சென்னை: இன்றெல்லாம் வீடு வாங்குவது ஒரு கனவு போல உள்ளது. விலைவாசி ஏற்றத்தினால் பலரும் தங்களுடைய கனவு இல்லத்தை வாங்குவதற்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் வங்கிகள் தரும் வீட்டுக் கடன் எடுத்து மாதம் மாதம் EMI செலுத்தி வருகின்றனர். மேலும், இந்த கடன்கள் நீண்ட நாள் திருப்பி செலுத்தும் கால அளவைக் கொண்டிருக்கின்றன. இதனால் பல ஆண்டுகளுக்கு கடன் வாங்கும் தனிநபர்கள் வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இந்த சுமையைக் குறைப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
அதிக அளவிலான டவுன் பேமெண்ட்டைத் தேர்வு செய்யவும்: டவுன் பேமெண்ட் என்பது அடிப்படைத் தொகையாகும். நீங்கள் வங்கி கடன் வாங்கி கார் மற்றும் வீடு போன்றவற்றை வாங்க இருந்தால், டவுன் பேமெண்ட் செலுத்த வேண்டும். உதாரணமாக நீங்கள் ரூ. 50 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நீங்கள் வங்கியில் கடன் பெற விண்ணப்பித்திருந்தால், ஒரு குறிப்பிட்ட தொகையை டவுன் பேமெண்டாகச் செலுத்த வேண்டும். இது எதற்கு என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் போது உங்களால் சரிவர EMI செலுத்த முடியும் என்ற கட்டத்திற்கு வங்கிகள் செல்லும்.

நீங்கள் டவுன் பேமெண்டாக அதிக தொகை செலுத்தும் போது உங்களுடைய அசல் தொகையை இது கணிசமாகக் குறைக்கலாம். இதனால் உங்களுக்கு வட்டியின் விகிதமும் குறைய வாய்ப்புள்ளது.
ஆண்டுதோறும் EMI தொகையை அதிகரிக்கவும்: உங்கள் வருமானத்தின் அளவு அதிகரிக்கும் போது, ஆண்டு தோறும் உங்கள் EMI தொகையையும் அதிகரிக்கவும். சுமார் 5 சதவீத தொகையை அதிகரிப்பதன் மூலம் குறைந்த கால அளவில் நீங்கள், உங்கள் கடனை முடிக்க முடியும்.
முன்பணம் செலுத்தவும்: EMI தொகையை தாண்டி கொஞ்சம் சேமிப்பை அதிகரித்து முன்பணம் செலுத்தவும். இதுவும் நீங்கள் EMI செலுத்தும் கால அளவை கணிசமாக குறைக்கும். சான்றாக 10 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் கடனை, முன்பணம் செலுத்துவதன் மூலம் 7 அல்லது 8 ஆண்டுகளில் செலுத்த முடியும்.
லோன் ட்ரான்ஸ்பர் பற்றி தெரிந்து கொள்ளலாம்: தற்போது உள்ள வங்கியில், நீங்கள் பெற்ற கடன்களின் வட்டி விகிதத்தை விட மற்ற வங்கிகளில் குறைந்த வட்டி விகிதம் இருந்தால், நீங்கள் லோன் ட்ரான்ஸ்ஃபர் குறித்து யோசிக்கலாம். ஆனால் 0.5% முதல் ஒரு சதவீதம் வரை வட்டி விகிதத்தில் வித்தியாசம் இருந்தால் மட்டுமே, இதனைப் பற்றி யோசிக்கவும். ஏனெனில் பிராசசிங் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களால் உங்களுடைய பழைய கடன் வழங்கிய வங்கிக்கும், நீங்கள் லோன் ட்ரான்ஸ்பர் செய்ய இருக்கும் வங்கிக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கூட போகலாம்.
வீண் செலவுகளைத் தவிர்க்கவும்: தேவையற்ற வீண் செலவுகளை குறைத்து அதனை சேமிப்பாக வைக்கும் போது உங்கள் வீட்டுக் கடனை எளிதில் அடைக்க முடியும். இன்றைய சிறு தியாகங்கள் நாளை உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி சுதந்திரத்திற்கு வழி வகுக்கும்.
நீண்டகால கடன் அளவை மதிப்பிடவும்: சிலர் நீண்ட காலத்திற்கு EMI செலுத்துவது எளிதாக இருக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் அது அப்படி கிடையாது. நீண்ட காலத்திற்கு EMI செலுத்துவது வட்டியை அதிகரிக்கச் செய்யலாம். எனவே நீண்ட காலத்திற்கு நீங்கள் வாங்கும் கடனுக்கு உள்ள வட்டி விகிதத்தை ஆராய்ந்து கால அளவை நீட்டிப்பது நல்ல பலன்களைத் தரும்.
அரசு திட்டங்களை ஆராயவும்: முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை வழங்குகிறது. குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் கடன் தொகைகளைப் பெற அரசாங்கத் திட்டங்களைப் பற்றி ஆராயவும். மேலும், நீங்கள் திருப்பிச் செலுத்தும் தொகையை எளிதாக்க, இந்த விருப்பங்கள் பற்றி ஆராய்வது சிறந்தத் தேர்வாக இருக்கும்.
ஒரு பட்ஜெட்டை உருவாக்கி அதன்படி நடக்கவும்: மாதம் நீங்கள் செலவு செய்ய உள்ள தொகையைப் பற்றி புரிந்து கொள்வதற்கு ஒரு பட்ஜெட்டை உருவாக்கவும். அதில் தேவையற்ற ஏதேனும் செலவுகள் குறிப்பிடப்பட்டிருந்தால், அதனைத் தவிர்த்து சேமிக்க தொடங்கவும். இதன் மூலம் உங்கள் வீட்டுக் கடன் சுமையை நீங்கள் குறைந்த கால அளவில் முடிக்க முடியும்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த டிப்ஸ்களை உங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் வீட்டு கடன்களுக்கு வாங்கிய தொகையை எளிதில் அடைக்க முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications