உலக முதலீட்டு ஜாம்பவானான வாரன் பஃபெட்டின் அறிவுரைகள் ஒவ்வொன்றும் காலத்திற்கும் நீடித்து நிற்பவையாக இருக்கின்றன. பணத்தை எப்படி முதலீடு செய்ய வேண்டும், முதலீடு செய்த பணத்திலிருந்து எப்படி செல்வத்தை உருவாக்க வேண்டும் , அந்த செல்வத்தை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து தொடர்ச்சியாக என்பது குறித்து தன்னுடைய புத்தகங்கள் வாயிலாகவும் தன்னுடைய அறிவுரைகள் வாயிலாகவும் கூறி இருக்கிறார்.அந்த வகையில் வாரன் பஃபெட்டை கூறிய இந்த முக்கிய அறிவுரைகளை உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள், அவர்களின் எதிர்காலம் குறித்து நீங்கள் கவலைப்படவே தேவையில்லை.
குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே நிதி சார்ந்த விஷயங்களை கற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் வாரன் பஃபெட். குழந்தைகளுக்கு சிறு சிறு நிதி சார்ந்த தகவல்களை அன்றாடம் நம்முடைய வாழ்க்கையை உதாரணமாக கொண்டே கற்றுத் தர வேண்டும் என்றும், சிறுவயதில் நீங்கள் கற்றுத் தரக்கூடிய நிதி சார்ந்த பாடம் நீண்ட கால அடிப்படையில் அவர்கள் நிதி ரீதியாக வெற்றி பெற்று பணத்தை சிறப்பாக கையாள்வதற்கு உதவும் என்றும் கூறுகிறார். எனவே குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பணத்தின் அருமை, அந்த பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சிறுக சிறுக கற்றுத் தருவது நல்லது.

குழந்தைகளுக்கு சேமிப்பு குறித்து கற்று தர வேண்டும் என்பது வாரன் பஃபெட் கூறும் மிக முக்கியமான ஒரு அறிவுரை .அதாவது அவர்களுக்கு என ஒரு உண்டியல் வாங்கி தருவது அல்லது ஒரு சேமிப்பு கணக்கை உருவாக்கி தருவது இதன் மூலம் அவர்கள் அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே பணத்தை சேமிக்க வேண்டும் என்ற பழக்கத்தை தானாகவே உண்டாக்கிவிடும் என கூறுகிறார். குழந்தைகள் தாங்கள் வங்கியில் போட்ட பணம் வட்டி கிடைத்து அதிகரிக்கும் போது தானாகவே அவர்கள் தேவையற்ற செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்கவும் பின்னாளில் முதலீடு செய்யவும் வந்து விடுவார்கள் என கூறுகிறார்.
அடிப்படை தேவை எது ஆடம்பரம் எது என குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து கற்றுத் தர வேண்டியது கட்டாயம் எனக் கூறுகிறார் . ஒரு பொருளை குழந்தைகள் வேண்டும் என கேட்கிறார்கள் எனும் போது பெற்றோர் அது அந்த குழந்தைக்கு அடிப்படை தேவையான பொருளா அல்லது அது ஒரு ஆடம்பரமா என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
ஒரு நபர் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பணக்காரராகவும் செல்வந்தராகவும் வரவேண்டும் என்றால் உங்களில் நீங்களே முதலீடு செய்வது தான் நல்லது என்பது அவரது கருத்தாக இருக்கிறது. அதாவது புத்தகம் படிப்பது , புதிய புதிய திறன்களை வளர்த்துக் கொள்வது என growth mindset இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நீங்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்கிறார்.


Click it and Unblock the Notifications