இன்றைய தலைமுறையினர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. அதேசமயம், பங்குச் சந்தையில் ஒருவர் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. எஸ்ஐபி வழிமுறையில் பலரும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். எஸ்ஐபி என்பது குறிப்பிட்ட கால இடைவெளியில் (உதாரணமாக மாதந்தோறும்) குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்டு திட்டத்தில் முதலீடு செய்வதாகும்.
சிறு துளிகள் ஒரு பெரிய கடலை உருவாக்குவது போல், எஸ்ஐபி வழியான உங்கள் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் உங்களது பல்வேறு நிதி இலக்குகளை அடைய உதவும். அந்த வகையில், கடந்த கால செயல்திறன் அடிப்படையில், எஸ்ஐபி முதலீட்டுக்கு நல்ல லாபத்தை கொடுத்த பங்கு சார்ந்த டாப் 5 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை பார்ப்போம்.

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு என்பது ஸ்மால் கேப் பண்டு பிரிவில் மிகப்பெரிய முதலீட்டு திட்டமாகும். 2010 செப்டம்பரில் தொடங்கப்பட்டதிலிருந்து, நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு சந்தை கட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு, சிறந்த செயல்திறனின் ஈர்க்கக்கூடிய சாதனை பதிவை உருவாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்த ஃபண்டின் ஒரு வருட காலத்தில் ஆண்டு வருவாய் (நீட்டிக்கப்பட்ட உள் வருவாய் விகிதம் - XIRR) 23.6 சதவீதமாக வளர்ச்சி கண்டது.
10 ஆண்டுகள் இந்த ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி முதலீடு செய்து இருந்தால் உங்கள் மொத்த முதலீடு ரூ.12 லட்சமாக இருந்திருக்கும். இப்போது இது ரூ.41.8 லட்சமாக பெருகியிருக்கும்.
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்
202 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட், நியாயமான விலையில் கிடைக்கும் தரமான நடுத்தர நிறுவனங்களின் போர்ட்ஃபோலியோ மூலம் ஆல்பாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பண்டின் XIRR 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 10 ஆண்டுகள் இந்த ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி முதலீடு செய்து இருந்தால் உங்கள் மொத்த முதலீடு ரூ.12 லட்சமாக இருந்திருக்கும். இப்போது இது ரூ.40.4 லட்சமாக உயர்ந்திருக்கும்.
பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு
2013 மே மாதத்தில் பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டு, அனைத்து துறைகளிலும் கிடைக்கும் வாய்ப்புகளிலிருந்து பயனடைய நியாயமான விலையுள்ள பங்குகளின் அதிக சாத்தியமான போர்ட்ஃபோலியாவை உருவாக்குவதே இந்த ஃபண்டின் நோக்கமாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பண்டின் XIRR 20.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 10 ஆண்டுகள் இந்த ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி முதலீடு செய்து இருந்தால் உங்கள் மொத்த முதலீடு ரூ.12 லட்சமாக இருந்திருக்கும். இப்போது இது ரூ.35.3 லட்சமாக உயர்ந்திருக்கும்.
ஜேஎம் வேல்யூ ஃபண்டு
1997 ஜூனில் செக்டோரல் ஃபண்ட் என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 2018ல் இந்த திட்டத்தின் பெயர் ஜேஎம் வேல்யூ ஃபண்டு என மறுபெயரிடப்பட்டது. வலுவான அடிப்படைகள் இருந்தபோதிலும் சந்தையால் இன்னும் மதிப்பு அங்கீகரிக்கப்படாத பங்குகளில் முதலீடு செய்வதில் இந்த ஃபண்டு கவனம் செலுத்துகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பண்டின் XIRR 19.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 10 ஆண்டுகள் இந்த ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி முதலீடு செய்து இருந்தால் உங்கள் மொத்த முதலீடு ரூ.12 லட்சமாக இருந்திருக்கும். இப்போது இது ரூ.33.1 லட்சமாக உயர்ந்திருக்கும்.
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு
2007 ஆகஸ்டில் தொடங்கப்பட்ட இந்த ஃபண்டு, ஆரம்பத்தில் பெரிய மற்றும் நடுத்தர நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதை இலக்காக கொண்டது. ஆனால் பின்பு ஒழுங்குமுறை விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில், லார்ஜ் கேப் ஃபண்டாக மறுவகைப்படுத்தப்பட்டது.கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பண்டின் XIRR 17.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 10 ஆண்டுகள் இந்த ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி முதலீடு செய்து இருந்தால் உங்கள் மொத்த முதலீடு ரூ.12 லட்சமாக இருந்திருக்கும். இப்போது இது ரூ.30.1 லட்சமாக உயர்ந்திருக்கும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications