சென்னை: கூடிய விரைவில் மக்கள் 20 ஆண்டு காலத்திற்கு ஃபிக்ஸடு டெபாசிட்டுகளில் பணத்தை முதலீடு செய்ய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ஃபிக்ஸடு டெபாசிட்டுகள் எனப்படும் நிலையான வைப்பு தொகை திட்டங்களில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக வங்கிகள் வழங்கக்கூடிய ஃபிக்ஸடு டெபாசிட்டுகளில் அதிகபட்சமாக 10 ஆண்டு காலத்திற்கு மட்டுமே நாம் முதலீடு செய்ய வேண்டும். எந்த ஒரு வங்கியும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஃபிக்ஸடு டெபாசிட் திட்டங்களை வழங்குவது கிடையாது.

இந்த நிலையில் கூடிய விரைவில் 20 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸடு டெபாசிட் திட்டங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஹிந்து பிசினஸ் லைன் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற வங்கி தங்களுடைய ஃபிக்ஸடு டெபாசிட்டுகளின் காலத்தை 20 ஆண்டுகளுக்கும் மேல் நீட்டிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான் என்ற முறையில் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என தெரிகிறது.
தற்போது பல்வேறு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் ஆண்யூட்டி பிளான் என்ற திட்டங்களை வழங்குகின்றன.
அதேபோன்ற ஒரு நடைமுறையை இணைத்து 20 ஆண்டு கால ஃபிக்ஸடு டெபாசிட் முறைகள் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிகிறது. தற்போது வங்கிகள் பத்து ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸடு டெபாசிட் திட்டங்களை மட்டுமே வழங்குகின்றன, அதனை மேலும் நீட்டிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம் என சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பாஸ்கர் பாபு தெரிவித்துள்ளார்.
இது போன்ற ஃபிக்ஸடு டெபாசிட் திட்டங்களில் காம்பவுண்டிங் முறையில் கிடைக்கக்கூடிய வட்டி விகிதம் மக்களுக்கு உடனடியாக கைகளுக்கு சென்று சேர வேண்டும் என்ற வகையில் இதனுடன் சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் திட்டத்தையும் இணைப்பதாக கூறியுள்ளார்.
உதாரணமாக ஒரு நபர் 50,000 ரூபாயை ஃபிக்ஸடு டெபாசிட்டில் முதலீடு செய்கிறார். அது 20 ஆண்டுகாலம் கொண்ட ஒரு திட்டம் எனில் 10 ஆண்டுகள் முடிந்த பிறகு 11ஆவது ஆண்டில் இருந்து அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
தற்போது மக்கள் தங்களுடைய முதலீடுகளை மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குச் சந்தைகள் ஆகியவற்றை நோக்கி திருப்பி இருப்பதால் வங்கிகளில் ஃபிக்ஸடு டெபாசிட்டுகளின் வரத்து கணிசமான அளவு குறைந்து இருக்கிறது. ஏனெனில் ஃபிக்ஸடு டெபாசிட்களில் கிடைக்கக்கூடிய வட்டி குறைவானதாக இருக்கிறது. இந்த சூழலில் தான் பல்வேறு வங்கிகளும் ஃபிக்ஸடு டெபாசிட்டுகளை அதிகரிக்கும் பொருட்டு புதிய புதிய திட்டங்களையும் வட்டி விகிதங்களையும் அறிவித்து வருகின்றன.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications