பர்சனல் லோன் வாங்க சிறந்த வங்கி எது.. எங்கு வட்டி குறைவு.. இதோ பட்டியல்..!
பொதுவாக வங்கிகளில் பல்வேறு வகையான கடன் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் வாங்கும் கடன் பர்சனல் லோன் எனும் தனி நபர் கடன் தான்.
ஏனெனில் எளிதில் இந்த கடனை பெற முடியும். மற்ற கடனை காட்டிலும் ஆவணங்கள் குறைவு. என பல்வேறு விதமான நல்ல விஷயங்கள் உள்ளன. எனினும் மற்ற கடன்களை காட்டிலும் இதில் வட்டி அதிகம்.
எனினும் இன்றைய காலக்கட்டத்தில் பலரும் வீட்டுக் கடன் என பல்வேறு வகையான கடனுக்கு பதிலாக இந்த தனி நபர் கடன்களையே நாடுவதை காண முடிகின்றது. அதெல்லாம் சரி பர்சனல் கொடுக்கும் டாப் 10 வங்கிகள் என்னென்ன வட்டி விகிதம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஹெச் டி எஃப் சி வங்கி
- ஹெச் டி எஃப் சி வங்கியினை பொறுத்த வரையில் வட்டி விகிதம் வருடத்திற்கு 10.50 - 21% வரையில் உள்ளது.
- குறைந்தபட்ச வயது - 21
- அதிகபட்ச வயது -- 60
- குறைந்தபட்ச வருமானம் - நிகர வருமானம் ரூ.15,000
- இதே ஹைத்ராபாத், சென்னை, புனே, அகமதாபாத், மும்பை, கொச்சின், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு எனில் 20,000 ரூபாய் வருமானம் இருக்க வேண்டும்.
- 12 - 60 மாதங்களில் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.
- 15 லட்சம் ரூபாய் வரையில் கடன் கிடைக்கும்.
எஸ்பிஐ
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவினை பொறுத்தவரையில் இரண்டு வகையான பர்சனல் லோன் உண்டு.
- இதி எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரெடிட் கடனிற்கு - 10.60% வட்டி ஆரம்பமாகிறது.
- வயது வரம்பு - 21 - 60 வயதாகும்.
- குறைந்தபட்ச வருமானம் - ரூ.15000
- கடன் வரம்பு - ரூ.25,000 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் பெறலாம்
- கால அவகாசம் - 60 மாதம் வரையில்
- எஸ்பிஐ பர்சனல் லோன் /ஓய்வூதியதாரர்களுக்கு
- இதில் வட்டி விகிதம் வருடத்திற்கு - 9.75% - 10.25%
- வயது வரம்பு - 21 - 76 வயது வரையில் வாங்கிக் கொள்ளலாலம்
- கடன் - ரூ.25,000 - 14 லட்சம் ரூபாய் வரை பெறலாம்.
- கால அவகாசம் - 84 மாதங்கள் வரையில் கட்டலாம்
பஞ்சாப் நேஷனல் வங்கி
- வட்டி விகிதம் வருடத்திற்கு - 8.7% - 14.25% வரையில்
- வயது வரம்பு - 21 - 60 வயது
- வருமானம் - வங்கி விதிமுறைகளை பொறுத்து
- கடன் - ரூ.50,000 - ரூ.10 லட்சம் அல்லது வருமானத்தில் 20 மடங்கு
ஆக்ஸிஸ் வங்கி
- ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு - 12% - 21%
- வயது வரம்பு - 21 - 60 வயது
- குறைந்தபட்ச வருமானம் - ரூ.15,000
- கடன் அளவு - ரூ.50,000 முதல் 15 லட்சம் ரூபாய் வரையில்
- கால அளவு - 12 - 60 மாதங்கள்
கனரா வங்கி
- கனரா வங்கி டீச்சர்ஸ் பர்சனல் லோன்:
- வட்டி விகிதம் வருடத்திற்கு - 12.40%
- வயது வரம்பு - 21 - 60 வயது
- குறைந்தபட்ச வருமானம் - ரூ.10,000
- கடன் அளவு - ரூ. 3 லட்சம் ரூபாய் அல்லது 10 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அது
- கால அளவு - 48 மாதங்கள் வரை
- கனரா வங்கி பட்ஜெட் பர்சனல் லோன்
- வட்டி விகிதம் வருடத்திற்கு - 11.30 - 12.30%
- வயது வரம்பு - வங்கியின் விருப்பப்படி
- குறைந்தபட்ச வருமானம் - வங்கியின் விருப்பப்படி
- கடன் அளவு - ரூ. 3 லட்சம் ரூபாய் அல்லது 6 மாதங்களுக்கான மொத்த சம்பளத்தில் எது குறைவோ அது
- கால அளவு - 60 மாதங்கள் வரை
மஹிந்திரா பைனான்ஸ்
- வட்டி விகிதம் வருடத்திற்கு - 26% வரையில்
- வயது வரம்பு - 21 - 58 வயது வரை
- கடன் அளவு - ரூ. 3 லட்சம் வரை
- கால அளவு - 3 வருடங்கள் வரை
ஐடிபிஐ வங்கி
- வட்டி விகிதம் வருடத்திற்கு - 8.15 - 10.9.% வரையில்
- வயது வரம்பு - 21 - 60 வயது வரை
- குறைந்தபட்ச வருமானம் - ரூ.15,000
- கடன் அளவு - ரூ. 3 லட்சம் வரை
- கால அளவு - 3 வருடங்கள் வரை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- வட்டி விகிதம் வருடத்திற்கு - 10.80%ல் ஆரம்பம்
- வயது வரம்பு - 21 - 60 வயது வரை
- குறைந்தபட்ச வருமானம் - ரூ.5,000-க்கு மேல்
- கடன் அளவு - ரூ. 5 லட்சம் வரை
- கால அளவு - 60 மாதம் வரை
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications