சேமிக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆனாலும் காலம் காலமாக சேமிப்பு திட்டங்களில் முதன்மை வகிப்பது வங்கி டெபாசிட் திட்டமே.
இது பங்கு சந்தை ஏற்ற இறக்கம், பொருளாதார சரிவு இப்படி முக்கிய காரணங்களால் பாதிக்கப்படுவதில்லை. வட்டி விகிதம் குறைந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கமும் வருவதில்லை.
இதனால் பெரும்பாலும் பலராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டங்களில், இது முதலாவதாக இருப்பது பெரிய விஷயம் அல்ல.
வங்கி வட்டி விகிதம்
இப்படி வழங்கப்படும் வட்டி விகிதங்களில் எந்த வங்கி வட்டியினை அதிகம் கொடுக்கிறது. எந்த வங்கியில் டெபாட்சிட் செய்தால், உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதை பலரும் ஆராய்வதே கிடையாது. ஆக இன்று நாம் பார்க்கவிருப்பது அதிக வட்டி கொடுக்கும்., சில தனியார் வங்கிகளைத் தான்.
எந்தெந்த வங்கிகள்
ஆர்பிஎல் வங்கி, யெஸ் வங்கி, இந்தஸிந்த் வங்கி, டிசிபி வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி, கரூர் வைஷ்யா வங்கி, பந்தன் வங்கி, டிஎன்எஸ்சி வங்கி உள்ளிட்டவற்றில் அதிகபட்சமாக வருடத்திற்கு 7.15% வரை வட்டி வழங்கப்படுகிறது.
இந்த தரவானது அக்டோபர் 6, 2020 அன்று அந்தந்த வங்கி தளங்களில் இருந்து எடுக்கபட்ட தரவாகும். இந்த வட்டி விகிதம் 1 கோடி ரூபாய்க்கு குறைவான வைப்பு நிதிக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதமாகும்.
ஆர்பிஎல் & யெஸ் வங்கி
ஆர்பிஎல் வங்கியில் வருடத்திற்கு அதிகபட்சமாக 7.15% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பதவிக்காலம் 2 - 5 வருடமாகும்.
இதே யெஸ் வங்கியில் அதிகபட்சமாக வருடத்திற்கு 7% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பதவிக்காலம் 1 - 3 வருடமாகும்.
இந்தஸிந்த் வங்கி & டிசிபி வங்கி
இந்தஸிந்த் வங்கியில் அதிகபட்சமாக வருடத்திற்கு 7% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பதவிக்காலம் 1 - 3 வருடமாகும்.
டிசிபி வங்கியில் அதிகபட்சமாக வருடத்திற்கு 6.95% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பதவிக்காலம் 2 - 5 வருடமாகும்.
டிஎன்எஸ்சி & லட்சுமி விலாஸ் வங்கி
லட்சுமி விலாஸ் வங்கியில் அதிகபட்சமாக வருடத்திற்கு 6.5% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பதவிக்காலம் 1 - 2 வருடமாகும்.
டிஎன்எஸ்சி வங்கியில் அதிகபட்சமாக வருடத்திற்கு 6.25% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பதவிக்காலம் 1 - 2 வருடங்கள், 3 - 5 வருடங்கள்.
பந்தன் வங்கி & ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி
பந்தன் வங்கியில் அதிகபட்சமாக வருடத்திற்கு 6% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பதவிக்காலம் 1 - 3 வருடமாகும்.
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியில் அதிகபட்சமாக வருடத்திற்கு 6% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பதவிக்காலம் 1 - 2 வருடமாகும்.
கரூர் வைஷ்யா வங்கி & தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
கரூர் வைஷ்யா வங்கியில் அதிகபட்சமாக வருடத்திற்கு 6% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பதவிக்காலம் 3 - 5 வருடமாகும்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அதிகபட்சமாக வருடத்திற்கு 5.75% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய பதவிக்காலம் 1 - 2 வருடமாகும்.


Click it and Unblock the Notifications