5 ஆண்டுகளுக்கு ரூ.5,500 வட்டி வேண்டுமா? ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! இந்த அரசு திட்டம் பற்றி தெரியுமா?

மாதம் மாதம் வருமானத்தை தரக்கூடிய அரசு திட்டம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? வாடகை வருமானத்தைப் போலவே கூடுதல் வருமானம் ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்காகவே மத்திய அரசு போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் எனும் திட்டத்தை வழங்கி வருகிறது. இதை மாதாந்திர வருமானத் திட்டம் என்றும் கூறுவார்கள். இந்த திட்டத்தில் ஒரே ஒரு முறை முதலீடு செய்தால் மாதா மாதம் வட்டி வருமானம் பெற முடியும்.

தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. தனி நபர்கள் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இப்படி செய்வதால் ஒவ்வொரு மாதமும் ரூ. 5,500 என்ற வட்டி வருமானத்தை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குப் பெற முடியும்.

5 ஆண்டுகளுக்கு ரூ.5,500 வட்டி வேண்டுமா? ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! இந்த அரசு திட்டம் பற்றி தெரியுமா?

மாதாந்திர வருமானத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?: இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் இந்தத் திட்டத்தில் பாதுகாப்பாக அதே சமயம் நிலையான வருமானத்தை பெற விரும்பும் முதலீடாளர்கள் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்களுக்கு மாதம் வரும் செலவுகளை ஈடுகட்ட உதவும் வகையில் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் மூலம் வட்டி வருமானம் கிடைக்கும். இதன் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள்.

Also Read

ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு சேவிங்ஸ் அக்கவுண்டில் வட்டி வரவு வைக்கப்படும். 5 ஆண்டுகள் கழித்து முதலீட்டு தொகையை அப்படியே திரும்பப் பெறலாம்.

முதலீட்டு வரம்பு: குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் தொடங்கி முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக தனிநபர்கள் ரூ.9 லட்சம்.. கூட்டு கணக்கு வைத்திருந்தால் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

யாருக்கு ஏற்றது?: பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.. பணிக்கு பின்னர் குறிப்பிட்ட தொகை கைக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாராளமாக இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

ரூ.9 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்?: ஒரு நபர் ரூ.9 லட்சத்தை போஸ்ட் ஆபீஸ் மந்த்லி இன்கம் ஸ்கீமில் முதலீடு செய்தால் தற்போது வழங்கப்படும் 7.4% வட்டி விகிதத்தில் ஒரு ஆண்டுக்கு வட்டியாக 66,600 ரூபாய் கிடைக்கும். இதை மாத அடிப்படையில் பிரித்தால் 5,550 வரும். 5 ஆண்டுகள் அதாவது தொடர்ந்து 60 மாதங்களுக்கு ரூ. 5550 வட்டி பெறலாம். ஐந்து ஆண்டுகளில் கிடைக்கும் மொத்த வட்டி 3,33,000 ரூபாய். முதிர்வின்போது நீங்கள் உங்களுடைய அசல் தொகையை அப்படியே திரும்பப் பெறலாம்.

வட்டியை எடுக்காமல் விட்டால் என்ன நடக்கும்?: கணக்கு வைத்திருப்பவர் வட்டியை எடுக்காமல் விட்டு விட்டால் அதற்கு கூடுதல் வட்டி எதுவும் கிடைக்காது. பணம் வளர்ச்சியின்றி அப்படியே அக்கவுண்டில் இருக்கும். வட்டியை சிறப்பாக பயன்படுத்த உங்கள் போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்டை இந்த திட்டத்தில் இணைத்து அதில் வரவு வைக்கும் படி சொல்லலாம். அவ்வாறு வரவு வைக்கப்படும் ரூ.5,550 தொகையை வீட்டு செலவுகள், மருத்துவச் செலவுகள் அல்லது பிற செலவுகளுக்கு பயன்படுத்தலாம் அல்லது வட்டியை கூட்டி வட்டி தரும் பிற முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

வாடகை வீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் போலவே கூடுதல் வருமானம் ஈட்ட நினைப்பவர்கள் இது போன்ற திட்டங்களை தாராளமாக பயன்படுத்தலாம். பணியிலிருந்து கொண்டு கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைக்கும் நபர்களும் இதில் முதலீடு செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+