வயதாவது பொதுவாக ஒரு குறைபாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஒரு மூத்த குடிமகனாக இருப்பது பல நிதிச் சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பை அள்ளி வழங்குகிறது. இந்த சலுகைகள் ஒருவர் ஓய்வு பெறும் காலத்தில் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கவும், நிதி சுமையை குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்தப் பதிவில் இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் நன்மைகளை பாப்போம்.
அதிக வட்டி விகிதங்கள்: பொதுவாக மூத்தக் குடிமக்களுக்கு பொதுமக்களை விட பிக்சட் டெபாசிட்கள், ரெக்கரிங் டெபாசிட்கள் மற்றும் சேவிங்ஸ் அக்கவுண்ட் போன்றவற்றிற்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.

உதாரணமாக மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட்களில் பொது வாடிக்கையாளர்களை விட 0.25 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த அதிகரித்த வட்டி விகிதங்களின் மூலம் மூத்த குடிமக்கள் தங்களுடைய சேமிப்பில் அதிக வருமானத்தை பெற முடியும். ஓய்வு காலத்தில் கூடுதல் வருமானத்தை வழங்கும் விதமாக இதுபோன்ற திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வருமான வரி சலுகைகள்: அதிகரித்த வரி விலக்குகள் மற்றும் குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் போன்ற பலவிதமான வரிச் சலுகைகளுக்கு மூத்த குடிமக்கள் தகுதியுடையவர்கள். தற்போது 60 முதல் 80 வயதுடைய தனிநபர்களுக்கு வரி விலக்கு வரம்பு 3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சமாகவும் உள்ளது. கூடுதலாக, அவர்கள் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் குறிப்பிட்ட திட்டங்களின் முதலீடுகளுக்கு ரூ.25,000-க்கு பதிலாக ரூ.50,000 என்ற அதிகமான டிடக்ஷன்களைப் பெற தகுதியுடையவர்கள்.
ஓய்வூதிய திட்டங்கள்: இந்தியாவில் மூத்த குடிமக்களுக்காக மட்டும் வடிவமைக்கப்பட்ட பல ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS). இந்த திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வருமானத்தை உறுதி செய்கின்றன. அவர்களின் தினசரி செலவுகளை நிர்வகிக்க உதவுகின்றன.
டோர் ஸ்டெப் வங்கி வசதிகள்: ரிசர்வ் வங்கி வழங்கிய உத்தரவுகளுக்கு இணங்க, வங்கிகள் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணம் அல்லது காசோலை பிக்-அப் மற்றும் டிமாண்ட் டிராப்ட் டிராப்-ஆஃப் சேவைகளை வழங்க வேண்டும்.
70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு KYC, பண பரிவர்த்தனை மற்றும் பணம் எடுத்தல் போன்ற அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த சில விதிகளையும் வகுத்துள்ளது. வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்வதன் மூலம், வங்கி உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய டோர் ஸ்டெப் வங்கி சேவைகளை ஏற்பாடு செய்யும்.
சுகாதார காப்பீடு: மூத்த குடிமக்கள் நோய்களுக்கு அதிகம் ஆளாகின்றனர் மற்றும் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. மூத்த குடிமக்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு சுகாதார காப்பீட்டு திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் விரிவான கவரேஜை உறுதி செய்து, மருத்துவ நெருக்கடிகளின் போது நிதி உதவியை வழங்குகின்றன.
பொது போக்குவரத்து: பல மாநில போக்குவரத்து துறைகள் பேருந்து அல்லது ரயில் சேவைகளைப் பயன்படுத்தும் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடி விகிதங்களை வழங்குகின்றன. இந்த தள்ளுபடி நிலையான கட்டணத்தில் 50% வரை இருக்கலாம், இது மூத்த குடிமக்களின் பயணச் செலவைக் குறைக்கிறது.
சொத்து வரியிலிருந்து விலக்கு: இந்தியாவில் உள்ள சில பிராந்தியங்கள் மூத்த குடிமக்களுக்கு சொத்து வரி விலக்குகளை வழங்குகின்றன. இது வயதான சொத்து வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் வழக்கமான சொத்து வரியைக் குறைக்க உதவும்.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications