பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. நம் நாட்டில் ஏராளமான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் நிர்வகிக்கும் சொத்து மதிப்புகள் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் பண்ட் நிறுவனம் எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனமாகும்.
எஸ்பிஐ மியூச்சுவல் பண்டின் டாப் 7 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 23 முதல் 28 சதவீதம் வரை வருமானம் கொடுத்துள்ளன. உதாரணமாக எஸ்பிஐ மியூச்சுவல் பண்டின் ஒரு திட்டத்தில் ஒரு முறை முதலீடாக ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் அது ரூ.2.85-3.48 லட்சமாக உயர்ந்திருக்கும். எஸ்பிஐ மியூச்சுவல் பண்டின் டாப் 7 மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பார்ப்போம்.

எஸ்பிஐ கான்டரா பண்ட்: இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் 5 ஆண்டுகளில் 28.35 சதவீத வருடாந்திர வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் ஒருவர் இந்த பண்டில் ரூ.1 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்து இருந்தால் அது தோரயமாக ரூ.3.48 லட்சமாக உயர்ந்து இருக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த பண்ட், பிஎஸ்இ 500 மொத்த வருவாய் குறியீட்டிற்கு (டிஆர்ஐ) அளவுகோலாக உள்ளது. இது 5 ஆண்டுகளில் 17.11 சதவீத வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதேசமயம், எஸ்பிஐ கான்டரா பண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.18 லட்சம் கிடைத்திருக்கும். இந்த காலகட்டத்தில் இது ஆண்டுக்கு 27.43 சதவீத எஸ்ஐபி வருமானமாகும்.
எஸ்பிஐ ஹெல்த்கேர் ஆப்பர்டுனிடிஸ் பண்ட்: இந்த பரஸ்பர நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகளில் 26.68 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்த பண்டில் ஒரு முறை ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது தோரயமாக ரூ.3.26 லட்சமாக மாறியிருக்கும். இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் பிஎஸ்இ ஹெல்த்கேர் டிஆர்ஐவுடன் ஒப்பிடப்படுகிறது. 5 ஆண்டுகளில் பிஎஸ்இ ஹெல்த்கேர் டிஆர்ஐ ஆண்டுக்கு 24.15 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.
எஸ்பிஐ ஹெல்த்கேர் ஆப்பர்டுனிடிஸ் பண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.11 லட்சம் கிடைத்திருக்கும். இது ஆண்டுக்கு 24.80 சதவீத வருமானமாகும்.
எஸ்பிஐ டெக்னாலஜி ஆப்பர்டுனிடிஸ் பண்ட்: இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் 5 ஆண்டுகளில் 26.72 சதவீத வருடாந்திர வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் ரூ.1 லட்சத்தை மொத்த முதலீடாக செய்திருந்தால் அது ரூ.3.21 லட்சமாக மாற்றி இருக்கும். இந்த மியூச்சுவல் பண்ட் பிஎஸ்இ டெக் டிஆர்ஐ உடன் ஒப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் பிஎஸ்இ டெக் டிஆர்ஐ ஆண்டுக்கு 20.62 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.
எஸ்பிஐ டெக்னாலஜி ஆப்பர்டுனிடிஸ் பண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.08 லட்சம் கிடைத்திருக்கும். இது 23.6 சதவீத ஆண்டு வருமானமாகும்.
எஸ்பிஐ மேக்னம் மிட்கேப் பண்ட்: 5 ஆண்டுகளில் இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 23.64 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. இந்த காலத்தில் ஒருவர் மொத்தமாக ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது ரூ.2.89 லட்சமாக உயர்ந்திருக்கும். இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம், நிப்டி மிட்கேப் 150 டிஆர்ஐ-க்கு இணையானதாக கருதப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இது ஆண்டுக்கு 23.68 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
எஸ்பிஐ மேக்னம் மிட்கேப் பண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.06 லட்சம் கிடைத்திருக்கும். இது 22.82 சதவீத ஆண்டு வருமானமாகும்.
எஸ்பிஐ இன்ப்ராஸ்ட்ரக்சர் பண்ட்: இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 23.51 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் ஒருவர் ரூ.1 லட்சம் ஒரு முறை முதலீடு செய்து இருந்தால் அது ரூ.2.87 லட்சமாக உயர்ந்திருக்கும். இந்த மியூச்சுவல் பண்ட், நிப்டி இன்ப்ரா டிஆர்ஐ-ஐ போன்றது. இது ஆண்டுதோறும் 21.05 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
எஸ்பிஐ இன்ப்ராஸ்ட்ரக்சர் பண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.13 லட்சம் கிடைத்திருக்கும். இது ஆண்டுக்கு 25.59 சதவீத வருமானமாகும்.
எஸ்பிஐ ஸ்மால்கேப் பண்ட்: இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 23.38 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் ஒருவர் ரூ.1 லட்சம் ஒரு முறை முதலீடு செய்து இருந்தால் அது ரூ.2.86 லட்சமாக உயர்ந்திருக்கும். இந்த மியூச்சுவல் பண்ட், பிஎஸ்இ 250 ஸ்மால்கேப் டிஆர்ஐ-ஐ போன்றது. இது ஆண்டுதோறும் 24.11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
எஸ்பிஐ ஸ்மால்கேப் பண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.02 லட்சம் கிடைத்திருக்கும். இது 21.23 சதவீத ஆண்டு வருமானமாகும்.
எஸ்பிஐ பிஎஸ்யு பண்ட்: இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 23.33 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் ஒருவர் ரூ.1 லட்சம் ஒரு முறை முதலீடு செய்து இருந்தால் அது ரூ.2.85 லட்சமாக உயர்ந்திருக்கும். இந்த மியூச்சுவல் பண்ட், பிஎஸ்இ பிஎஸ்யு டிஆர்ஐக்கு இணையானது. இது ஆண்டுதோறும் 25.74 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
எஸ்பிஐ பிஎஸ்யு பண்ட் திட்டத்தில் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1.24 லட்சம் கிடைத்திருக்கும். இது ஆண்டுக்கு 29.57 சதவீத வருமானமாகும்.
Story written by: Subramanian
More From GoodReturns

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..



Click it and Unblock the Notifications