மிகச் சிறந்த 4 கில்ட் ஃபண்ட்கள்.. யாரெல்லாம் முதலீடு செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப காலமாக மியூச்சுவல் ஃபண்ட்கள் மீதான ஆர்வமானது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் பெரும்பாலும் அறியக் கூடியது ஈக்விட்டி ஃபண்டுகள், டெப்ட் ஃபண்டுகள் தான்.

அந்த வகையில் டெப்ட் ஃபண்டில் உள்ள ஒரு வகை தான் இந்த கில்ட் ஃபண்டுகள்.

தீபாவளி சமயத்தில் வெங்காயம் விலை 100% அதிகரிக்கலாம்.. ஷாக் கொடுக்கும் அறிக்கை..! தீபாவளி சமயத்தில் வெங்காயம் விலை 100% அதிகரிக்கலாம்.. ஷாக் கொடுக்கும் அறிக்கை..!

இவை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்டுகளாகும். இந்த முதலீடுகளுக்கான துறைகள் அரசு செக்யூரிட்டிகளாக (G-Secs) இருப்பதால், இந்தக் கில்ட் ஃபண்ட்கள் மிக பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகின்றன.

கில்ட் ஃபண்ட் என்றால் என்ன?

கில்ட் ஃபண்ட் என்றால் என்ன?

பொதுவாக கில்ட் ஃபண்டுகள் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய கூடிய ஒன்றாகும். இந்த கில்ட் ஃபண்டுகள் இரண்டு விதங்களில் உள்ளன. ஒன்று கில்ட் ஃபண்ட். இதில் 80% முதலீட்டினை அரசு பத்திரங்களில் முதலீடு செய்யப்படும்.

மற்றொரு கில்ட் ஃபண்ட் gilt fund with constant fund ஆகும். எனினும் இதனை குறைந்தபட்சம் நீங்கள் 10 ஆண்டுகள் ஆவது வைத்திருக்க வேண்டியிருக்கும். இந்த ஃபண்டிலும் அரசு பத்திரங்களில் தான் முதலீடு செய்வர். இதில் கிரெடிட் ரிஸ்க் இல்லை எனலாம்.

வட்டி விகித ரிஸ்க் உண்டு

வட்டி விகித ரிஸ்க் உண்டு

எனினும் வட்டி விகித ரிஸ்க் உண்டு. இது வட்டி விகித மாற்றங்களால் பாதிக்கப்படக் கூடியவை. வட்டி விகிதம் குறைவாக இருந்தால் பத்திரங்களின் விலை அதிகரிக்கும். இதே வட்டி விகிதம் அதிகரித்தால், பத்திரங்களின் மதிப்பு குறையும். இதனால் என்.ஏ.வியூம் குறையும். இந்த ஃபண்டுகளில் கில்ட் ஃபண்டுகளில் லாபம் குறையலாம். ஆக கில்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போதே இதனை தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது.

ஐடிஎஃப்சி அரசு பத்திர நிதி

ஐடிஎஃப்சி அரசு பத்திர நிதி

அந்த வகையில் நிபுணர்கள் பரிந்துரைத்த 4 ஃபண்டுகளை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.

ஐடிஎஃப்சி அரசு பத்திர நிதி (idfc government securities fund)

AUM - ரூ.1,987 கோடி
செலவின விகிதம் - 0.61%
1 வருட வருமானம் - 5.73%
3 வருட வருமானம் - 12.18%
ஆரம்பத்தில் இருந்து சராசரி வருமானம் - 9.93%
மார்னிங் ஸ்டார் மதிப்பீடு - 5 ஸ்டார்கள்
வேல்யூ ரிசர்ச் நிறுவனம் - 4 ஸ்டார்கள் கொடுத்துள்ளது.

ஆக்ஸிஸ் கில்ட் ஃபண்ட்

ஆக்ஸிஸ் கில்ட் ஃபண்ட்

AUM - ரூ.147 கோடி

கட்டண விகிதம் - 0.4%
1 வருட வருமானம் - 5.75%
3 வருட வருமானம் - 11.10%
ஆரம்பத்தில் இருந்து சராசரி வருமானம் - 8.21%
மார்னிங் ஸ்டார் மதிப்பீடு - 4 ஸ்டார்கள்
வேல்யூ ரிசர்ச் நிறுவனம் - 5 ஸ்டார்கள் கொடுத்துள்ளது.
இந்திய அரசு பத்திரங்கள், குஜராத் மாநிலம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, மகராஷ்டிரா அரசின் பத்திரங்கள் டாப் ஹோல்டிங்காக உள்ளது.

டிஎஸ்பி அரசு பத்திர நிதி

டிஎஸ்பி அரசு பத்திர நிதி

AUM - ரூ.432 கோடி

செலவு விகிதம் - 0.55%
1 வருட வருமானம் - 5.99%
3 வருட வருமானம் - 11.76%
ஆரம்பத்தில் இருந்து சராசரி வருமானம் - 8.90%
மார்னிங் ஸ்டார் மதிப்பீடு - 5 ஸ்டார்கள்
வேல்யூ ரிசர்ச் நிறுவனம் - 5 ஸ்டார்கள் கொடுத்துள்ளது.

எடில்வைஸ் அரசு பத்திர நிதி

எடில்வைஸ் அரசு பத்திர நிதி

AUM - ரூ.99 கோடி

செலவு விகிதம் - 0.57%
1 வருட வருமானம் - 8.32%
3 வருட வருமானம் - 11.64%
ஆரம்பத்தில் இருந்து சராசரி வருமானம் - 9.92%
மார்னிங் ஸ்டார் மதிப்பீடு - 4 ஸ்டார்கள்
வேல்யூ ரிசர்ச் நிறுவனம் - 4 ஸ்டார்கள் கொடுத்துள்ளது.
இந்திய அரசு பத்திரங்கள், குஜராத் மாநிலத்தின் கடன் பத்திரங்கள் டாப் ஹோல்டிங்காக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top performing 4 gilt funds with high returns

top performing 4 gilt funds with high returns and ratings
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X