சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், எந்தவொரு இந்தியக் குடிமகனும் 10 வயது அல்லது அதற்கு குறைவான தங்கள் மகளுக்கு முதலீடு செய்யலாம். இது அரசாங்க திட்டம் என்பதால் உங்களுடைய முதலீட்டிற்கு எந்தவித அபாயமும் ஏற்படாமல் இருக்கும். பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் திருமணத்திற்காக சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பதும், அவர்களுடைய கல்விச் செலவுக்காக சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பதும் இயல்பான ஒன்றுதான்.
அப்படி நினைக்கும் பெற்றோர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் வழங்கும் இந்தத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். SSY திட்டத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம்.

இன்றைய நவீன காலத்தில் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை நோக்கி நகர்ந்து வருகின்றனர். ஆனாலும் சிலர் அரசாங்கத் திட்டங்கள் மீது அதிகளவில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதுபோன்ற நபர்களுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் உத்தரவாதமான வருமானத்தையும் வழங்கும். இதற்கு வரிச் சலுகைகள் உட்பட எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. பாதுகாப்பான நீண்ட கால சேமிப்பை தேடுபவர்களுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் சிறந்த விருப்பமாக இருக்கும்.
முதலீட்டு தொகை: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற பெயரும் உண்டு. இந்தத் திட்டத்திற்கு ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் என்ற குறைந்த முதலீட்டில் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பாக ஒரு நிதியாண்டிற்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் முக்கிய அம்சங்கள்: சுகன்யா சம்ரித்தி யோஜனா அதிக வட்டி வழங்கும் அரசாங்க திட்டங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது SSY திட்டத்திற்கு ஆண்டு வட்டி விகிதமாக 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது ரூ.71 லட்சத்துக்கு மேல் பெறலாம்.
SSY திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான தகுதி: 10 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடைய எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
முதிர்வுக் காலம்: தங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் பெற்றோர்கள் தொடர்ந்து 15 ஆண்டு காலம் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டியின் மூலம் வருமானம் கிடைக்கும். மொத்தமாக முதலீடு செய்த தொகை மற்றும் உங்களுடைய வட்டி வருமானம் ஆகியவற்றை 21 ஆண்டுகள் கழித்து பெற்றுக் கொள்ளலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.71 லட்சத்தை பெறுவது எப்படி?: மகளைப் பெற்றோர்கள் ரூ.71 லட்சத்தை குவிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். அதன்படி ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்தால் மொத்தமாக 22,50,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். தற்போதைய 8.2 சதவீத வட்டி விகிதத்தில் மொத்த முதிர்வு தொகையாக 71,82,119 ரூபாய் கிடைக்கும். இதில் 49,32,119 ரூபாய் வட்டியின் மூலம் கிடைத்த வருமானம் ஆகும். உங்களுக்கு கிடைக்கும் முதிர்வு தொகை முற்றிலும் வரி இல்லாதது.
அனைவருமே ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் தான் முதலீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் கிடையாது. உங்களால் இயன்ற தொகையை முதலீடு செய்யலாம். அதற்கு முதிர்வு காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதைத் தெரிந்து கொள்ள ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம்.
தங்களுடைய மகளின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற விரும்பும் எந்த ஒரு பெற்றோரும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications