இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தில் நாட்டின் பணவீக்கம் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு ரெப்போ விகிதத்தைக் குறைக்காமல் போனது பிக்ஸட் டெபாசிட் செய்தவர்களுக்கும், செய்யத் திட்டமிடுபவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான விஷயமாகும்.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைந்திருந்தால், கண்டிப்பாக வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைத்திருக்கும், ஆனால் தற்போது அதே வட்டி விகிதம் தொடர உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் அதிக வட்டி வருமானம் கொடுக்கும் டாப் 10 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் எது என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
இந்திய மக்கள்
தங்கத்திற்கு அடுத்த இந்திய மக்கள் அதிகம் நம்பும் ஒரு முக்கியமான முதலீட்டுத் திட்டம் என்றால் அது கண்டிப்பாகப் பிக்ஸட் டெபாசிட் தான், சந்தையில் இருக்கும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை விடவும் சற்று குறைவான லாபத்தைக் கொடுத்தாலும், எவ்விதமான ஆபத்தும் இல்லாமல் நிலையான வருமானம் கொடுக்கக் கூடிய முதலீடு திட்டம் என்பதால் இந்திய மக்களுக்குப் பிக்ஸட் டெபாசிட் மீது தனிக் கவனம் உள்ளது.
இந்திய பொருளாதாரம்
கொரோனா தாக்கத்திலிருந்து இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வரும் நிலையில் இந்திய வங்கிகள் நிலையான மற்றும் உத்தரவாதம் நிறைந்த லாபத்தைக் கொடுக்கிறது. இந்த வகையில் பிக்ஸட் டெபாசிட் மூலம் மக்களுக்கு அதிக வட்டி வருமானம் கொடுக்கும் டாப் 10 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
டாப் 10 வங்கிகள்
ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் - 2 வருடத்தில் இருந்து 3 வருடம் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.50 சதவீதம் வட்டி வருமானம் கொடுக்கிறது.
சூர்யோதயா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் - 3 முதல் 5 வருடம் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.50 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.
இன்டஸ்இந்த வங்கி - 1 முதல் 3 வருடம் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.00 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் - 2 முதல் 3 வருடம் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.00 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.
டிசிபி வங்கி - 2 முதல் 5 வருடம் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.95 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.
ஆர்பிஎல் வங்கி - 2 முதல் 3 வருடம் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.95 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.
யெஸ் வங்கி - 2 முதல 5 வருடம் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.75 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.
ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 2 முதல் 3 வருடம் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.75 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.
உஜ்வான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 1 முதல் 2 வருடம் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.50 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.
பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி - 2 முதல் 3 வருடம் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.50 சதவீத வட்டி வருமானம் கொடுக்கிறது.
இதேபோல் இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கிகளாகக் கருதப்படும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி வங்கியில் பிக்ஸட் டெப்பாசிட் திட்டத்திற்கான வட்டி வருமானத்தை இப்போது பார்க்கலாம்.
எஸ்பிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டம்
7 நாட்கள் - 45 நாட்கள் - 2.90 சதவீதம்
46 நாட்கள் - 179 நாட்கள் - 3.90 சதவீதம்
180 நாட்கள் - 210 நாட்கள் - 4.40 சதவீதம்
211 நாட்கள் - 365 நாட்கள் - 4.40 சதவீதம்
1 வருடம் - 2 வருடங்கள் - 4.90 சதவீதம்
2 வருடங்கள் - 3 வருடங்கள் - 5.10 சதவீதம்
3 வருடங்கள் - 5 வருடங்கள் - 5.30 சதவீதம்
5 வருடங்கள் - 10 வருடங்கள் - 5.40 சதவீதம்
மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதலான வட்டி விகித வருமானத்தைப் பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்குக் கொடுக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டம்
7 நாட்கள் - 29 நாட்கள் - 2.50 சதவீதம்
30 நாட்கள் - 90 நாட்கள் - 3 சதவீதம்
91 நாட்கள் - 184 நாட்கள் - 3.50 சதவீதம்
185 நாட்கள் - 365 நாட்கள் - 4.40 சதவீதம்
1 வருடம் - 1.5 வருடங்கள் - 4.90 சதவீதம்
2 வருடங்கள் 1 நாள் - 3 வருடங்கள் - 5.15 சதவீதம்
3 வருடங்கள் 1 நாள் - 5 வருடங்கள் - 5.35 சதவீதம்
5 வருடங்கள் 1 நாள் - 10 வருடங்கள் - 5.50 சதவீதம்
மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதலான வட்டி விகித வருமானத்தைப் பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்குக் கொடுக்கிறது.
ஹெச்டிஎப்சி வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டம்
7-14 நாட்கள் - 2.50 சதவீதம்
15-29 நாட்கள் - 2.50 சதவீதம்
30-45 நாட்கள் - 3 சதவீதம்
46-60 நாட்கள் - 3 சதவீதம்
61-90 நாட்கள் - 3 சதவீதம்
91 நாட்கள் - 6 மாதம் - 3.50 சதவீதம்
6 மாதம் - 9 மாதம் - 4.40 சதவீதம்
1 வருடம் 1 நாள் - 2 வருடங்கள் - 4.90 சதவீதம்
2 வருடங்கள் 1 நாள் - 3 வருடங்கள் - 5.15 சதவீதம்
3 வருடங்கள் 1 நாள் - 5 வருடங்கள் - 5.30 சதவீதம்
5 வருடங்கள் 1 நாள் - 10 வருடங்கள் - 5.50 சதவீதம்
மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவீதம் கூடுதலான வட்டி விகித வருமானத்தைப் பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்குக் கொடுக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications