எதிர்பார்க்காத நிகழ்வுகள் நம்முடைய வாழ்வை எப்பொழுது வேண்டுமானாலும் தடம் புரளச் செய்து விடலாம். ஆக எதிர்பாராத நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும். அத்தகைய புத்திசாலித்தனமான ஒரு முயற்சியே இன்சூரன்ஸ் திட்டமாகும்.
இதனை பற்றி நாம் பல வகையில் படித்துக் கொண்டிருந்தாலும், இன்றளவிலும், பலருக்கும் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை.
இதற்கிடையில் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI)) நிலையான தனிநபர் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் குறித்த புதிய விதிகளை சமீபத்தில் வெளியிட்டது.

சரல் ஜீவன் பீமா பாலிசி
அதில் சரல் ஜீவன் பீமா (Saral Jeevan Bima) பாலிசியையும் அறிமுகப்படுத்தியது. இந்த பாலிசியானது, பாலிசிகளின் தவறான விற்பனையை குறைக்கும். அதோடு கூட காப்பீடு மற்றும் காப்பீட்டாளருக்கும் இடையிலான நம்பிக்கையை அதிகரிக்கும். அனைத்து ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் ஜனவரி 1 முதல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தை வழங்குவதை இன்சூரன்ஸ் ரெகுலேட்டர் கட்டாயமாக்கியது.

இது ஒரு டெர்ம் திட்டம்
சரல் ஜீவன் பீமா என்பது ஒரு நிலையான ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இது 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்குக் கிடைக்கும், மேலும் வாங்குபவர் முதிர்வு வயதாக 70ஐ எட்டும்போது திட்டம் தானாகவே நிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இந்த பாலிசி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மற்றும் 40 ஆண்டுகள் வரை நீடிக்கும். இதில் குறைந்தபட்ச தொகை ரூ.5 லட்சம், அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை க்ளைம் செய்து கொள்ளலாம்.

எடெல்வெய்ஸ் நிறுவனம் அறிமுகம்
அந்த வகையில் எடெல்வெய்ஸ் நிறுவனம், எடெல்வெய்ஸ் டோக்கியோ சரல் ஜீவன் பீமா திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை க்ளைம் செய்து கொள்ள முடியும். மேற்கூறியது போல இந்த பாலிசியை 5 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை நீடித்துக் கொள்ள முடியும்.

பிரீமியம் அதிகமா?
IRDAI-யின் கட்டுப்பாட்டின் படி இந்த இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், வழக்கமான டெர்ம் திட்டங்களை விட பிரீமியம் அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 30 வயதான புகைப்பிடிக்காத ஆண் தனி நபருக்கு, 30 ஆண்டு பாலிசி காலத்துடன் 25 லட்சம் ரூபாய் உறுதி செய்யப்பட, மாத பிரீமியம் 727 ரூபாய் வரும். இதனுடன் வரியும் சேர்க்கபப்ட்டுள்ளது. இருப்பினும் இந்த திட்டத்தினை ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் ஒப்பிடுகையில் (zindagi) 390 ரூபாய் தான் பிரீமியம் செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் எதிர்பார்ப்பு
ஒரு பாலிசியின் பிரீமிய நிர்ணயம் என்பது, அதன் இலக்கினை பொறுத்து நிர்ணயிக்கப்படும். இந்த புதிய பாலிசிக்கும் ஒரு புதிய வகையான வாடிக்கையாளர்கள் இருப்பதால், இதற்கென எதிர்காலத்தில் ஒரு தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் அமைவார்கள். இதன் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் இணைவார்கள் என்று நிறுவனம் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

ஏன் அதிகம்?
Beshak.org நிறுவனர் மகாவீர் சோப்ரா, காப்பீட்டாளார்கள் காலவரையறை தயாரிப்புகளை உருவாக்க, மக்கள் தொகை, வருமான வகை, வசிக்கும் இடம், தொழில் மற்றும் வாங்குபவர்களின் கல்வி நிலை, பயணம் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் சாரல் ஜீவன் பீமா திட்டத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால், எந்தவொரு காரணிகளும் பொருட்படுத்தப்படுவதில்லை. எனவே ஆபத்து அதிகமாக இருப்பதால் பிரீமியமும் அதிகமாக இருக்கும்.

சாதாரண திட்டங்கள் மலிவு
எடெல்வெய்ஸ் டோக்கியோ சாரல் ஜீவன் பீமா திட்டத்தில் 5 லட்சம் தொகையை பெற, மாதம் 145 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதோடு பாலிசி காலம் ஐந்து ஆண்டு காலமாகும். இதன் மூலம் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தினை அணுக முடியாதவர்கள், எளிதில் அணுக முடியும். எனினும் இதனை பற்றி அறிந்த நபர்கள் சரல் ஜீவன் பீமா விட, வழக்கமான இன்சூரன்ஸ் திட்டங்களை மலிவானதாக காண்பர்.