ரூ.10,000 முதலீட்டுக்கு ரூ.36 லட்சம் வருமானம்! உங்கள் எதிர்காலத்திற்கு இந்த திட்டம் போதும்! 100% உத்தரவாதம்!

நாளுக்கு நாள் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்தச் சூழலில் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் சேமிப்பு இருக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நம்புபவர்கள் அதில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இன்றளவும் பழமைவாத முதலீட்டாளர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்களே கை கொடுக்கின்றன. அப்படித்தான் அரசு வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (PPF) பல முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் மாதா மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம்: இந்தத் திட்டம் போஸ்ட் ஆபீஸ் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்தை அரசு நிர்ணயித்துள்ளது. இது ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டம்.

ரூ.10,000 முதலீட்டுக்கு ரூ.36 லட்சம் வருமானம்! உங்கள் எதிர்காலத்திற்கு இந்த திட்டம் போதும்! 100% உத்தரவாதம்!

அதாவது ஒரு சில சேமிப்பு திட்டங்கள் ஐந்தாண்டுகளில் முதிர்வுக்கு வரும். ஒரு சில திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் முதிர்வுக்கு வரும். ஆனால் இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.

மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கி மாதந்தோறும் ரூ.10,000 செலுத்தினால் ஆண்டுக்கு ரூ. 10,000 × 12 = ரூ. 1,20,000 சேமித்திருப்பீர்கள். 15 ஆண்டுகளுக்கும் இதை தவறாமல் செய்யும் பட்சத்தில் உங்கள் மொத்த முதலீடு 1,20,000 × 15 = ரூ. 18,00,000 இருக்கும்.

Also Read

பிபிஎஃப் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம். எனவே ரூ. 1.2 லட்சம் என்பது 1.5 லட்சம் வரம்பிற்குள் உள்ளது.

இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும் பட்சத்தில் 15 ஆண்டுகள் கழித்து சுமார் ரூ.13.56 லட்சம் வருமானமாக கிடைக்கும் 15 ஆண்டுக்கு அரசு 7.1% வட்டியை மாற்றாமல் வைத்திருந்தால்.. மாதம் ரூ.10,000 செய்யப்படும் முதலீட்டுக்கு உங்களுக்கு ரூ.31.56 லட்சம் வருமானம் கிடைக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பது அனைவரும் அறிந்தது தான். இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதை விட அரசு திட்டங்களில் முதலீடு செய்வது 100% உத்தரவாதமான வருமானத்தை வழங்கும். இருப்பினும் இந்த 7.1 சதவீத விகிதம் மாறுதலுக்கு உட்பட்டவை.

ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். ஆனால் ஒரு சில ஆண்டுகள் தொடர்ந்து வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமலும் இருந்துள்ளது. இது அரசு எடுக்கும் முடிவை பொருத்தது.ஆனால் எந்த வட்டி விகிதம் வழங்கப்பட்டாலும் நீங்கள் PPF கால்குலேட்டரை பயன்படுத்தி எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள்? அதற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்? என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனிலேயே இது போன்ற கால்குலேட்டர்கள் இருக்கிறது.

ரூ.31.56 லட்சம் வருமானம் என்பது 7.1% வட்டிக்கான கணக்கீடு. இதே தொகை தான் உங்களுக்கும் கிடைக்கும் என்று கட்சிதமாக கணித்து சொல்ல முடியாது. அரசு நிர்ணயிக்கும் வட்டி விகிதங்களைப் பொறுத்து இறுதி வருமானம் சற்று மாறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+