ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. கடந்த 2022ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மத்திய வங்கியானது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வங்கிகளும் தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது.
இதற்கிடையில் தான் வங்கி டெபாசிட்கள் என்பது சமீபத்திய காலமாக கவர்ச்சிகரமான திட்டங்களாக மாறியுள்ளன.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
குறிப்பாக யுனிட்டி வங்கியில் மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் என்பது ஆண்டுக்கு 9.5% ஆக குறிப்பிட்ட கால டெபாசிட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 4.5% முதல் 9% வரையில் வட்டி வழங்கப்படுகிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு 9.5% வட்டி கிடைக்கிறது. இது 1001 நாள் டெபாசிட் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. இதே மற்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு 9% வட்டியும் கிடைக்கிறது.
இதே 181 - 201 நாட்கள் மற்றும் 501 நாள் டெபாசிட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 9.25% வட்டியும், இதே பொது மக்களுக்கு வட்டி விகிதம் 8.75%மும் வட்டியும் கிடைக்கும். இந்த திட்டகளுக்கான வட்டி விகிதம் பிப்ரவரி 2023 முதல் அமலில் உள்ளது.
பொதுமக்கள்
181 - 201 நாள் - 8.75%
501 நாட்கள் - 8.75%
1001 நாட்கள் - 9%
மூத்த குடி மக்கள்
181 - 201 நாள் - 9.25%
501 நாட்கள் - 9.25%
1001 நாட்கள் - 9.50%
இதை தெரிஞ்சுக்கோங்க
இந்த கணக்கில் முன் கூட்டியே தொகையை திரும்ப பெற, உங்கள் டெபாசிட் திட்டத்திற்கு கொடுப்படும் வட்டி விகிதத்தில் 1% கழிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆக டெபாசிட் செய்யும் முன்னர் இதனையும் தெரிந்து கொள்வது நல்லது.
உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ்
இதேபோல் உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 9.25% வட்டி கிடைக்கிறது. இது 700 நாள் டெபாசிட் சிறப்பு டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆக இதுவும் மூத்த குடி மக்களுக்கு ஏற்றதொரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு ஏற்றது?
பொதுவாக மூத்த குடிமக்கள் எனும்போது பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாக உள்ளன. இதில் சந்தை ஏற்ற இறக்கம் என்பது இல்லையென்பதால் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் உள்ளது. ஆக நிரந்தர வருமானம் தரும் திட்டங்களாக உள்ளன. இது நெகிழ்வான பல ஆப்சனை வழங்கி வருகின்றது. மொத்தத்தில் நிரந்தர வருமானம் தரும், லாபகரமான திட்டமாக உள்ளது.
நினைவில் கொள்ள வேண்டியது?
அதிலும் பொதுமக்களை காட்டிலும் இந்த திட்டங்களில் வட்டி விகிதம் என்பதும் அதிகமாகவே கிடைப்பதால், இது மூத்த குடிமக்களுக்கு ஏற்றதொரு திட்டமாக இருக்கிறது. எனினும் இந்த திட்டங்களை முன் கூட்டியே முடித்துக் கொள்ள நினைத்தால் அதற்கு அபராதமும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications