மூத்த குடிமக்கள் ஓய்வு காலத்தில் மாத வருமானம் ஈட்ட உதவும் முதல் 5 முதலீட்டு தேர்வுகள் பற்றி இங்கு விளக்கமாக பார்க்கலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS):
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சிறு சேமிப்புத் திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) முதலீடு செய்து வழக்கமான வட்டி வருமானத்தைப் பெறலாம். வட்டி காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படும். டெபாசிட் தேதியிலிருந்து மார்ச் 30/ஜூன்/30 செப்டம்பர்/31 டிசம்பர் வரை பொருந்தும்.

ஐந்து ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. ஆனால், ஒரு வருடம் முடிந்த பிறகு முன்கூட்டியே திரும்பப் பெறலாம். ஆனால் அபராதம் செலுத்திய பின்னரே. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1,000 மற்றும் 1,000 இன் மடங்குகளில், அதிகபட்ச வரம்பு ரூ.30 லட்சம்.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) கணக்கு:
POMIS என்பது மற்றொரு சிறு சேமிப்புத் திட்டமாகும். இது ஐந்து வருட முதலீட்டு காலத்தைக் கொண்டுள்ளது. அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒரு கணக்கில் ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சமாகவும் இருக்கும்.
திறக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதம் முடிந்தவுடன் மற்றும் முதிர்வு வரை வட்டி செலுத்தப்படும். POMIS இல் உள்ள முதலீடு எந்த வரிச் சலுகைக்கும் தகுதி பெறாது. வட்டிக்கு முழுமையாக வரி விதிக்கப்படும்.
வங்கி பிக்சட் டெபாசிட் (FD):
பெரும்பாலான வங்கிகள் வழக்கமாக மூத்த குடிமக்களுக்கு வெவ்வேறு காலங்களின் நிலையான வைப்புகளுக்கு வழங்கப்படும் வழக்கமான வட்டி விகிதங்களுக்கு மேல் 0.50 சதவீத கூடுதல் வட்டியை வழங்குகின்றன. நிலையான வைப்புத்தொகை வட்டி முதலீட்டாளர்களுக்கு வழக்கமான இடைவெளியில் செலுத்தப்படுகிறது - மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு.
இதை தாண்டி ரிஸ்க் அடிப்படையில் மியூச்சவல் பண்ட் திட்டங்களும், 100 சதவீதம் பாதுகாப்பான ஆர்பிஐ வழங்கும் சேமிப்பு பத்திரங்கள் உள்ளது.


Click it and Unblock the Notifications