சென்னை: மாத சம்பளக்காரர்களே.. என்றாவது ஒரு நாள், நீங்கள் வாங்கும் சம்பளம் போதவில்லை என்று நினைத்ததுண்டா? அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தப் பதிவு. நம்மில் பலருக்கு பலவகையான வருமானம் ஈட்டும் தொழில்கள் பற்றி தெரிந்திருக்கும். இருந்தும் அவற்றில் ஈடுபட நேரமின்மை மற்றும் பல காரணங்களால் யோசித்துக் கொண்டே இருக்கிறோம். இதுபோன்ற விஷயங்களை சற்று புறம் தள்ளி சுமார் அரை மணி நேரம் மட்டுமே வேலை செய்து வருமானம் பெறக்கூடிய தொழில்கள் நிறைய உள்ளன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஃப்ரீலான்ஸ் வேலைகள்: ஃப்ரீலான்ஸ் வேலைகளை, சில ஆன்லைன் இணையதளங்கள் வழங்கி வருகின்றன. Upwork, Fiverr போன்ற இணையதளங்கள் பிரபலமான வேலை வழங்கும் தளங்களாகும். இது போன்ற இணையதளங்களைப் பயன்படுத்தி பல்வேறு சேவைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுடன் உங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்து வருவதால், நீங்கள் உள் நுழையும் இணையதளம் அங்கீகரிக்கப்பட்டதா.. என்பதை ஒன்றுக்கு இருமுறையை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் உங்களுடைய பெயரை ரெஜிஸ்டர் செய்யுங்கள்.

வாடகை வருமானம்: ஏதாவது பெரிய அளவில் முதலீடு செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால், நீங்கள் வாடகை வீடுகளைப் பற்றிச் சிந்திக்கலாம். உங்களுடைய சொந்த இடத்தில் வாடகை வீடுகளைக் கட்டி விடும் பட்சத்தில் மாதாந்திர வருமானத்தை நீங்கள் பெற முடியும்.
ஆன்லைன் விற்பனை: உங்களுடைய தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்கும் ஆன்லைன் ஸ்டோரை தொடங்கலாம். சான்றாக Shopify மற்றும் Etsy போன்ற இ-காமர்ஸ் தளங்கள் உலக அளவில் உள்ள மக்களுக்கு உங்களுடைய பொருட்களை வெற்றிகரமாக கொண்டு சேர்க்கும்.
பங்குச்சந்தை முதலீடுகள்: காலப்போக்கில் உங்கள் செல்வத்தை அதிகரிக்க வேண்டுமானால், பல்வேறு போர்ட்ஃபோலியோக்களைக் கருத்தில் கொண்டு, அதை பற்றி தெரிந்து கொண்டு பின் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதால் உங்களுடைய நிதி ஆலோசகரை கலந்தாலோசித்து அதன் பிறகு முடிவெடுங்கள்.
டிஜிட்டல் தயாரிப்புகள்: இ-புக்ஸ் மற்றும் உங்களுடைய டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்கி விற்கலாம். இது குறைந்த செலவில் அதிக வருமானத்தை பெற்று தரக்கூடியதாக இருக்கிறது மற்றும் கல்வியாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். உங்களுடைய இ-புக்குகளை விற்பனை செய்வதற்காகவே பல தளங்கள் உள்ளன. அவற்றை நன்கு ஆராய்ந்து அதன் பிறகு உங்களுடைய இ-புத்தகங்களை அதில் விற்பனை செய்யலாம்.
அஃபிலியேட் மார்க்கெட்டிங்: அஃபிலியேட் மார்க்கெட்டிங் என்பது அமேசான் போன்ற இணையதளங்களில் உள்ள பொருட்களை, நீங்கள் அனுப்பும் லிங்குகளை வைத்து பிறர் வாங்கும் போது உங்களுக்கு குறிப்பிட்ட சதவீத தொகை வழங்கப்படுகிறது. இதனை தற்போது உள்ள இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பலர் பயன்படுத்துகின்றனர். அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி பேசி வீடியோ போடும்போது, அதை பார்க்கும் மக்கள் அவர்களிடம் கேட்கக்கூடும். அதற்கு பதில் அளிக்கும் வகையில் அவர்கள் லிங்குகளை அனுப்பும்போது அந்த லிங்க் வழியே பொருள்களை வாங்கினால், ஒரு குறிப்பிட்ட தொகை அமேசான் மூலம் அளிக்கப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications