மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், அந்தத் திட்டத்தின் கடந்த கால செயல்திறன் எப்படி இருந்தது? என்பதை உன்னிப்பாக ஆராய வேண்டும். அதே வகையான மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வருமானத்துடன் ஒப்பிடும்போது எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது? என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால் கடந்த கால வருமானத்தின் அடிப்படையில் எதிர்கால வருமானத்தை நிர்ணயிக்க முடியாது.
இருந்தாலும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதற்கான அறிகுறியை கண்டிப்பாக தெரிந்து கொள்ள முடியும். இந்தப் பதிவில் கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக வருடாந்திர வருமானம் வழங்கிய 8 வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பற்றி தான் பார்க்கவுள்ளோம்.

வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?: வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட் என்பது விலை குறைவாக விற்பனை செய்யும் பங்குகளை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்வது. இதுபோன்ற பங்குகளில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் இனிவரும் காலங்களில் அவற்றின் மதிப்பு உயரும் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்வார்கள். உதாரணமாக ஒரு நிறுவனம் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். லாபமும் அதிகமாக இருந்து வருகிறது.
ஆனால் வேறு சில காரணங்களால் அவற்றின் விலை குறைவாக இருக்கும் போது அந்த நிறுவன பங்குகள் வேல்யூ மியூச்சுவல் ஃபண்டாகக் கருதப்படும். இது போன்ற பங்குகளை வாங்கி வைப்பது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும். ஒரு வேலை சந்தை ஏற்ற இறக்கங்கள் அதிக அளவில் இருந்தாலு, வேல்யூ மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்கி வைத்தால் அவ்வளவாக முதலீடாளர்களுக்கு தாக்கம் இருக்காது.
2025-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ. 1.83 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதத்திற்கு அதிகமாக வருமான வழங்கிய சில வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பார்ப்போம்.
மதிப்பு நிதிகள் - 5 ஆண்டு வருமானம் (%)
வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட்:
| வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட் | 5 ஆண்டு வருமானம் |
|---|---|
| ஆதித்ய பிர்லா சன் லைஃப் பியூர் வேல்யூ ஃபண்ட் | 25.89 % |
| பந்தன் ஸ்டெர்லிங் வேல்யூ ஃபண்ட் | 32.79 % |
| HDFC வேல்யூ ஃபண்ட் | 25.50 % |
| HSBC வேல்யூ ஃபண்ட் | 28.76 % |
| ICICI ப்ரு வேல்யூ டிஸ்கவரி | 29.78 % |
| JM வேல்யூ ஃபண்ட் | 28.02 % |
| நிப்பான் இந்தியா வேல்யூ ஃபண்ட் | 29.03 % |
| டெம்பிள்டன் இந்தியா வேல்யூ ஃபண்ட் | 30.41 % |
கடந்த கால வருமானம் எதிர்காலத்திலும் அதே போல வருமானம் தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் எதிர்காலத்தில் எப்படி செயல்படும் என்பதற்கான அறிகுறிகளை நாம் தெரிந்து கொள்ள முடியும். எனவே முதலீட்டாளர்கள் வரலாற்று வருமானத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்யாமல் அந்த ஃபண்டின் முழு செயல் திறனையும் ஆராய வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு புதிது என்றால் கண்டிப்பாக ஒரு நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. எந்த ஒரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பற்றி சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications