வங்கிகளில் கடன் பெற்றிருந்தால்.. அதற்கான EMI செலுத்துவதற்கு பலரும் தங்கள் வங்கி கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்வர். அதன் பின்னர் வங்கிகள் கடன் பெற்றவரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும். சில நேரங்களில் பணம் டெபாசிட் செய்ய தாமதமாகலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டுகளை வைத்து பணம் செலுத்தலாம்.
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி EMI செலுத்தும் போது கடன் பெற்றவர், அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பதிவில் கிரெடிட் கார்டை வைத்து EMI செலுத்தலாமா? அப்படி செலுத்தினால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்.

பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சில அபாயங்கள் மற்றும் சிக்கல்களின் காரணமாக கிரெடிட் கார்டுகளை ஏற்பதில்லை. ஆனால் கிரெடிட் கார்டுகளை அனுமதிக்கும் வங்கிகளில் நீங்கள் EMI செலுத்தலாம்.
கிரெடிட் கார்டு மூலம் இஎம்ஐ செலுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்:
உடனடி பேமெண்ட்: கிரெடிட் கார்டுகளை வைத்து உடனடியாக பேமெண்ட் செலுத்தும் போது அபராதங்களைத் தவிர்க்கலாம். ஒரு நாள் தாமதமாக இஎம்ஐ செலுத்தினாலும் அதற்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கும். இது போன்ற அவசர காலங்களில் கிரெடிட் கார்டுகளை வைத்து உடனடியாக செலுத்தலாம்.
ரிவார்டு பாயிண்டுகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள்: பல கிரெடிட் கார்டு வழங்குனர்கள் ரிவார்டு பாயிண்டுகள் போன்றவற்றை வழங்குகின்றன. எனவே கிரெடிட் கார்டு மூலம் உங்கள் EMI-களை செலுத்துவது ரிவார்ட் பெற உதவும். இருப்பினும் அனைத்து கிரெடிட் கார்டுகளும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு இந்த சலுகைகளை வழங்குவதில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே உங்கள் கார்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரிபார்த்தால்.. அதற்கு ரிவார்ட் பாய்ண்டுகள் இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தீமைகள் என்ன?:
அதிக வட்டி விகிதங்கள்: பர்சனல் லோன் மற்றும் பிற வகையான கடன்களுடன் ஒப்பிடும்போது கிரெடிட் கார்டுகள் அதிக வட்டி விகிதங்களை கொண்டிருக்கும். ஒருவேளை கொடுக்கப்பட்ட காலகட்டத்திற்குள் முழு கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையையும் உங்களால் செலுத்த முடியாமல் போனால் வட்டி கட்டணங்கள் அதிகரித்து உங்கள் ஒட்டுமொத்த கடன் தொகையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது உங்களை நிதி சிக்கலில் ஆழ்த்தலாம். எனவே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது அவற்றின் பேமன்டை சரியாக செலுத்துகிறீர்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
செயலாக்க கட்டணங்கள்: சில வங்கிகள் மற்றும் NBFC-கள் உங்கள் EMI-களை செலுத்த கிரெடிட் கார்டை பயன்படுத்துவதற்கு செயலாக்க கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்த கட்டணம் உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் செலவோடு சேர்க்கப்படலாம். எனவே இது போன்ற பரிவர்த்தனைகளை எதிர்பாராத நேரங்களில் மட்டும் பயன்படுத்துங்கள். அதோடு கிரெடிட் கார்டை வைத்து கட்டணம் செலுத்தும் போது சில மறைமுக கட்டணங்களும் இருக்கலாம். எனவே நுணுக்கமான சில பாலிசிகளையும் கவனமாக தெரிந்து கொள்வது முக்கியம்.
கிரெடிட் ஸ்கோரில் தாக்கம்: EMI-ளை செலுத்த கிரெடிட் கார்டை பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விதத்தை பாதிக்கலாம். இதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே கிரெடிட் கார்டை பயன்படுத்தி இஎம்ஐ செலுத்துவதை அவசர காலங்களில் மட்டும் பிற ஆப்ஷன்களோடு ஒன்றாக வைத்துக் கொள்ளலாம்.; இதையே நடைமுறைப்படுத்துவது சில நன்மையையும் தரும், அதே சமயத்தில் சில தீமைகளையும் சேர்த்து தரும்.


Click it and Unblock the Notifications