சென்னை: ஆண் குழந்தை அஞ்சல் அலுவலகத் திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும், நாடு முழுவதும் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில் இதற்காக பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்துடன் தங்கள் மகன்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பும் பெற்றோருக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் பிரகாசமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்கிறது.

இந்தியாவில் பல போஸ்ட் ஆபீஸ் ஆண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கென பிரத்யேக திட்டங்கள் உள்ளன. அந்தத் திட்டங்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம்: 2015ஆம் ஆண்டு தமிழக அரசு பொன்மகன் பொதுவைப்பு நிதித் திட்டத்தைத் தொடங்கியது. இது பொருளாதார ரீதியாக சிரமப்படும் இளைஞர்களுக்கு உதவுகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக அதிக வட்டி விகிதத்தில் அவர்களின் கல்விக்காக சேமிக்க முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் பெற்றோர்களுக்கு ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். ஒரே ஒரு ஆண் குழந்தை வைத்திருப்பவர் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய முடியும். மேலும் sc, st, mbc,obc போன்ற பிரிவினர் இதில் முதலீடு செய்ய முடியாது.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund): பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கு அறியப்பட்ட முதலீட்டுத் திட்டமாகும். 1968 ஆம் ஆண்டு மக்கள் நீண்ட காலத்திற்கு பணத்தைச் சேமிக்கவும், அவர்களின் நிதியை சிறப்பாக திட்டமிடவும் ஊக்குவிப்பதற்காக இந்த ஸ்கீம் தொடங்கப்பட்டது. மக்கள் தங்கள் பணத்தைச் சேமிக்க பாதுகாப்பான வழியை வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த நிதியின் கீழ் முதலீடு செய்யும் தொகையை 15 ஆண்டுகள் எடுக்க முடியாது. ஒருவேளை அதற்கிடையில் பணம் எடுக்க வேண்டும் என்றாலும் 5 ஆண்டுகள் பின்னரே நாம் எடுக்க முடியும்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Saving Certificate): இது சிறு மற்றும் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க உதவும் ஒரு சேமிப்புத் திட்டம். நீங்கள் இந்தியா முழுவதிலும் உள்ள தபால் நிலையங்களில் NSC களை பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் 100 ரூபாய் தொடங்கி எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்க முடியும். வருமான வரிச் சட்ட பிரிவு 80 சி கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும். இதில் ஆண்டுக்கு 1.5 லட்சம் முதலீடு செய்யப்படும் நிலையில், அதனை 80 சி-யின் கீழ் கணக்கு காண்பித்து வருமான வரி சலுகையை பெற முடியும்.
கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra): கிசான் விகாஸ் பத்ரா திட்டம், கிராமப்புறங்களில் உள்ள மக்களை நீண்ட காலத்திற்கு பணத்தை சேமிக்க ஊக்குவிக்கிறது. இதன் மூலம் உங்களின் பணத்தை வைத்து உத்திரவாதமான வட்டியைப் பெற முடியும். நீங்கள் அஞ்சல் அலுவலகங்களில் இருந்து KVP சான்றிதழ்களை வாங்கலாம். இந்தியாவில் உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் முதலீட்டாளர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவர்கள் மைனராக இருக்கும் பட்சத்தில் பெரியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்பு நிதி (Post office Recurring Deposit): தபால் அலுவலகம் தொடர் வைப்புத்தொகை (RD) என்பது இந்திய அஞ்சல் அமைப்பால் வழங்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது ஒவ்வொரு மாதமும் பணத்தை சேமிக்க உதவுகிறது. குறிப்பாக ஒரு ஆண் குழந்தைக்கு, நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்யலாம் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை, எனவே உங்களால் முடிந்தவரை சேமிக்கலாம். காலாண்டு கூட்டு வட்டியுடன் உங்கள் சேமிப்பு காலப்போக்கில் வளரும். இந்த சேமிப்பு திட்டத்தில் சேர்வதற்கு எந்த வித வயது வரம்பும் இல்லை. 10 வயதுக்கு உட்பட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் கணக்கினை தொடங்கலாம்.


Click it and Unblock the Notifications