இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்களால் இயன்ற பணத்தை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை சௌகரியமாக பார்க்கின்றனர்.
மியூச்சுவல் ஃபண்டுகள்: சரியான முறையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்தால் நிச்சயம் ஆண்டுக்கு 12%க்கும் மேல் லாபம் பார்க்க முடியும். இந்தியாவில் பணவீக்க விகிதம் 6% என இருப்பதால் அதற்கு மேல் லாபம் தரக்கூடிய திட்டங்கள் தான் உண்மையான லாபத்தை அளிப்பவை. அந்த வகையில் கடந்த மூன்று நிதியாண்டுகளில், 15%க்கும் அதிகமான வருடாந்திர வருமானத்தை தந்த ஐந்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் என்னென்ன என்பதை நாம் விரிவாக பார்க்கலாம்.

15%க்கும் அதிக லாபம்: எக்னாமிக் டைம்ஸ் சந்தையில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த சுமார் 243 ஃபண்டுகளை பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் ஆண்டுக்கு 15%க்கும் அதிகமான வருடாந்திர வருமானத்தை தந்த ஐந்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
1. ஹெச்டிஎஃப்சி ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் (hdfc flexi cap fund) : கடந்த மூன்று ஆண்டுகளில் வலுவான வருமானத்தை அளித்துள்ளது. 2022இல் 18.29%, 2023இல் 30.60%, மற்றும் 2024இல் 23.48% வருமானத்தை ஈட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரையில், இது 7.45% வருமானத்தை அளித்துள்ளது.
2. ஹெச்டிஎஃப்சி ஃபோகஸ்டு ஃபண்ட் (hdfc focused fund) : இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் 2022இல் 18.29%, 2023இல் 29.58% மற்றும் 2024இல் 23.97% என வருடாந்திர வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 7.65% வருமானத்தை ஈட்டியுள்ளது.
3. குவாண்ட் மிட்-கேப் மியூச்சுவல் ஃபண்ட் (quant mid cap fund) : கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான வருமானத்தைப் பதிவு செய்துள்ளது.குவாண்ட் மிட் கேப் ஃபண்ட், 2022இல் 17.13%, 2023இல் 34.61% மற்றும் 2024இல் 18.94% வருமானத்தை அளித்தது. ஆனால், இந்த ஆண்டு 5.49% சரிந்துள்ளது.
4. குவாண்ட் வேல்யூ ஃபண்ட் (quant value fund) : குவாண்டின் மிட் கேப் ஃபண்டை போலவே இதுவும் நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு ஈட்டி தந்துள்ளது. 2022இல் 15.05%, 2023இல் 36.85% மற்றும் 2024இல் 24.07% வருமானத்தை அளித்தது. 2025இல் இதுவரையில் 3.66% சரிந்துள்ளது.
5. டெம்பிள்டன் இந்தியா வேல்யூ ஃபண்ட் (templeton india value fund) : கடந்த மூன்று ஆண்டுகளில் 15%க்கும் அதிகமான வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. 2022இல் 15.46%, 2023இல் 33.72% மற்றும் 2024இல் 15.19% வருமானத்தை ஈட்டியது. 2025இல் இதுவரை 2.20% வருமானத்தை அளித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications