29 லட்சம் கோடி சாதனை! UPI-ல் குவியும் பணம்..மோசடியில் இருந்து தப்பிக்க 5 டிப்ஸ்!

2026 மார்ச் மாதம் இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். டீக்கடை முதல் டிபார்ட்மென்ட் ஸ்டோர் வரை நாம் தட்டிவிடும் அந்த ஸ்கேன், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 29.53 லட்சம் கோடி ரூபாய் என்ற கற்பனைக்கும் எட்டாத உயரத்தை தொட்டுள்ளது.

உலகமே வியந்து பார்க்கும் இந்த அசுர வளர்ச்சியில், இன்னொரு பக்கம் டிஜிட்டல் திருடர்களும் ஸ்கெட்ச் போட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் போடுவதற்கு மட்டும் தான் PIN, எடுப்பதற்கு அல்ல என்ற அடிப்படை தெரியாமல் இன்றும் பலர் தங்கள் உழைப்பை இழந்து வருகின்றனர். இந்த ராக்கெட் வேக வளர்ச்சியில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? 2026-ன் நவீன மோசடிகளில் இருந்து உங்களை காக்கும் அந்த டாப்-5 டிப்ஸ் இதோ உங்களுக்காக..

29 லட்சம் கோடி சாதனை! UPI-ல் குவியும் பணம்..மோசடியில் இருந்து தப்பிக்க 5 டிப்ஸ்!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்பு அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இது குறித்து NPCI வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் 2026ல் மட்டும் 29.53 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு யுபிஐ பரிவர்த்தனை மதிப்பானது எகிறியுள்ளது. இது திருவிழா கால செலவுகள் மற்றும் நிதியாண்டு இறுதி என பல காரணிகள் காரணமாக மார்ச் மாதத்தில் மட்டும் 2,264 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 26.84 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியாகும்.

இன்றைய காலகட்டத்தில் மக்களையும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. குறிப்பாக சிறிய நகரங்கள், கிராமப்புறங்கள், வியாபாரிகள் மத்தியில் யுபிஐ பயன்பாடானது அதிகரித்துள்ளது இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகிறது.

5 முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்!

1.யுபிஐ பின் நம்பர் அல்லது ஓடிபி சீக்ரெட்

உங்களுடைய யுபிஐ ஐடி பின் நம்பர் அல்லது CVV என்னை ஒரு போதும் யாருக்கும் பகிராதீர்கள். இதை எப்போதும் யாருக்கும் கொடுக்க கூடாது. அது வங்கியாக இருந்தாலும் சரி, உங்களுக்கு தெரிந்தவர் என யாராக இருந்தாலும் கொடுக்க கூடாது. சொல்லப்போனால் வங்கி அதிகாரிகள் இதுபோன்ற தகவல்களை ஒரு போதும் கேட்க மாட்டார்கள். ஆக இதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

2.பணம் அனுப்புவதற்கு முன்பு சரி பாருங்கள்

வெறுமனே யுபிஐ ஐடியை கொடுத்தோமா, பேமெண்ட் நவ் கொடுத்தோமா என இல்லாமல், உங்களது பே நவ் ஆப்சனை கொடுக்கும் முன்பு, ஒன்றுக்கு இருமுறை சரி பாருங்கள். குறிப்பாக பெயருக்கான ஸ்பெல்லிங்குகள், மற்ற அடிப்படை விவரங்களையும் சரி பார்க்க வேண்டும். இது வரவிருக்கும் தவறை முன்கூட்டியே தவிர்க்க உதவும். குறிப்பாக புதிய எண்களுக்கு பணம் அனுப்பும் போது, கவனமாக இருக்க வேண்டும்.

3.பொது Wi Fi -ஐ தவிருங்கள்

பொதுவாக யுபிஐ மட்டுமல்ல, எந்த ஒரு நிதி பரிவர்த்தனைக்கும் பொது இடங்களில் உள்ள Wi Fi -ஐ பயன்படுத்தாதீர்கள். எப்போதும் உங்கள் மொபைலில் உள்ள டேட்டா அல்லது நம்பகமான சொந்த வை ஃபையை பயன்படுத்துங்கள்.

4. ஆப்பையும் லாக் செய்து வையுங்கள்

உங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலிகளுக்கு என தனியாக பயோமெட்ரிக் பாஸ்வேர்டுகள் அல்லது மிகவும் கடினமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துங்கள். இது மற்றவர்கள் உங்கள் போனை பயன்படுத்தி பணம் எடுப்பதை தவிர்க்க உதவும்.

5. தொடர்ந்து பரிவர்த்தனைகளை கண்காணியுங்கள்

உங்கள் பரிவர்த்தனைகளை தொடர்ந்து கவனியுங்கள். எஸ்.எம்.எஸ் அலர்ட் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். அதோடு தொடர்ந்து உங்கள் வங்கி பரிவர்த்தனை அறிக்கைகளையும் கண்காணியுங்கள். இதன் மூலம் தவறுகள் இருந்தால் உடனே தெரிந்து கொள்ள முடியும். அப்படி தவறுகள் இருப்பதாக தெரிந்து கொண்டால், உடனடியாக வங்கிக்கும், சைபர் கிரைம் போர்ட்டலிலும் https://cybercrime.gov.in/ நேரடியாக புகார் தெரிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+