இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்ய பல வழிகல் இருந்தும் குறைவான, லாபம் தரும் அல்லது குறைவான வருவாயினை கொடுக்கும் திட்ட்கங்களில் முதலீடு செய்கிறோம்.
ஆனால் நல்ல லாபம் தரும் முதலீடுகளை விட்டு விடுகிறோம். அதிலும் இன்றைய காலகட்டத்தில் பங்கு சந்தை முதலீடு என்றாலே பயந்து ஓடும் நிலையிலேயே பலரும் உள்ளனர். ஏனெனில் இதில் முதலீடு செய்யும் பலரும் நஷ்டத்தினையே காண்கின்றனர்.
இதனாலேயே பலரும் இதனை சூதாட்டம் என்று கூறுகின்றனர். ஆனால் நிச்சயம் இது உண்மையல்ல. சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான ஒரு விஷயம் தான். ஆக நாம் எங்கே நுழைவது? எப்படி வெளி வருவது என்பதனை தெரிந்து கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம். அப்படி இல்லை எனில் சரியான நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றலாம்.
எப்படி கணிப்பது?
ஏற்கனவே நாம் கூறியது போல, நிலத்தின் மதிப்பீடு அந்த நிலத்தின் தேவையை பொறுத்து கூடவோ குறையவோ செய்யும். ஓரு நிலத்தின் தேவை அதை சுற்றி ஏற்படும் வளர்ச்சியை சார்ந்தது. ஆக எந்த நேரத்தில் எந்த ஏரியா எவ்வளவு வளர்ச்சியுறும் என்பதை ஓரளவு கணிக்க முடியுமே தவிர 100 % உறுதியாக கூற இயலாது. அப்படி தான் பங்கு சந்தையும். ஆக உங்கள் நிலம் எங்கிருந்தால் அதன் மதிப்பு அதிகரிக்கும் என்பதை நீங்கள் தான் மதிப்பிட வேண்டும்.
பங்கு பரிந்துரை
ஆக அது போலத்தான் பங்கு சந்தையும். எந்த வித அடிப்படையும் இல்லாமல் பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்களை வைத்து பங்குகள் வாங்கும் போது அது சூதாட்டமாக தோற்றமளிக்கலாம், ஆனால் உண்மை அதுவல்ல. ஆக உண்மையை தெரிந்து கொண்டு, நிபுணர்களின் உதவியுடன் முதலீடு செய்வது நல்லது. அந்த வகையில் நிபுணர்கள் பரிந்துரைத்த இரண்டு பங்குகளை பார்க்கலாம் வாருங்கள்.
ஹெச் டி எஃப்சி செக்யூரிட்டீஸ் கணித்த இரண்டு பங்குகளில் ஒன்றும அனைவரும் அறிந்த ஒன்று தான். அது ஓஎன்ஜிசி, இரண்டாவது குஜராத் புளோரோ கெமிக்கல்ஸ்.
ஓஎன்ஜிசி-யின் இலக்கு
ஓஎன்ஜிசி பங்கின் விலையானது 20 நாள் மற்றும் 50 நாள் மூவிங் ஆவரேஜ்ஜிக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. அதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக ஆர்எஸ்ஐ-யும் இன்னும் ஏற்றம் காணுவதற்கு ஏற்ப உள்ளது. ஆக இந்த பங்கினை 79 - 81 ரூபாய்க்குள் வாங்கலாம். இதன் இலக்கு விலை 93 ரூபாயாக கணித்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 75 ரூபாய்கும். இந்த பங்கின் விலை கடந்த வெள்ளிக்கிழமை முடிவு விலை 78.50 ரூபாயாகும்.
புளோரோ கெமிக்கல்ஸின் இலக்கு
புளோரோ கெமிக்கல்ஸ் பங்கில் அதிக வால்யூம்கள் உள்ளது. அதோடு இந்த பங்கும் 20 நாள் மற்றும் 50 நாள் மூவிங் ஆவரேஜ்ஜிக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக இந்த பங்கினை 550 - 570 ரூபாய்க்குள் வாங்கலாம். இதன் இலக்கு விலை 690 ரூபாயாக கணித்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 510 ரூபாய்கும்.


Click it and Unblock the Notifications