உங்கள் பணத்தினை முதலீடு செய்ய வேண்டிய சிறந்த வழிகள்..எது சிறந்த முதலீடு..! [பாகம் -1]

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீடு என்றால் நமக்கு தெரிந்தவைகளில் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் தான். ஆனால் அதையும் தாண்டி பல முதலீடுகள் உள்ளது. அதை பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம்.

பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களது பணத்தினை இழக்கும் ஆபத்து இல்லாமல், முடிந்த மட்டில் விரைவாக வருவாயை பெறும் வகையில் முதலீடுகளைச் செய்ய விரும்புகிறார்கள். பலரும் எப்போதுமே முதலீட்டுத் திட்டங்களைத் தேடிக் கொண்டிருப்பதற்கான காரணமும் இது தான். சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் தங்கள் பணத்தை இரடிப்பாக்கக்கூடிய அல்லது குறைவான ஆபத்து இல்லாமல் வருமானம் பெறக் கூடிய திட்டங்களை தேடி செல்கின்றனர்.

இருப்பினும் குறைந்த ரிஸ்குடன் அதிகளவிலான வருமானம் கொடுக்க கூடிய முதலீடுகள் குறைவு தான். மேலும் நீங்கள் முதலீடு திட்டத்தினை தேர்தெடுக்கும் போது, அதன் ரிஸ்கினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இருவகையான முதலீடுகள்
 

இருவகையான முதலீடுகள்

இரண்டு வகையான முதலீடுகள் உள்ளன. ஒன்று நிதி வகையில் செய்யும் முதலீடு, மற்றொன்று நிதி அல்லாத முதலீடு. நிதி முதலீடு என்பது பங்குகள், மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்கள்,

நிதி அல்லாத முதலீடு என்பது தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட், இதிலே நிதி முதலீடுகளில் நிலையான வருமானம் தரக்கூடிய முதலீடுகளும் உண்டு. அது பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் வங்கி வைப்பு நிதி ஆகும்.

பங்கு சந்தையில் முதலீடு

பங்கு சந்தையில் முதலீடு

இதில் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்வது. இதில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம். ஏற்றத் தாழ்வுகள் அதிகம். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதம் இல்லை. இதில் உள்ள ரிஸ்க் என்னவென்றால் எந்த பங்குகளை தேர்தெடுப்பது தான். எனினும் இதில் நீண்டகால நோக்கில் வருமானம் அதிகம். அதே சமயம் நஷ்டமும் அதிகம்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்

இதே ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் முக்கியமாக ஈக்விட்டிகளில் முதலீடு செய்கின்றன. இவை பெரும்பாலும் தீவிரமாக வர்த்தகம் செய்யப்படும் பங்குகளில் முதலீடு செய்யப்படுகின்றது. இதன் வருமானம் பெரும்பாலும் வருவாய் ஈட்டும் நிதி மேலாளரின் திறனைப் பொறுத்தது.

கடன் ஃபண்டுகள்
 

கடன் ஃபண்டுகள்

நிலையான வருமானத்தினை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகள் பொருத்தமானவை. அவை ரிஸ்குகள் குறைவானவை. பங்குகளுடன் ஒப்பிடும்போது குறைவான ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன. இது கார்ப்பரேட் பத்திரங்கள், அரசாங்க பத்திரங்கள், கருவூல பில்கள், வணிக பில்கள் போன்ற ரிஸ்க் குறைவான வருமானம் உள்ள திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top investment options in india

you may consider investing in investment options such as stocks, equities, mutual funds, Fixed Deposit etc. Some of best and safe investments options is here.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X