யூலிப் என்ற யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம், பல்வேறு நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யப்படும் ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டம் முதலீடு+ இன்சூரன்ஸ் சேர்ந்த ஒரு ஹைப்ரிட் திட்டமாகும்.
ஆரம்ப காலத்தில் யூலிப் திட்டம் என்றாலே வேண்டாம் என்று தான் பலரும் கூறுவார்கள்.
ஏனெனில் ஆரம்ப காலகட்டத்தில் இந்த திட்டங்களில் கட்டணங்கள் அந்தளவுக்கு அதிகமாக இருந்தது. உதாரணத்திற்கு நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 30,000 ரூபாய் செலவினமாக இருக்கும். ஆனால் தற்போது அப்படியில்லை. செலவினங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
யூலிப் திட்டம்
யூலிப் திட்டங்கள் இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு சேர்ந்து என முக்கிய அம்சமாக இருக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் லாக் இன் காலம் ஆகும். இந்த திட்டத்தில் ஆரம்பத்தில் எவ்வளவு முதலீடு செய்யகிறீர்களோ? அதனை ஐந்து வருடங்களுக்கு செய்ய வேண்டியிருக்கும். இதிலிருந்து குறைக்க முடியாதே தவிர, முதலீட்டினை அதிகரித்துக் கொள்ளலாம்.
பிரித்து முதலீடு
இந்த திட்டத்தில் நீங்கள் செய்யும் பிரீமியத்தில் 10 மடங்கு வரை காப்பீடு பெற முடியும். இதன் கூடவே இந்த திட்டத்தில் வரிச்சலுகையும் உண்டு. இந்த திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடு 15% இன்சூரன்ஸ் திட்டத்திற்காகவும், 85% ஈக்விட்டிகளிலும் செய்யப்படுகிறது. இது இரண்டாவது ஆண்டில் இருந்து ஈக்விட்டிகளில் இன்னும் அதிகரிக்கப்படலாம்.
வரி சலுகை உண்டு
யூலிப் திட்டங்களை பொறுத்த வரையில் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை உண்டு. இதே முதிர்வு தொகைக்கு 10டி-யின் கீழ் வருமானமாக கிடைக்கும் தொகைக்கு வரி சலுகை கிடைக்கும். எனினும் இந்த திட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வருமானம் கிடைக்குமா? என்பதும் யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பொறுத்தவரையில், உங்கள் முதலீட்டுக்கு ஏற்றவாறு NAV ஒதுக்கீடு செய்யப்படும். யூலிப் திட்டங்களிலும் நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் முதலீட்டினை அதிகரித்துக் கொள்ளலாம். எனினும் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதன் செயல்பாடு சரியில்லாத பட்சத்தில் அதனை வேறு ஃபண்டுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
வருமானம் அதிகம்
ஆனால் யூலிப்களில் முதலீட்டு தொகையை எளிதில் திரும்ப பெற முடியாது. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் அப்படியில்லை. பிடிக்கவில்லை எனில் மாற்றிக் கொள்ளலாம். அல்லது முதலீட்டினை வெளியே எடுத்துக் கொள்ளலாம். எனினும் இது ஃபண்டுகளுக்கு ஏற்ப மாறுபடும். அதோடு மியூச்சுவல் ஃபண்டுகளில் வருமானமும் அதிகம்.
யூலிப் திட்டத்தில் கவனிக்க வேண்டியவை
மொத்தத்தில் யூலிப் திட்டத்தில் சாதகம் எனில், சந்தையுடன் இணைந்த திட்டம், இன்சூரன்ஸ் உண்டு, நீண்டகால சேமிப்புக்கு ஏற்றது, முதலீடுகளை மாற்றிக் கொள்ளலாம், குறிப்பாக வரிச்சலுகை என சில நல்ல விஷயங்கள் உள்ளன. எனினும் யூலிப் திட்டங்களில் பல்வேறு கட்டணங்கள் உள்ளன. இறப்பு பலனுக்கும் வரிச்சலுகை உண்டு.
எது முதலீட்டுக்கு சிறந்தது?
இதே மியூச்சுவல் ஃபண்டுகளில் சில பண்டுகளுக்கு மட்டுமே வரிச்சலுகை உண்டு. எனினும் இதில் வருமானம் அதிகம். யூலிப் திட்டங்களோடு ஒப்பிடும்போது கட்டணங்கள் குறைவு தான். ஆக நீண்டகால முதலீட்டுக்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறந்தவையாக இருக்கும். முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் என இரண்டும் தேவை என நினைப்பவர்கள் ,மட்டும் யூலிப் திட்டங்களை நாடலாம்.
More From GoodReturns

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications