நம்மில் பலருக்கு நிறுவனங்களுக்கு சென்று பணி புரிவதை விட சொந்தமாக ஒரு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வருவதுண்டு. இது போன்ற நபர்களுக்கு அதற்கேற்ற முதலீடு இருக்காது. அதிலும் வீட்டில் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் ஏதேனும் "வொர்க் ப்ரம் ஹோம் ஜாப்" கிடைக்கிறதா? என்று தேடிக் கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற நபர்களும் குறைந்த முதலீட்டைக் கொண்டு தொழில் தொடங்க முடியும். எனவே ரூ. 5000 முதலீட்டில் தொடங்கக்கூடிய அட்டகாசமான பிசினஸ் ஐடியாக்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஊறுகாய் தொழில்: இந்தியாவில் பலராலும் விரும்பப்படும் பிரபலமான சைடிஷ் என்றால் அது ஊறுகாய் தான். மாங்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய், தக்காளி ஊறுகாய் என ஊறுகாய்களில் பலவிதம் இருக்கின்றன. அசைவ பிரியர்களுக்கு மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய் போன்ற ஊறுகாய் வகைகளும் உள்ளன.

ஊறுகாய் தொழில் தொடங்குவதற்கு மூலப்பொருட்கள், அவற்றை விற்பனை செய்வதற்கு பாட்டில், மேலும் உங்கள் பெயரில் பிராண்டிங் செய்ய வேண்டுமானால் அதற்கு ஸ்டிக்கர் அடிப்பதற்கு செலவாகும். மற்றபடி பெரிய அளவிலான செலவுகள் இந்த தொழிலுக்கு கிடையாது.
ஆனால் நீங்கள் சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால் நிச்சயம் லாபகரமானதாக இந்தத் தொழில் அமையும். தற்போது இன்ஸ்டாகிராமில் பலரும் அசைவ ஊறுகாய்களை விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இந்தத் தொழிலை தொடங்கும் போது தரம் மற்றும் சுவை ஆகிய இரண்டிலும் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
வடை பஜ்ஜி கடை: இந்தியாவில் எந்த நேரமானாலும் சரி பிரபலமான சிற்றுண்டி வகைகளில் வடை பஜ்ஜி முக்கிய பங்கு வகிக்கிறது. காலை 11:00 மணி ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் டீக்கடையில் தான் இருப்பார்கள். அங்கு போடும் வடை, பஜ்ஜிக்கு அப்படி ஒரு டிமாண்ட்.
உங்களுக்கு வடை பஜ்ஜி போன்ற சிற்றுண்டி வகைகளை சிறப்பாக செய்ய தெரியும் என்றால் நீங்கள் ஒரு சின்ன தள்ளுவண்டி கடையை ஆரம்பிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் எண்ணெய், கடலை மாவு, வாழைக்காய், வெங்காயம், கத்தரிக்காய் போன்ற பொருட்களை தேவைப்படும்.
ஆனால் இந்த தொழிலில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால் பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் உபயோகிக்க கூடாது. நீங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இந்த தொழிலை செய்கிறீர்கள் என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்தால், இந்த தொழில் மூலம் அதிக லாபம் பெற முடியும்.
பானி பூரி தொழில்: இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் பானி பூரி, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில். ஒரு சிறிய கடை அல்லது தெருவோரத்தில் தொடங்கலாம். தேவையான பொருட்கள், பூரி மாவு, தண்ணீர், புதினா, வெங்காயம் போன்றவை மட்டுமே.
மினி டிபன் சென்டர்: காலையில் பணிக்கு செல்லும் குடும்பமாக இருந்தால், அவர்களுக்கு சமைப்பதற்கு சற்று கடினமாக இருக்கலாம். இது போன்ற நபர்கள் தொடர்ந்து கடையில் வாங்கி உண்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மினி டிபன் சென்டர் ஆரம்பிக்கலாம்.
வீட்டு முறையில் டிபன் செய்து விற்பனை செய்யலாம். முதலில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த தொழிலை தொடங்கலாம். அதன் பின் உங்கள் தொழில் விரிவடைவது உங்களுக்கு தென்பட்டால் தேவைப்படும் சாமான்களை வாங்கிக் கொள்ளலாம்.
சத்துமாவு கஞ்சி விற்பனை: பெரும்பாலான இடங்களில் காலை நேரத்தில் சத்துமாவு கஞ்சி, கொண்டைக் கடலை, முளைகட்டிய பயிர், முடக்கத்தான் தோசை, சத்துமாவு கஞ்சி கம்பங்கூழ் போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை பார்த்திருப்போம்.
என்னதான் ஃபாஸ்ட் ஃபுட் பலரைக் கவர்ந்திருந்தாலும், இன்னமும் ஆர்கானிக் உணவுப் பொருட்களை உண்ண விரும்பும் நபர்களும் உள்ளனர். எனவே இது போன்ற உணவுப் பொருட்களை வீட்டிலேயே தயார் செய்து சிறு சிறு சில்வர் பாக்ஸ்களில் அடைத்து குறிப்பிட்ட ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தை தேர்வு செய்து, அங்கு சென்று விற்பனை செய்யலாம்.
ஜிம்முக்கு செல்பவர்கள், வால்க்கிங் செல்பவர்கள் என காலையில் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் நபர்களுக்கு இதுபோன்ற கடைகள் பிடித்தமான தேர்வாக இருக்கும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications