பண்டிகை காலம் தொடங்கிவிட்டது என்பதை சில வங்கிகளும், நிறுவனங்களுமே உணர்த்தி வருகின்றன, ஏனெனில் விழாகால பருவத்தில் தேவையை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக வங்கிகள் வீட்டுக் கடன், வாகனக் கடன், கார் கடன் மீதான வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றனர். இதன்மூலம் குறைவான வட்டியில் வீட்டுக் கடன், கார் கடன் உள்ளிட்டவற்றை பெறமுடியும் எனலாம்.
ஆக இது இந்த விழாக்கால பருவத்தில் சற்றே கூடுதல் சந்தோஷத்தினை அளிக்கலாம் என்றும் கூறலாம். ஏனெனில் கடந்த இருவருடங்களாக அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆக கடந்தண்டினை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தேவை அதிகரிக்கலாம் என்று, வாகன நிறுவனங்களும் வங்கிகளும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இது தான் சரியான நேரம்
இந்த நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்களும் விற்பனையை ஊக்குவிக்க, சில சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. சில வங்கிகள் கடனுக்காக வங்கிகளுக்கு சென்று அலையாமல், இருந்த இடத்தில் இருந்தே கடன் பெற்றுக் கொள்ள போதுமான வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலம் பல சலுகைகளுடன், குறைந்த வட்டியில் கார் வாங்க இது சரியனான நேரம் எனலாம்.
குறைவான வட்டி விகிதம்
வட்டி விகிதம் என்பது மிகக் குறைந்த அளவில் உள்ள நிலையில், இதன் மூலம் இனி மாதத்தவணை தொகையை குறையலாம். இதன் மூலம் பெரியளவிலான தொகையை மொத்தமாக பார்க்கும்போது சேமிக்க முடியும். இந்த நிலையில் தான் கார் வாங்க நினைக்கும் பலருக்கும் இது சரியான நேரம் எனலாம்
வட்டி மாறலாம்
கீழ்கண்ட வட்டி விகிதங்கள் வருடத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 10 லட்சம் ரூபாய் கடன் என கணக்கில் கொள்ளப்பட்டு தவணைத் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் உங்களது கிரெடிட் ஸ்கோர், கடனை பொறுத்து மாறுபடலாம். மற்ற கட்டணங்கள் எதுவும் இதில் சேர்க்கப்படவில்லை. கடனுக்கான கால அவகாசம் 5 வருடங்களாக கணக்கிடப்பட்டுள்ளது.
Array
பஞ்சாப் & சிந்த் வங்கி 6.80%ல் வட்டி வீதம் வழங்கி வருகின்றது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,707 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 7%ள் இருந்து வட்டி விகிதம் ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,801 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
Array
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 7.05% முதல் வட்டி விகிதம் ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,825 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் மற்ற கட்டணங்கள் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம்
இந்தியன் வங்கியில் வட்டி விகிதம் 7.15%ல் இருந்து ஆரம்பிக்கிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,872 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் மற்ற கட்டணங்கள் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம்.
Array
எஸ்பிஐ வங்கியில் வட்டி விகிதம் 7.20%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,896 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் மற்ற கட்டணங்கள் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம்.
சென்ட்ரல் பேங்கில் வட்டி விகிதம் 7.25%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,919 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் மற்ற கட்டணங்கள் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம்.
Array
யூனியன் வங்கியில் வட்டி விகிதம் 7.25%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,919 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் மற்ற கட்டணங்கள் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம்.
கனரா வங்கியில் வட்டி விகிதம் 7.30%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,943 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் மற்ற கட்டணங்கள் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம்.
Array
பேங்க் ஆஃப் இந்தியாவில் வட்டி விகிதம் 7.35%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,967 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் மற்ற கட்டணங்கள் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம்.
இதே ஐடிபிஐ வங்கியில் வட்டி விகிதம் 7.35%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,967 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் மற்ற கட்டணங்கள் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம்.
Array
பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் வட்டி விகிதம் 7.40%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 19,991 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் மற்ற கட்டணங்கள் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம்.
ஆக்சிஸ் வங்கியில் வட்டி விகிதம் 7.45%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 20,014 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதனுடன் மற்ற கட்டணங்கள் சேர்க்கும்போது இன்னும் அதிகரிக்கலாம்.
Array
ஐஓபி வங்கியில் வட்டி விகிதம் 7.55%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 20,062 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
யூகோ வங்கியில் வட்டி விகிதம் 7.70%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 20,133 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
கரூர் வைஸ்யா வங்கியில் வட்டி விகிதம் 7.80%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 20,181 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
Array
ஐசிஐசிஐ வங்கியில் வட்டி விகிதம் 7.90%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 20,229 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
ஜே&கே வங்கியில் வட்டி விகிதம் 7.95%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 20,252 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் வட்டி விகிதம் 7.95%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 20,252 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
Array
கர்நாடகா வங்கியில் வட்டி விகிதம் 8.05%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 20,300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
ஃபெடரல் வங்கியில் வட்டி விகிதம் 8.50%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 20,519 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
சவுத் இந்தியன் வங்கி வங்கியில் வட்டி விகிதம் 9.05%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 20,783 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
யெஸ் வங்கி வங்கியில் வட்டி விகிதம் 9.57%ல் இருந்து ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் மாத தவணையாக 21,036 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
*மேற்கண்ட இந்த விகிதங்கள் அக்டோபர் 5 அன்று வங்கிகளின் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வட்டி விகிதங்கள் ஆரம்ப விகிதம் மட்டுமே. உங்களது கடன் பரிவர்த்தனைகள், மற்ற விவரங்களை பொறுத்து இந்த விகிதம் மாறுபடும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications