சென்னை: வங்கிகளில் பர்சனல் லோன் பெறுவதற்கு, நீங்கள் எந்த விதமான நகை அல்லது பத்திரங்களை அடமானம் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தாலே போதுமானது. இன்றெல்லாம் பல வங்கிகள் வாடிக்கையாளர்களை அழைத்து பர்சனல் லோன் தருவதாகக் கூறி வருகின்றனர். நீங்கள் பர்சனல் லோன் வாங்க இருந்தால் அதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
வாடிக்கையாளர்களை கவர்வதற்கென்றே சிறப்பான சலுகைகள் மற்றும் குறைந்த வட்டி விகிதத்துடன் நிறைய வங்கிகள் பர்சனல் லோன்களை வழங்கி வருகிறது. இதனால் பர்சனல் லோன் வாங்கும் நபருக்கு குழப்பமாக இருக்கலாம். எந்த வங்கிக்குச் சென்று கடன் வாங்கலாம்.. அப்படி வாங்கினால் எளிதில் செலுத்த முடியுமா.. என்பது போன்ற பல கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். அப்படி இருந்தால் கவலை வேண்டாம். அதற்கான சில டிப்ஸ்களைப் பார்த்துவிட்டு அதன் பிறகு லோன்களைப் பெறுங்கள்.

நல்ல கிரெடிட் ஸ்கோர்: கிரெடிட் ஸ்கோர் என்பது 3 எழுத்தைக் கொண்ட ஒரு எண்ணாகும். இது 300 முதல் 900 வரையில் இருக்கும். வீட்டுக் கடனாக இருந்தாலும் அல்லது தனிநபர் கடனாக இருந்தாலும், வங்கிகள் முதலில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரையே மதிப்பாய்வு செய்கின்றனர். நீங்கள் ஏதேனும் கடன் வாங்கி இருந்தால் அவற்றை எவ்வாறு செலுத்தி இருக்கிறீர்கள்? என்பதை வைத்து தான் இந்த கிரெடிட் ஸ்கோர் அமைகிறது. கிரெடிட் ஸ்கோர் 750 க்கும் மேலிருந்தால் உங்களுக்கு பர்சனல் லோன் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதுவே 750க்கு கீழ் இருந்தால் சில வங்கிகள் உங்களுக்கு லோன் தரலாமா? வேண்டாமா? என்பது குறித்து யோசித்து முடிவு எடுக்கும்
எவ்வளவு தொகை தேவை என்பதை தெரிந்து செயல்படவும்: வங்கிகளிடம் பர்சனல் லோன் பெற வேண்டும் என்பது குறித்து நீங்கள் பேசினால், அவர்கள் உங்கள் தேவைக்கு அதிகமான தொகையை எடுக்க வைப்பது ஆர்வம் காட்டக்கூடும். இதில் வங்கிகளை குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களுடைய வேலையை தான் அவர்கள் செய்கிறார்கள். இருப்பினும் லோன் பெறும் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். எனவே உங்களுக்கு எவ்வளவு தொகை தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும். ஏனெனில், அதிக தொகை எடுத்த பின்பு, அதனை வட்டியுடன் சேர்த்து நீங்கள் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே உங்களுக்கு தேவையான தொகையை மட்டும் பர்சனல் லோன் மூலமாக பெறவும்.
கடன் வாங்குவதன் நோக்கத்தை உணருங்கள்: சிலர் கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் லோன்களை எடுக்கின்றனர். எதற்காக பர்சனல் லோனை பெற்று செலவு செய்ய இருக்கிறீர்கள்.. என்பதை உணர்ந்து செயல்படுங்கள். பர்சனல் லோன் மூலம் பெற்ற கடன்களை வைத்து வீண் செலவு செய்வதைத் தவிர்க்கவும். பின் வரும் நாட்களில், இந்த லோன்களை நீங்கள் தான் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால், உங்கள் தேவை மற்றும் நோக்கத்தை அறிந்து செயல்படுவது நல்லது.,
EMI செலுத்த முடியுமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் எடுக்கும் பர்சனல் லோனை பொறுத்து, ஒவ்வொரு வங்கியும் வட்டி விகிதத்தில் மாறுபடுகின்றன. நீங்கள் பெரும் கடன்களைப் பொறுத்து 8 முதல் 10 சதவீத வரை வட்டி விதிக்கின்றன. நீங்கள் வாங்கும் பர்சனல் லோனுக்கு, உங்களால் மாத மாதம் சரியாக EMI செலுத்த முடியுமா.. என்பதை தெரிந்து லோன் எடுக்கவும். ஒரு மாதம் நீங்கள் EMI செலுத்தத் தாமதமானாலும், அவை உங்களுடைய கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம். இதனால் வரும் நாட்களில் நீங்கள் லோன் எடுப்பதற்கு முடியாமல் கூட போகலாம்.
சிறந்த வங்கியை தேர்வு செய்யவும்: பர்சனல் லோன் கொடுப்பதற்கு பல வங்கிகளும் தயார் நிலையில் இருக்கும். எனவே, உங்களுக்கு ஏற்ற விதிமுறைகளுடன் லோன் வழங்கும் வங்கிகளை தேர்வு செய்யவும். மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கும் வங்கிகளைத் தேர்வு செய்யும் போது, நீங்கள் வட்டிக்காக அதிக தொகை செலவு செய்வதைத் தவிர்க்கலாம். கடன் வழங்கும் பேங்குகளை தேர்வு செய்வதற்கு முன்பு ஒன்றுக்கு இருமுறை யோசித்து செயல்படவும்.
ப்ராசசிங் கட்டணங்கள்: நாட்டில் உள்ள பல வங்கிகள் லோன்களை வழங்க பிராசசிங் கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களை வசூலிக்கின்றன. எனவே, பிராசசிங் கட்டணத்திற்காக நீங்கள் செலவு செய்யும் தொகையை குறித்தும் மதிப்பாய்வு செய்யவும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications