தற்போது இளம் வயதிலேயே குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்து வைத்து விரைவிலேயே ஓய்வு பெற்று விட வேண்டும் என்பதுதான் பலரது எண்ணமாக இருக்கிறது .அந்த வகையில் சிறு வயதிலேயே கோடீஸ்வரராக வேண்டும் என்பதற்கான முக்கியமான டிப்ஸ்களை இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
முறையான நிதி திட்டம்: ஒரு நபர் படித்து முடித்து வேலைக்கு வந்து முதல் ஊதியம் வாங்க தொடங்கிய காலத்தில் இருந்தே முறையான நிதி திட்டம் திட்டமிடலை வைத்திருக்க வேண்டும். உங்களது செலவினம் எவ்வளவு, உங்களது வருமானம் எவ்வளவு, அதில் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் குறிப்பாக வாடகை, போக்குவரத்து செலவு, மளிகை சாமான் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு முறையான நிதி திட்டமிடலை உருவாக்கிக் கொண்டால், அதன் மூலம் தேவையற்ற செலவுகளை குறைத்து முதலீட்டுக்கும் சேமிப்பிற்கும் கணிசமான தொகையை ஒதுக்கி விட முடியும்.

வருமானத்தை பெருக்குவது: இது போன்ற நிதி திட்டமிடல்கள் மூலம் உங்களுக்கு எவ்வளவு வருமானம் பற்றாக்குறையாக இருக்கிறது, அதனை இன்னும் எப்படி அதிகப்படுத்த வேண்டும் என்பதற்கான ஒரு ஐடியா கிடைத்து விடும். தற்போது நமது செலவினங்களை கண்காணிப்பதற்கே பல்வேறு செயலிகளும் தற்போது கிடைக்கின்றன. அது மட்டும் இன்றி சரியான முறையில் திட்டமிட்டு முதலீட்டு முடிவுகளை எடுத்து அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் .
வாழ்க்கை இலக்குகள்: சேமிப்புகளுக்கு இலக்கு நிர்ணயித்துக் கொள்வது உதாரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான் இவ்வளவு தொகையை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கு ஏற்ற வகையில் தொடர்ச்சியான முறையில் முதலீட்டினை மேற்கொள்ளும் போது ஒரு நபர் மிக எளிமையாக இளம் வயதிலேயே அவர் நினைத்த ஒரு தொகையை சேமித்து விட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் இது ஒரு நிதி ரீதியான ஒழுக்கத்தை வழங்குவதாக கூறுகின்றனர். குறிப்பாக ஒரு வீட்டினை வாங்குவது ,ஒரு வாகனத்தை வாங்குவது , திருமணத்திற்காக பணத்தை சேர்த்து வைப்பது அல்லது ஒரு தொழில் தொடங்குவதற்கு அல்லது ஓய்வு காலத்திற்கு என இலக்குகளை நிர்ணயம் செய்து, அதற்கேற்ற வகையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
சிறுவயதிலேயே தொடங்க வேண்டும்: எவ்வளவு சிறுவயதிலேயே முதலீட்டை தொடங்குகிறீர்களோ அவ்வளவு சீக்கிரமாக உங்களால் ஒரு கணிசமான தொகையை பெற்று விட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். உதாரணமாக ஒரு நபர் மாதம் தோறும் 20 ஆயிரம் ரூபாயை எஸ்ஐபி முறையில் ஆண்டுக்கு 15 சதவீதம் காம்பவுண்டிங் முறையில் லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்தால் 13 ஆண்டுகளிலேயே அவரிடம் ஒரு கோடி ரூபாய் சேர்ந்து விடும் .
பன்முகம் தன்மை கொண்ட முதலீடு : வெறுமனே பங்குகளில் மட்டும் முதலீடு செய்யாமல் முதலீடுகளை பரவலாக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த முறையில் ஒரு முதலீடு சரிவடைந்தால் கூட மற்ற முதலீடுகள் அதனை ஈடுகட்டும் வகையிலான லாபத்தை தந்துவிடும்.
இன்சூரன்ஸ் அவசியம்: அது மட்டும் இன்றி நீண்ட கால அடிப்படையில் இளம் வயதிலேயே செல்வத்தை சேர்த்து விட வேண்டும் என முடிவு செய்பவர்கள் முக்கியமாக டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியவற்றை எடுப்பதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும் என்கின்றனர் முதலீட்டு துறை நிபுணர்கள்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications