வங்கிகளால் வழங்கப்படும் டெபிட் கார்டுகள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்காக மட்டுமல்ல. கிரெடிட் கார்டுகள் போலவே அதில் பல்வேறு வகையான சலுகைகளும் நன்மைகளும் அடங்கியுள்ளன. கிரெடிட் கார்டில் உள்ளதுபோல டெபிட் கார்டில் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது முதல், ரிவார்டு புள்ளிகளை பெறுவது, கேஷ் பேக்குகள் இன்னும் பிற நன்மைகள் வழங்கப்படுகிறது.
வங்கிகளிடையே பெருகி விட்ட போட்டியினால் டெபிட் கார்டுகளில் இப்போது அதிகளவு பணம் எடுக்கும் லிமிட், தினசரி ஷாப்பிங் லிமிட், இலவச ஏடிஎம் வித்டிராயல்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள லவுஞ்சுகளுக்கு அனுமதி போன்ற வசதிகள் உள்ளன. அத்துடன் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற செலவுகளை செய்வதற்கு சிறந்த கேஷ் பேக் சலுகைகளையும் வங்கிகள் தருகின்றன. இந்த நிலையில் இந்திய விமான நிலையங்களில் லவுஞ்ச் சேவையை இலவசமாக தரும் டாப் 10 சிறந்த டெபிட் கார்டுகள் பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

1. ஹெச்டிஎப்சி ஈஸிஷாப் பிளாட்டினம் டெபிட் கார்டு: இந்தக் கார்டுக்கு வருடாந்திர கட்டணம் கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விமான நிலையத்தில் உள்ள லவுஞ்சில் தங்குவதற்கு அனுமதி.
2. எஸ்பிஐ பிளாட்டினம் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு: இதற்கு வருடாந்திர கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படுகிறது. நெட்வொர்க்கைப் பொறுத்து விமானநிலைய லவுஞ்சில் தங்குவதற்கு அனுமதி உண்டு.
3. ஆக்ஸிஸ் பேங்க் பிரஸ்டிஜ் டெபிட் கார்டு: ஆக்ஸிஸ் பேங்க் பிரஸ்டிஜ் டெபிட் கார்டுக்கு வருடாந்திர கட்டணம் ரூ.500 ஆகும். இந்த கார்டு இருந்தால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உள்நாட்டு விமான லவுஞ்சில் தங்குவதற்கு அனுமதி உண்டு.
4. யெஸ் பிராஸ்பரிட்டி பிளாட்டினம் டெபிட் கார்டு: இதற்கு வருடாந்திர கட்டணம் ரூ.599 ஆகும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உள்நாட்டு விமானநிலைய லவுஞ்சில் தங்குவதற்கு அனுமதி உண்டு.
5. ஐசிஐசிஐ பேங்க் கோரல் பேவேவ் கான்டாக்ட்லெஸ் டெபிட் கார்டு: வருடாந்திர கட்டணம் ரூ.599 வசூலிக்கப்படும் ஐசிஐசிஐ பேங்க் கோரல் பேவேவ் கான்டாக்ட்லெஸ் டெபிட் கார்டு இருந்தால் ஒரு காலாண்டுக்கு 2 முறை உள்நாட்டு விமானநிலைய லவுஞ்சில் தங்குவதற்கு அனுமதி உண்டு.
6. ஆக்ஸிஸ் பிரையாரிட்டி டெபிட் கார்டு: வருடம் ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படும் ஆக்ஸிஸ் பிரையாரிட்டி டெபிட் கார்டு இருந்தால் குறிப்பிட்ட விமானநிலையத்தில் உள்ள லவுஞ்சில் தங்குவதற்கு அனுமதி உண்டு.
7. கோடக் பிரிவி லீக் சிக்னேச்சர் டெபிட் கார்டு: வருடாந்திர கட்டணமாக ரூ.750 வசூலிக்கப்படும் கோடக் பிரிவி லீக் சிக்னேச்சர் டெபிட் கார்டு இருந்தால் மூன்று மாதங்களுககு ஒரு முறை உள்நாட்டு விமானநிலையத்தில் உள்ள லவுஞ்சில் தங்குவதற்கு அனுமதி உண்டு.
8. ஐசிஐசிஐ பேங்க் சபைரோ டெபிட் கார்டு: வருடத்துக்கு ரூ.1499 கட்டணம் வசூலிக்கப்படும் ஐசிஐசிஐ பேங்க் சபைரோ டெபிட் கார்டு இருந்தால் மூன்று மாதங்களுக்கு 4 முறை உள்நாட்டு விமான நிலைய லவுஞ்சில் தங்குவதற்கு அனுமதி உண்டு.
9. ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் விசா சிக்னேச்சர் டெபிட் கார்டு: இந்த கார்டை வாங்கும்போது அதன் வருடாந்திர கட்டணம் தெரிவிக்கப்படும். இந்த கார்டு இருந்தால் காலாண்டுக்கு ஒருமுறை உள்நாட்டு விமான நிலைய லவுஞ்சில் தங்குவதற்கு அனுமதி உண்டு.
10. ஹெச்டிஎப்சி பேங்க் மில்லினியா டெபிட் கார்டு: வருடாந்திர கட்டணம் கிடையாது. இந்த கார்டு இருந்தால் வருடத்துக்கு நான்கு முறை உள்நாட்டு விமான நிலைய லவுஞ்சில் தங்குவதற்கு அனுமதி உண்டு.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications