மாதம் பிறந்தா கைநிறைய காசு வரணும், ஆனா அதற்காக எந்த ரிஸ்க்கும் எடுக்கக்கூடாது. இப்படி ஆசைப்படுபவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.
பணவீக்கம் அதிகரித்து கொண்டே போகும் இன்றைய காலகட்டத்தில், சேமிப்பு கணக்கிலோ அல்லது சாதாரண வங்கி எஃப்டி-யிலோ (FD) பணத்தை போட்டு வைத்தால், அது பணவீக்கத்தை முறியடிக்க போதுமானதாக இருக்காது. ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், எந்த தனியார் வங்கிகளையும் விட அதிக வட்டியையும், அதே சமயம் உங்கள் பணத்திற்கு மத்திய அரசின் முழுப் பாதுகாப்பையும் தரும் இரண்டு ஜாக்பாட் திட்டங்கள் நம்மிடையே உள்ளன. அதுவும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய கவலை இல்லாமல் முதலீடு செய்யலாம்.

பணத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் வேண்டாம். ஒரு முறை முதலீடு செய்தால் போதும், பென்ஷன் போல ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் வந்து சேரும். நடுத்தர குடும்பங்கள் முதல் ஓய்வு பெற்ற முதியவர்கள் வரை, அனைவரது வாழ்வாதாரத்தையும் மாற்றப்போகும் அந்த இரண்டு மணி மேக்கிங் திட்டங்கள் எவை? அவற்றில் எப்படி மாதம் 20,000 ரூபாய் வரை வருமானம் பெறுவது?
இரு முக்கிய திட்டங்கள்!
இன்றைய காலகட்டத்தில் பலரும் நினைப்பது இன்றைய காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் வயதான காலகட்டத்தில் கஷ்டப்படக் கூடாது. வயதான காலத்தில் நடுத்தர குடும்பங்களுக்கும், ஓய்வுபெற்ற முதியவர்களுக்கும் தங்களின் மாதாந்திர செலவுகளை சமாளிக்க, ஒரு நிலையான வருமானம் என்பது மிக அவசியமானது. அந்த சமயத்தில் வங்கிகளின் வழக்கமான பிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை விட அதிக லாபம் தரும், அதே சமயம் 100% பாதுகாப்பான இரண்டு அரசுத் திட்டங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானம் திட்டம் (POMIS)
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம்
மாதாந்திர வருமான திட்டமானது அஞ்சலகத்தால் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், அதற்கான வட்டி ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக் கணக்கில் சேரும். தற்போதைய சூழலில் வட்டி விகிதமானது ஆண்டுக்கு 7.4% ஆக வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ஒரு தனிநபர் 9 லட்சம் ரூபாய் வரையிலும், கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் 15 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம். இவ்வாறு 15 லட்சம் முதலீடு செய்தால், உங்களுக்கு மாதம் 9,250 ரூபாய் வருமானமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதன் பிறகு உங்கள் அசல் தொகை அப்படியே உங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
அஞ்சலகத்தின் மற்றொரு பிரபல திட்டங்களில் ஒன்றான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பான சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.2% வழங்கப்படுகிறது. அதன் வட்டி தொகை 3 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் ஒரு மூத்த குடிமகன் தனிப்பட்ட முறையிலோ அல்லது தனது துணையுடன் இணைந்தோ அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்யலாம். இதற்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை 61,500 ரூபாய் வட்டியாக கிடைக்கும். இதை மாதத்திற்கு கணக்கிட்டால், ஒரு மாதத்திற்கு 20,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தின் காலமானது 5 ஆண்டுகளாகும். இதை மேற்கொண்டு 3 ஆண்டுகள் அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கான கணக்கை உங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் தொடங்கி கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள் திட்டத்தில் முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை திரும்ப பெற விரும்பினால், 1% முதல் 2% வரை அபராதத் தொகை கழிக்கப்படும். இது நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை எடுக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. மேற்கண்ட இரு திட்டங்களுமே மத்திய அரசின் நேரடி திட்டங்கள் என்பதால், உங்கள் பணத்திற்கு முழு உத்தரவாதம் உண்டு. இதில் ரிஸ்க் என்பதே கிடையாது.
என்ன செய்யலாம்?
மேற்கண்ட இரு திட்டங்களும் நடுத்தர வர்க்கத்தினரின் நிதிச் சுமையை குறைக்க பெரிதும் உதவும். இருப்பினும், எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்யும் முன், உங்கள் குடும்பத் தேவை மற்றும் நிதி இலக்குகளுக்கு அது பொருந்துமா என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications