சென்னை: ஊழியர்களுக்கு வயதான காலத்தில் உதவும் வகையில், இந்தியா அரசு கொண்டு வந்த திட்டம் தான் EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தினை இபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு நிர்வகிக்கிறது. ஒருவர் தனது EPF தொகையைப் பெற நினைத்தால், எத்தனை நாட்களுக்குப் பிறகு, அவருக்கு அந்தத் தொகை கிடைக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
EPF என்பது ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு சேமிப்புத் திட்டம் ஆகும். மாத சம்பளக்காரர்கள் தங்களின் சம்பளத்தில் 12 சதவீதமும், நிறுவனத்தின் மூலம் அதே 12 சதவீதமும் ஒரு ஊழியரின் PF தொகைக்கு பங்களிக்க வேண்டும். இதில் நிறுவனத்தின் மூலம் போடப்படும் 12 சதவிகிதம் இரண்டு பங்குகளாக முதலீடு செய்யப்படுகிறது.

இதில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) டெபாசிட் செய்வார்கள். மீதமுள்ள 3.67 சதவீதத்தை ஊழியர்களின் EPF அக்கவுண்டில் டெபாசிட் செய்வார்கள். இந்த நிதிக்கான வட்டி விகிதம் EPFO அமைப்பின் மூலம், ஆண்டுதோறும் மாற்றம் செய்யப்பட்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 2023 முதல் 2024 ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.25 சதவீதம் ஆகும்.
EPF திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால், ஓய்வூதியத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில், சம்பளம் பெறாமல் இருக்கும்போது, அவர்களுக்கு தேவைப்படும் வருமானத்தை வழங்குவதாகும். ஓய்வுக்கு முன்பு, சில சூழ்நிலைகளைப் பொறுத்து, தொகையை ஓரளவு அல்லது முழுமையாக திரும்பப் பெற EPFO அமைப்பு அனுமதிக்கிறது.
சான்றாக, வேலையை இழந்த ஒருவர், 60 நாட்களுக்கும் மேலாக வேலை இல்லாமல் இருந்திருந்தால், அவருடைய EPF கார்பஸில் 100 % திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு நபர், படிவம் 19 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், வேலையில் இருக்கும் ஒரு நபர், சில நிபந்தனைகளுடன், முதலீடு செய்யப்பட்ட PF கார்பஸில் 75 % வரை திரும்பப் பெற EPFO அமைப்பு அனுமதி வழங்குகிறது.
ஒரு பணியாளர் EPF தொகையைப் பெற கோரிக்கை வைத்தால், எத்தனை நாட்கள் எடுக்கும், EPFO அமைப்பு சொல்வது என்ன? என்பதைப் பார்ப்போம்.
EPFO அமைப்பின்படி, ஒரு ஊழியர் தனது PF தொகையைப் பெற நினைத்தால் அவருடைய விண்ணப்பத்தை பிராசஸ் செய்து தொகையை விண்ணப்பித்தவரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய 20 நாட்கள் ஆகும்.
குறிப்பிடப்பட்ட இந்த 20 நாட்கள் காலக்கெடுவுக்குள், விண்ணப்பதாரர் தொகையைப் பெறவில்லை என்றால், விண்ணப்பிப்பவர் PF கமிஷனரிடம் சென்று புகார் அளிக்கலாம், அல்லது EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்றும் புகார் அளிக்கலாம்.
PF தொகையைத் திரும்பப் பெறுவதற்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அதன்பிறகு PF தொகை கிளைம் செய்யப்பட்டதா? என்பதை ஆன்லைனில் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications