சென்னை: இன்றைய தலைமுறையினர் முதலீடு குறித்த விரிவான விவரங்களை பெறுவதில் ஆர்வமாக இருக்கின்றனர். வளர்ந்து வரும் அவர்களுக்கு எந்தெந்த இடத்தில் தனித்துவமான வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றனர். அதற்கு உதவும் வகையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக SIP முதலீடுகள் என்றால் அனைத்து வயதான முதலீட்டாளர்களுக்கும் ஒரே குஷி தான். ஏனெனில், இதில் சிறிய தொகையிலிருந்து நாம் முதலீடு செய்ய முடியும். SIP முதலீடுகளைத் தேர்வு செய்வதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
சமீப காலமாக SIP-கள் ஒரு முக்கிய தேர்வாகிவிட்டன. குறிப்பாக எளிமையான முதலீடு காரணமாக இந்தத் திட்டங்கள் அனைத்து இளைஞர்ககளையும் ஈர்க்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மக்களின் பிசியான வாழ்க்கையில் SIP-கள் சிக்கல் அற்ற முதலீட்டு முறையாக இருக்கிறது. SIP முதலீடுகள் ஏன் சிறந்த தேர்வாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அணுகக்கூடிய எளிதான வழி: ஒரு SIP-யை தொடங்குவதற்கு கணிசமான வருமானம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் ஒரு மாணவராக இருந்தாலும் சரி அல்லது இளம் தொழில் நிபுணராக இருந்தாலும் சரி, ரூ. 100 ரூபாயிலிருந்து நீங்கள் SIP முதலீடுகளை செய்யலாம். உங்கள் விருப்பங்களுக்கு ஏற்பப், பிறகு தொகையை அதிகரித்துக் கொள்ளலாம்.
நேரம் குறைவு: SIP-கள் ஒரு சிறந்த முதலீட்டு தேர்வாக இருக்கின்றன. முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை காலப்போக்கில் அதிகரிக்கலாம். அதிலும் ஸ்டெப் அப் SIP-கள் நல்ல வருமான வாய்ப்பை வழங்குகின்றன. உதாரணமாக ஒரு இளம் நபர் ரூ.2000 முதலீட்டில் தொடங்கி ஆண்டுதோறும் 10 சதவீத முதலீட்டை அதிகரிக்கும்போது, முதிர்வு காலத்தில் அதிக அளவு வருமானத்தைப் பெற முடியும். SIP-கள் கூட்டு வட்டி முறையை பயன்படுத்துவதால், நீங்கள் சம்பாதித்த பணம் மற்றும் உங்களுடைய வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். நீண்ட நேரம் அமர்ந்து சந்தை ஏற்ற இறக்கங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பயம் உங்களுக்கு சற்று குறைவு தான்.
முதலீட்டு காலம்: SIP-களில், நீங்கள் தேர்ந்தெடுத்த காலம் மற்றும் தேதிக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். நீங்கள் தினசரியாக, வாராந்திரமாக, மாதாந்திரமாக, காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை என எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். ஆனால் மாதாந்திர SIP-கள் மிகவும் பிரபலமான முதலீட்டு வகையாக உள்ளது.
குறைவான தொகை: மற்ற முதலீட்டு திட்டங்களைப் போல இல்லாமல் குறைவான தொகையிலிருந்து உங்களால் முதலீடு செய்ய முடியும். உதாரணமாக ரூ. 100 முதல் SIP திட்டங்கள் உள்ளது. இதுபோன்ற SIP திட்டங்களைத் தேர்ந்தெடுத்து காலப்போக்கில் உங்களுடைய முதலீட்டு தொகையை, நீங்கள் அதிகரிக்கலாம். இதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications