3 வருடத்தில் 9 லட்சம் சேமிக்கனுமா? இதோ உங்களுக்கான முத்தான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், ஒருவர் தங்கள் முதலீட்டு எல்லை, ரிஸ்க் எடுக்கக் கூடிய திறன் போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு முதலீட்டு போர்ட்ஃபோலியோவை பல் வகைப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும்.

மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், ஈக்விட்டி ஃபண்டுகள் பணவீக்கத்தை முறியடித்து அதிக வருமானம் தரும் திறனைக் கொண்டுள்ளன

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. எல்லா நாட்களும் பணத்தை எடுக்க முடியுமா? மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. எல்லா நாட்களும் பணத்தை எடுக்க முடியுமா?

குறைந்த காலத்தில் அதிக லாபம்

குறைந்த காலத்தில் அதிக லாபம்

மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் நீண்ட கால முதலீடுக்கு ஏற்றது என்றாலும், அதில் உள்ள சில திட்டங்கள் குறைந்த காலத்தில் அதிக லாபம் அளித்து வருகின்றன. அப்படி குறைந்த காலத்தில் பெரும் தொகையை லாபம் அளித்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் பற்றி இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

குவாண்ட் டாக்ஸ் பிளான் - டைரக்ட் பிளான்

குவாண்ட் டாக்ஸ் பிளான் - டைரக்ட் பிளான்

குவாண்ட் டாக்ஸ் பிளான் ஒரு நேரடித் திட்டம். இது 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. வேல்யூ சர்ச் மற்றும் மார்னிங்ஸ்டார் ஆகிய இரண்டாலும் இதற்கு 5-நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான பழைய நிதியானது, செப்டம்பர் 16-ம் தேதியன்று ரூ. 269.23 என்ஏவியைக் கொண்டுள்ளது. இந்த நிதியின் செலவு விகிதம் 0.57% ஆகும். மற்ற ELSS நிதிகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவு.

எவ்வளவு லாபம்?
 

எவ்வளவு லாபம்?

வேல்யூ சர்ச் தரவுகளின்படி, இந்த ஃபண்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 47 சதவீத லாபத்தை அளித்துள்ளது. அதாவது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1 லட்சம் ரூபாய் ஆரம்ப முதலீடு மற்றும் ரூ. 10,000 மாதாந்திர எஸ்ஐபியுடன் இந்த நிதியைத் தொடர்ந்திருந்தால், மூன்று ஆண்டுகளில் உங்கள் கையில் ரூ.10,05,531 வந்து இருக்கும்.

பாங்க் ஆப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு

பாங்க் ஆப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு

பாங்க் ஆப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு 2018-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி தொடங்கப்பட்டது. வேல்யூ சர்ச் இதற்கு 5 நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இந்த ஃபண்டின் என்ஏவி செப்டம்பர் 16-ம் தேதியன்று ரூ 29.01 ஆக இருந்தது. இருந்தது. இந்த நிதியின் செலவு விகிதம் 1.12% ஆகும். இந்த வகையில் உள்ள மற்ற ஃபண்டுகளை விட இது அதிகம்.

எவ்வளவு லாபம்?

எவ்வளவு லாபம்?

வேல்யூ சர்ச் தரவுகளின்படி, இந்த ஃபண்டு கடந்த 3 ஆண்டுகளில் 43.25 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபண்டில் யாரேனும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் ஆரம்ப முதலீடு மற்றும் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 எஸ்ஐபியும் செய்திருந்தால், இன்று இந்த ஃபண்ட் ரூ.9,45,874 கார்பஸ் செய்திருக்கும்.

கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் - டைரக்ட் திட்டம்

கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் - டைரக்ட் திட்டம்

கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் - டைரக்ட் திட்டம் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. வேல்யூ சர்ச் இதற்கு 5 நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இந்த ஃபண்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் உள்ளது. 2022, செப்டம்பர் 16- தேதியன்று ஃபண்டின் என்ஏவி ரூ 26.9 ஆக இருந்தது. அதே நேரத்தில், நிதியின் செலவு விகிதம் 0.47% ஆக இருந்தது, இது அதன் பிரிவில் உள்ள மற்ற நிதிகளை விட குறைவாக உள்ளது.

எவ்வளவு லாபம்?

எவ்வளவு லாபம்?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஃபண்டில் ரூ.1 லட்சம் ஆரம்ப முதலீடு செய்து, ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி வைத்திருந்தால், உங்கள் கார்பஸ் இப்போது ரூ.9,82,585 ஆக உயர்ந்திருக்கும்.

குறிப்பு

குறிப்பு

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் நம்பிக்கையான நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. இந்த கட்டுரையை படித்து முதலீடு செய்து அதனால் இழப்பு ஏற்பட்டால் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் அலல்து இதை எழுதியவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 3 Mutual Funds Given 9 Lakh Savings Corpus In 3 Years

Top 3 Mutual Funds Given 9 Lakh Savings Corpus In 3 Years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X