இந்தியாவில் சிறந்த எரிபொருள் கிரெடிட் கார்டுகள்.. உங்களுக்கு பொருந்துமா பாருங்க..!

நீங்கள் அதிக பயணம் செய்பவரா? அப்படின்னா? உங்களுக்கு நிச்சயம் இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் நாம் அதிக தூரம் பயணம் செய்யும்போது நமது செலவுகளில் மிகப்பெரியதாக இருப்பது எரிபொருள் செலவினங்கள் தான். ஆனால் இதன் மூலமும் கொஞ்சம் மிச்சப்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? எரிபொருள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் நிச்சயம் உங்களால் கொஞ்சமேனும் மிச்சப்படுத்த முடியும்.

இது உங்களது சேமிப்பினை மிச்சப்படுத்த உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சிறந்த கிரெடிட் கார்டுகள்

சிறந்த கிரெடிட் கார்டுகள்

அந்த வகையில் இன்று நாம் ஐந்து வகையான கிரெடிட் கார்டுகளை பார்க்கவிருக்கிறோம். அந்த வகையில் முதலில் பார்க்கவிருப்பது Standard chartered super value titanium credit card, இரண்டாவது இந்தியன் ஆயில் சிட்டிபேங்க் பிளாட்டினம் கிரெடிட் கார்டு, மூன்றாவது பிபிசிஎல் எஸ்பிஐ கார்டு, அடுத்தது ஐசிஐசிஐ ஹெஸ்பிசிஎல் கோரல் கிரெடிட் கார்டு, இந்தியன் ஆயில் ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு சூப்பர் வேலியூ டைட்டானியம் கார்டு

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு சூப்பர் வேலியூ டைட்டானியம் கார்டு

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு சூப்பர் வேலியூ டைட்டானியம் கிரெடிட் கார்டினை (Standard chartered super value titanium credit card) பெற, குறைந்தபட்சம் மாதம் ஒரு வாடிக்கையாளர் 55,000 ரூபாய் சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும். இது ஒரு காண்டக்லெஸ் கார்டு என்பதால் மிக விரைவாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த கார்டுக்கு வருட கட்டணமாக 750 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. வருடத்திற்கு நீங்கள் 90,000க்கும் மேல் செலவிட்டால், உங்களுக்கு இந்த கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வளவு மிச்சப்படுத்த முடியுமா?

இவ்வளவு மிச்சப்படுத்த முடியுமா?

இந்த ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு கார்டினை கார்டு உரிமையாளர்கள் பயன்படுத்தும் போது 5% கேஸ்பேக் சலுகையினை பெற முடியும். இதன் மூலம் மாதம் 200 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும். அதோடு ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் கேஸ்பேக் சலுகையாக பெற முடியும். 2000 ரூபாய் அல்லது அதற்கு குறைவான ஒவ்வொரு பரிவர்த்தனையும் இதற்கு தகுதியுடையதாக இருக்கும். 150 ரூபாய் நீங்கள் செலவிட்டால், உங்களுக்கு 1 ரீவர்டு பாயிண்ட் கிடைக்கும். மொத்தத்தில் இந்த கார்டு மூலம் உங்களுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

இந்தியன் ஆயில் சிட்டி பேங்க் பிளாட்டினம் கார்டு

இந்தியன் ஆயில் சிட்டி பேங்க் பிளாட்டினம் கார்டு

இந்திய ஆயில்-சிட்டி பேங்க் பிளாட்டினம் கார்டு, சிட்டி பேங்கின் ஒரு பிரத்தியேக அட்டையாகும். இதைச் சிட்டி பேங்க் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்குகளில் உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் உண்டு. இதன் மூலம் 71 லிட்டர் பெட்ரோல் வரை இலவசமாக பெற முடியும். இந்த கார்டுக்கு 1000 ரூபாய் + வரி விதிக்கப்படும்.

என்ன சலுகை?

என்ன சலுகை?

இந்தியன் ஆயில் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டில் வாடிக்கையாளர்கள் 30,000 ரூபாய்க்கு மேல் எரிபொருளுக்கு செலுத்தும் போது, இந்த கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்த கார்டினை பெற குறைந்தபட்சம் 25000 ரூபாய் வருமானம் பெற வேண்டும்.
ரூ.150 மதிப்புடைய எரிபொருளை நீங்கள் உபயோகிக்கும் போது, உங்களுக்கு 4 டர்போ புள்ளிகள் கிடைக்கும். இது தவிர இன்னும் பல சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

பிபிசிஎல் எஸ்பிஐ கார்டு

பிபிசிஎல் எஸ்பிஐ கார்டு

பிபிசிஎல் எஸ்பிஐ கார்டினை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்குகிறது. இந்த கார்டினை பெறும் போது வெல்கம் ஆஃபராக 500 ரூபாய் மதிப்பிலான 2000 போனஸ் பாயிண்டுகள் கிடைக்கிறது. இந்த கார்டிற்கு ஒரு முறை கட்டணமாக 499 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இந்த கார்டினை பாரத் பெட்ரோலியத்தில் நீங்கள் பயன்படுத்தும்போது இந்த சலுகைகளை பெற முடியும்.

இந்த கார்டில் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 4.25% மதிப்பு மற்றும் 13 மடங்கு ரீவார்டு பாயிண்டுகளை பெறுவீர்கள். நீங்கள் ஒரு மாதத்திற்கு 100 ரூபாய் கட்டணகள் தள்ளுபடியினை பெறலாம். இந்த கார்டின் மூலம் வருடத்திற்கு 70 லிட்டர் பெட்ரோலினை இலவசமாக பெற முடியும்.

 

ஐசிஐசிஐ ஹெச்பிசிஎல் கோரல் கிரெடிட் கார்டு

ஐசிஐசிஐ ஹெச்பிசிஎல் கோரல் கிரெடிட் கார்டு

ஐசிஐசிஐ வங்கியின் ஹெச்பிசிஎல் கோரல் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி, ஹெச்பி பங்குகளில் பயன்படுத்தும் போது பல சலுகைகளை பெற முடியும். இந்த கார்டுக்கு வருட கட்டணமாக 199 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது.

இந்த கார்டுக்கு முதல் வருடம் கட்டணம் இல்லை. இரண்டாவது வருடத்தில் இருந்து கட்டணம் உண்டு. 500 ரூபாய் மதிப்பிலான பெட்ரோல் உபயோகப்படுத்தும் போது, 2000 payback புள்ளிகளை பெற முடியும்.

 

இந்தியன் ஆயில் ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு

இந்தியன் ஆயில் ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு

இந்தியன் ஆயில் ஹெச்டிஎஃப்சி கிரெடிட் கார்டினை பயன்படுத்தும் போது வருடத்திற்கு 50 லிட்டர் வரை மிச்சப்படுத்த முடியும். இதற்கு கட்டணமாக 500 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் உண்டு. இந்த கார்டினை பயன்படுத்துபவ்ர் இந்தியன் ஆயிலில் இந்த கார்டினை உபயோகப்படுத்தும் போது, 5% வரை சேமிக்கலாம்.
மாதத்திற்கு 250 பாயிண்டுகள் வரை சேமிக்கலாம். நீங்கள் 150 ரூபாய் செலவழிக்கும்போது 1 பாயிண்டினை பெறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+