20 வருட ஹோம் லோனை 12 வருஷமா குறைக்கலாம்!லட்சங்களை மிச்சப்படுத்தும் ஒரு சூப்பர் EMI மேஜிக்!

வீடு என்பது பலருக்கும் ஒரு வாழ்நாள் கனவு, ஆனால் அந்த கனவை நிறைவேற்ற பலருக்கும் உதவிகரமாக இருப்பது வீட்டுக் கடன் தான். ஆனால் அந்த கடனே சில சமயங்களில் பெரும் சுமையாக மாறிவிடுகிறது. பல வருட கால அளவு என்பது ஒரு தீராத சுமை போல பலருக்கும் தெரியலாம். வங்கிக் கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் EMI கழியும் போது, எப்போது தான் முடியும் என்ற வேதனையை உருவாக்கலாம்.

ஆனால் இதிலும் சரியாக திட்டமிட்டால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே உங்கள் கடனை கட்டி முடிக்கலாம். அதன் மூலம் லட்சக்கணக்கில் மிச்சப்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு உங்கள் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க முடியும்,. அதற்காக நீங்கள் முன்கூட்டியே பல லட்சங்களை மொத்தமாக செலுத்த வேண்டியதில்லை, உங்கள் மாதத் தவணையில் செய்யப்போகும் ஒரு சின்ன மாற்றம் போதும்.
இந்த எளிய முறையை பின்பற்றுவதன் மூலம், வட்டி என்ற பெயரில் வங்கிக்கு நீங்கள் வாரி வழங்கும் பல லட்சக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்த முடியும். அந்த ரகசிய ஃபார்முலா என்ன? உங்கள் கடன் காலத்தை 8 ஆண்டுகள் முன்னதாக முடிப்பது எப்படி? உங்கள் கனவு இல்லத்தை விரைவாக கடன் இல்லாத இல்லமாக மாற்றும் அந்த வித்தையை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

20 வருட ஹோம் லோனை 12 வருஷமா குறைக்கலாம்!லட்சங்களை மிச்சப்படுத்தும் ஒரு சூப்பர் EMI மேஜிக்!

நீங்கள் செலுத்தி வரும் வீட்டுக் கடன் தவணையில் ஆண்டுக்கு ஒரு தவணை அதிகமாக செலுத்தினாலே போதும். இதுவே உங்கள் கடனுக்கான 20 ஆண்டு கால அவகாசத்தை 15 ஆண்டுகளாக குறைக்கும். ஏனெனில் கூடுதலாக செலுத்தும் தொகையானது நேரடியாக உங்கள் கடனில் இருந்து குறைய வழிவகுக்கும். ஆக இந்த ஒரு சிறிய மாற்றம், உங்களுக்கு பல மாதங்களை மிச்சப்படுத்த உதவும். வட்டி தொகையையும் மிச்சப்படுத்த உதவும். உங்களுடைய சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க, மெதுவாக உங்கள் மாத தவணையை அதிகரித்தாலும், அதுவும் பெரிய அளவிலான தொகையை மிச்சப்படுத்த உதவும். உதாரணத்திற்கு வருடத்திற்கு 5% தொகையை அதிகரித்தால், 20 ஆண்டு கால தவணையானது 12 ஆண்டுகளில் முடிவடையும். 50 லட்சம் ரூபாய் கடனில் 9% வட்டி விகிதத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த உதவும்.

Also Read

இந்த யுக்தியானது மிகவும் எளிதான ஒன்று தான். ஆனால் பலன் மிகப்பெரியது. நீண்ட கால அடிப்படையில் கடன் வாங்கும் போது வங்கிகள் அதிக லாபத்தை ஈட்டுகின்றன. பலரும் இதை அறியாமலேயே மாதம் மாதம் வெறும் தவணையை மட்டும் செலுத்தி, வட்டிக்கு வட்டி என செலுத்தி பெரிய அளவிலான தொகையை தங்களுக்கு அறியாமலேயே இழக்கிறார்கள். ஆனால் திட்டமிட்டு முன்கூட்டியே திட்டமிட்டு அசலை குறைப்பதன் மூலம், வட்டியும் குறையும். கடனுக்கான கால அவகாசமும் குறையும்.

உதாரணத்திற்கு 20 ஆண்டுகால கடனில், முதல் சில ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் தொகையானது பெரும்பகுதி வட்டிக்கே சென்று விடும். ஆக அசல் தொகையானது பெரிய அளவில் குறையாமலேயே இருக்கும். ஆனால் நீங்கள் திட்டமிட்டு அசலில் செலுத்தும் போது, வட்டி தொகை குறையும். ஆக வங்கியின் வசதிக்கு ஏற்ப செயல்படாமல், உங்கள் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது கூடுதல் தொகையை செலுத்தினால், அது பெரிய அளவிலான தொகையை மிச்சப்படுத்த உதவும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+