பொதுவாக பல பொருளாதார நிபுர்ணர்கள், முதலீட்டு ஆலோசகர்கள் இது போன்று சொல்ல கேட்டிருப்போம். ஆனாலும் பலருக்கும் உள்ள ஒரு கேள்வி தூங்கும்போதும் வருமானம் (பாசிவ் வருமானம்) ஈட்ட முடியுமா? அது எப்படி? அது பாதுகாப்பாக இருக்குமா? அதனை எப்படி செய்வது? அதற்கான வழிகள் என்ன? என பல கேள்விகள் எழும்.
பாசிவ் இன்கம் அல்லது செயலற்ற வருமானம் என்றால் என்ன? உங்களது செயல்பாடு எதுவும் இல்லாமல் வரும் வருமானம் என்பது பாசிவ் வருமானமாக பார்க்கப்படுகிறது.
செயலற்ற வருமானம்
உதாரணத்திற்கு நீங்கள் உங்களின் வீடு அல்லது வர்த்தக ரீதியான கடைகள் மூலம் மாத மாதம் வாடகை பெறுவது. வங்கிகளில் செய்யக்கூடிய பிக்சட் டெபாசிட். இப்படி நீங்கள் தூங்கும்போதும் உங்களுக்காக சம்பாதிக்க கூடிய வருமானம் தரும் சிறந்த 5 முதலீடுகள் எது எது? வாருங்கள் பார்க்கலாம்.
வாடகை வருமானம்
உங்களுக்கு என இருக்கும் வீடு அல்லது நிலம், அலுவலகம் என பல வகையானவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் கிடைக்கும். எனினும் இந்த அம்சம் அனைவருக்கும் உகந்ததாக இருக்காது. பெரும்பாலும் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் இடங்கள், கார் என பலவற்றையும் வாடகைக்கு விடலாம். எனினும் இதற்காக தனியாக முதலீடு செய்து வருமானம் ஈட்டுவது என்பது சரியானதாக இருக்காது. ஏனெனில் ரியல் எஸ்டேட், கார் என்பதில் முதலீடுகளில் மிகப்பெரியளவில் முதலீடு இருக்கும். எல்லாவற்றிலும் மேலாக ரியல் எஸ்டேட் துரையின் வளர்ச்சியானது பெரியளவில் இருக்காது.
இன்ப்ளூயன்சர் (influencer)
சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோயர்கள் கொண்டவர்களை இன்ஃப்ளூயன்சர்கள் என்பார்கள். இந்த இன்ஃப்ளூயன்சர்கள் ஒரு பிராண்டை சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்துவதன் மூலம், அந்த பிராண்ட் மக்களை எளிதில் சென்றடையும்.
இன்ஃப்ளூயன்சர்களும் வருமானம் ஈட்டும் மார்க்கெட்டிங் டெக்னிக் தற்போது டிரெண்டாக உள்ளது. உதாரணத்திற்கு பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் . இவர்கள் இதில் அவர்களுடைய தனி கவனத்தினை யாரும் செலுத்துவதில்லை. மாறாக அவர்களுக்கு வருமானம் என்பது பல வகையிலும் உண்டு. இது அதிகம் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மியூச்சுவல் பண்ட்
மியூச்சுவல் பண்ட்டுகள் செயலற்ற வருமானத்திற்கு ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. இதில் ரிஸ்க்கும் உண்டு. எனினும் இதில் ஃபண்ட் மேனேஜர்கள் மூலம் நாம் முதலீடு செய்ய போகிறோம். சிறப்பான ஃபண்டுகளை தேர்வு செய்து நீண்டகாலத்திற்கு விட்டு விடும்போது அதில் வருமானம் கிடைக்கும்.ம் இதில்ம் டிவிடெண்ட் வருமானமும் உண்டு. இதேபோல பங்குகள் கூட வாங்கி வைக்கலாம். எனினும் இதில் ரிஸ்க் என்பது அதிகம்.
வங்கி பிக்ஸட் டெபாசிட்
வங்கி பிக்ஸட் டெபாசிட்கள் என்பது நிரந்த வருமானம் தரக்கூடிய ஒரு செயலற்ற வருமானமாகும். இதில் ஆரம்பத்தில் எத்தனை ஆண்டுகள்? எவ்வளவு முதலீடு என்பதை மட்டுமே நாம் தீர்மானிக்கிறோம். இதன் மூலம் நீங்கள் தூங்கிக் கொண்டு இருக்கும்போதும் வருமானம் பார்க்க முடியும். எனினும் மேற்கண்ட திட்டங்கள் அனைத்துமே பெரியளவில் வருமானம் கொடுக்காது. ஆக பெரியளவில் வருமானம் ஈட்ட நினைப்பவர்களுக்கு இது பொருந்தாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் கையில் இருக்கும் உபரியை முதலீடு செய்பவர்களுக்கு இது நல்ல திட்டங்கள் தான். உதாரணத்திற்கு ஓய்வு பெற்றவர்கள் கையில் இருக்கும் தொகையை என்ன செய்வது என தெரியாமல் இருப்பபவர்கள் இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications