பணத்தை வங்கி கணக்கிலேயே வைக்காமல் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. ஒரு பெரிய நிதி நமக்கு வேண்டும் என்றால் இளம் வயதில் இருந்தே முதலீட்டை தொடங்க வேண்டும். அந்த சேமிப்பும், முதலீடும் ஒழுக்கமான முறையில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட வேண்டும். அவ்வாறு முதலீடு செய்யும் போது நம்முடைய பணம் எதிர்பாராத அளவு லாபத்தை நமக்கு பெற்றுத் தரும்.
அந்த வகையில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யக் கூடியவர்கள் 200 ரூபாய் இருந்தாலே 20 லட்சம் ரூபாய் நிதி தொகுப்பை உருவாக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். ஒரு நாளைக்கு 200 ரூபாய் முதலீடு என்றால் ஒரு மாதத்திற்கு 6000 ரூபாய் ஆகும். தினமும் இதனை செய்யும் போது , 12 ஆண்டுகளுக்கு இதை நீங்கள் தொடர்ந்தால் உங்கள் கையில் 20 லட்சம் ரூபாய் கிடைக்கும் என கூறுகின்றனர். இது தான் காம்பவுண்டிங்கின் சக்தி என சொல்லப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இதனை மாதந்தோறும் என இல்லாமல் தினம்தோறும் எஸ்ஐபி என்ற முறையில் கூட முதலீடு செய்ய முடியும். தினமும் 200 ரூபாய் முதலீடு செய்யுங்கள் என குறிப்பிடுகின்றனர். ஒரு நாளைக்கு 200 ரூபாய் என்றால் ஒரு மாதத்திற்கு 6 ,000 ரூபாய் நீங்கள் முதலீடு செய்வீர்கள், உங்களுடைய முதலீடு உங்களுக்கு 12 சதவீத ஆண்டு வருமானம் தருகிறது எனும்போது 13 ஆண்டுகள் முடிவடையும்போது நீங்கள் செய்த முதலீடு 20 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும் என்கின்றனர்.
இதுவே உங்களுடைய முதலீடு ஆண்டுக்கு 15 சதவீத வருமானம் தருகிறது என்றால் 11 ஆண்டுகளில் இந்த 20 லட்சம் ரூபாய் கைக்கு வந்து விடும் எனக் கூறுகின்றனர். நாம் எவ்வளவு தொகையை முதலீடு செய்கிறோம் என்பது பற்றியது அல்ல , எவ்வளவு ஒழுக்கமாக அதை தொடர்ந்து செய்கிறோம் என்பதை பற்றியதுதான் என கூறும் முதலீட்டு நிபுணர்கள், பங்குச்சந்தை ஏறட்டும் இறங்கட்டும் அதைப் பற்றி கவலை வேண்டாம் தொடர்ந்து நீங்கள் முதலீடு செய்யுங்கள் என அறிவுரை வழங்குகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications