மும்பை: வீடு என்பது இன்றைய நாளிலும் நடுத்தர மக்களின் கனவாகவே உள்ளது. சொந்த வீடு வாங்க நினைக்கும் நடுத்தர மக்கள் பலருக்கும் இன்றும் பெரியளவில் கைகொடுப்பது வீட்டுக் கடன் தான்.
தற்போது வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு இந்த கடன்களைக் கொடுக்கின்றன. என்னென்ன அவரவர் கடன் அளவு? கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது யூனியன் பேங்க் ஆப் இந்தியா சம்பளதாரர்களுக்கான வீட்டுக் கடன்களுக்கான, வட்டி விகிதத்தினை, 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.
வீட்டுக்கடனுக்கான வட்டி குறைப்பு
இது மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகும். சம்பளதாரர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் 700-க்கு கீழ் குறைவாக இருப்பவர்கள், 30 லட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்குபவர்களுக்கு 6.7 சதவீதம் வட்டி விகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது ஜூலை 11 முதல் அமலுக்கு வந்துள்ளது.
எவ்வளவு வட்டி விகிதம்?
ஓவர் நைட் எம்சிஎல்ஆர் விகிதம் - 6.85%
ஓரு மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 6.95%
மூன்று மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.10%
ஆறு மாத எம்சிஎல்ஆர் விகிதம் - 7.25%
1 வருட எம்சிஎல்ஆர் விகிதம் - 7.40%
2 வருட எம்சிஎல்ஆர் விகிதம் - 7.55%
3 வருட எம்சிஎல்ஆர் விகிதம் - 7.60%
பொது மக்களுக்கான வைப்பு நிதிக்கான வட்டி
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 3.50%
15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையில் - 3.50%
31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.75%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 4.00%
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையில் - 4.50%
121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.75%
181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 5.00%
444 நாட்களுக்கு - 5.40%
445 நாட்கள் முதல் 554 நாட்கள் வரையில் - 5.40%
555 நாட்களுக்கு - 5.40%
556 நாட்கள் முதல் 3 வருடம் வரையில் - 5.40%
1 வருடத்திற்கு - 5.40%
1 வருடம் 1 நாள் முதல் 443 நாட்கள் வரையில் - 5.40%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரையில் - 5.45%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையில் - 5.45%
மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதிக்கான வட்டி
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 4.00%
15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையில் - 4.00%
31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 4.25%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 4.50%
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையில் - 5.00%
121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 5.25%
181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 5.50%
444 நாட்களுக்கு - 5.90%
445 நாட்கள் முதல் 554 நாட்கள் வரையில் - 5.90%
555 நாட்களுக்கு - 5.90%
556 நாட்கள் முதல் 3 வருடம் வரையில் - 5.90%
1 வருடத்திற்கு - 5.90%
1 வருடம் 1 நாள் முதல் 443 நாட்கள் வரையில் - 5.90%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரையில் - 5.95%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையில் - 5.95%


Click it and Unblock the Notifications