் கிடைக்கும் வட்டிக்கு இந்தியாவில் வருமான வரி விதிக்கப்படும்.
FCNR அக்கவுண்ட்: FCNR என்றால் "Foreign Currency Non-Resident Deposit Account" என்பது பொருள். இந்த கணக்கில் பணம் வெளிநாட்டு கரன்சியில் அதாவது டாலர், பவுண்ட், யூரோ போன்ற கரன்சியில் டெபாசிட் செய்யப்படும். இது ஒரு டெபாசிட் அக்கவுண்ட். இந்தக் கணக்கு மூலம் சம்பாதிக்கும் வட்டிக்கு இந்தியாவில் வரி இல்லை.
தேவைப்படும் ஆவணங்கள்: இந்தக் கணக்குகளில் ஏதேனும் ஒன்றைத் திறப்பதற்கு NRI-ஆக இருக்க வேண்டும். பாஸ்போர்ட், விசா மற்றும் வெளிநாட்டு முகவரிச் சான்று போன்ற குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
NRE மற்றும் NRO கணக்குகளை மற்ற NRI-களுடன் கூட்டுக் கணக்காகத் தொடங்கலாம். மேலும் இந்தியாவில் வசிப்பவர்களுடன் சேர்ந்து கணக்கைத் திறக்கலாம். ஆனால் FCNR கணக்குகளை தனி நபராகவோ அல்லது மற்ற NRI-களுடன் இணைந்தோ மட்டுமே திறக்க முடியும்.
எனவே, இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்தியர்கள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப NRE, NRO மற்றும் FCNR கணக்குகளைத் திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனி நோக்கங்கள் மற்றும் விதிமுறைகள் இருக்கும். எனவே, தங்களின் நிதி நிலைமை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப எந்த கணக்கைத் திறப்பது என்பதை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications