சென்னை: அரசாங்க சேமிப்பு திட்டங்கள் பல்வேறு நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்டமும் அதன் கால அளவு, தகுதியானவர்கள், வைப்புத்தொகை, வட்டி விகிதங்கள் பொறுத்து மாறுபடும். அந்த வகையில் உங்களின் சேமிப்புக்கு உதவும் முதலீட்டு திட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.
சில சேமிப்புத் திட்டங்கள் குறிப்பாக வயதான மூத்த குடிமக்களுக்கு சாதகமாக உள்ளன, மற்றவை பெண்களின் நலனை மேம்படுத்த, விவசாயிகள் மற்றும் வேலையில்லா நபர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் சிறப்பு திட்டங்களும் உள்ளன. இந்தப் பதிவில் நாடு முழுவதும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் இருந்து பெறக்கூடிய 10 அரசாங்கத் திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்: அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தை நீங்கள் தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ தொடங்கலாம். குறைந்தது ரூ.1000 முதலீட்டில் இருந்து அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். மேலும் கூட்டுக்கணக்காக இருக்கும் பட்சத்தில் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
இந்த கணக்கின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். ஐந்து ஆண்டுகளுக்குள், முதலீடு செய்த தொகையை பெற நினைத்தால், ஒரு வருடத்திற்கு பிறகே பெற முடியும். ஆனால், மொத்த டெபாசிட் தொகையில் 2 சதவீதம் கழித்துக் கொண்ட பின்னர், தொகை உங்களுக்கு கொடுக்கப்படும். இதுவே, 3 ஆண்டுகளுக்குப் பிறகு செலுத்திய தொகையை பெற நினைத்தால் 1 சதவீதம் தொகை கழித்த, பின்னர் உங்களுக்கு பணம் கொடுக்கப்படும். இதன் வட்டி விகிதம் 2023 ஆம் ஆண்டில் 7.4 சதவீதம் ஆகும்.
தேசிய சேமிப்பு நேர வைப்பு கணக்கு: இந்தத் திட்டத்தினை தனி நபராகவோ அல்லது கூட்டணியாகவோ தொடங்கலாம். மேலும் 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் மூலம் இந்த கணக்கினைத் தொடங்க முடியும். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேல் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும். குறைந்தது, ரூ. 1000 முதல் இந்த திட்டத்தை பயன்படுத்தி சேமிக்கலாம்.
இதில் நீங்கள் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், என உங்களுக்கு ஏற்ற கால அளவை பயன்படுத்தி சேமிக்க முடியும். நீங்கள் தேர்ந்தெடுத்த கால அளவு 1 ஆண்டு என்றால் 6.8 % வட்டியைப் பெறுவீர்கள். 2 ஆண்டுகள் என்றால் 6.9% வட்டியைப் பெறுவீர்கள். 3 ஆண்டுகள் என்றால் 7.0 % வட்டியைப் பெறுவீர்கள். 5 ஆண்டுகள் என்றால் 7.5 சதவீத வட்டியை பெறுவீர்கள். இந்த கால அளவு முடிந்த பின்னரும் நீங்கள் சேமிப்பைத் தொடர வேண்டும் என்று நினைத்தால், கால அவகாசத்தை அதிகரித்துக் கொள்ளலாம். அதேபோல் முக்கியமாக கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் முடிக்க முடியாது. இந்த திட்டத்தினை தொடங்க நீங்கள் உங்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களை பார்வையிடலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: இந்த திட்டத்தினை நீங்கள் அஞ்சல் அலுவலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ சென்று தொடங்கலாம். குறைந்தபட்ச தொகையாக ரூ. 1000 முதல் அதிகபட்ச தொகையாக ரூ. 30 லட்சம் வரை, இந்த திட்டத்தினைப் பயன்படுத்தி சேமிக்க முடியும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தினை 60 வயது மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தொடங்கலாம்.
மேலும் 55 வயது முதல் 60 வயது வரை உள்ள தனிநபர்களும், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் கீழ் ஓய்வு பெற்றவர்களும், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் 8.2 சதவீத வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக ரூ. 30 லட்சம், நீங்கள் டெபாசிட் செய்தால், அதற்கான ஆண்டு வட்டியாக 2.46 லட்சம் கிடைக்கும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்: இந்தத் திட்டத்தினை நீங்கள் போஸ்ட் ஆபீஸ்களிலோ வங்கிகளிலோ தொடங்கலாம். இந்தத் திட்டத்திற்கு வருமான வரி 80C பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதனை தனி நபராகவோ அல்லது கூட்டுக்கணக்காகவோ தொடங்கலாம். 10 வயதான குழந்தைகள் முதல் இந்த திட்டத்தற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான வட்டி விகிதம் 7.7 சதவீதம் ஆகும்.
பொது வருங்கால வைப்பு நிதி: பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவருக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 15 ஆண்டுகள் லாக்கின் காலம் இருக்கிறது. அதாவது நீங்கள் உங்கள் கணக்கைத் தொடங்கி முதலீடு செய்ய தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகள் வரை, உங்கள் பணத்தை எடுக்க முடியாது. எல்லோருக்குமே லாக்கின் காலம் 15 ஆண்டுகள் தான். ஆனால் அதற்குள் பணம் எடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் ஐந்து ஆண்டுகள் கழித்த பின்னரே எடுக்க முடியும். இந்த திட்டத்தில் ரூ. 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே ஆண்டுக்கு ஒருவர் முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்ச தொகையாக ரூ. 500 முதல் அதிகபட்ச தொகையாக ரூ. 1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா: சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம், வட்டி இல்லாத, பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக சேமிப்புத் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு 10 வயது அல்லது அதற்கு குறைவான பெண்கள் விண்ணப்பிக்க முடியும். பத்து வயது உடைய பெண்கள் பெயரில் எஸ்எஸ்ஒய் கணக்கைத் தொடங்கலாம். அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் மூலம் கணக்கைத் தொடங்கலாம். இந்த Q 1 காலாண்டில், இதற்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது. இதனை நீங்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கிகளில் தொடங்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் என்பது இந்திய அரசின் பட்ஜெட் 2023 இல் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய சிறு சேமிப்புத் திட்டமாகும். இது பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் தொடங்கக்கூடிய திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் ரூ. 2 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும்.
கிசான் விகாஸ் பத்ரா: கிசான் விகாஸ் பத்ரா ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் ஆகும். இதில் பண இழப்பு ஏற்படும் அபாயங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் பாதுகாப்பான முதலீடாக இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் உங்களது தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தினை கூட்டுக்கணக்காகவோ, தனிநபராகவோ தொடங்க முடியும். குறைந்தபட்ச தொகையாக ரூ. 1000 ரூபாய் முதல் முதலீடு செய்ய முடியும்.
இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய எந்த வயது வரம்பும் இல்லை. இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு 7.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது உங்களுடைய தொகை 115 மாதங்களில் இரட்டிப்பாகும். எடுத்துக்காட்டாக நீங்கள் ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 4 லட்சம் திருப்பிக் கிடைக்கும்.
ரெக்கரிங் டெபாசிட்: ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் தொடர் வைப்பு நிதி ஒரு நல்ல முதலீட்டு திட்டம் ஆகும். இதன் மூலம் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு வட்டி விகித லாபத்துடன் சேர்த்து நீங்கள் பெற முடியும். இந்த திட்டத்தினை நீங்கள் எஸ்பிஐ வங்கியில் தொடங்கலாம். குறைந்தபட்ச முதலீடாக ரூ. 100 முதல், ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தைத் தொடங்க முடியும். இந்தத் திட்டத்தின் குறைந்தபட்ச கால அளவு 12 மாதங்கள், மேலும் நீங்கள் 120 மாதங்கள் வரை, ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தினை பயன்படுத்தி முதலீடு செய்ய முடியும்.
போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டம்: இந்த திட்டத்தைத் தனிநபராகவோ அல்லது கூட்டுக் கணக்காகவோ தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெயரில் சேமிப்பு கணக்கைத் தொடங்க முடியும். ஒவ்வொரு தனிநபரும், ஒரு சேமிப்பு கணக்கை மட்டுமே திறக்க முடியும். குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக ரூ. 500 முதல் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications