ஒவ்வொரு சாமானிய மனிதனின் கனவும் ஒன்றுதான். தன் வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு சேர்த்த பணம், ஒரு நாள் தன் குடும்பத்தின் பெரிய தேவைகளுக்கு கை கொடுக்க வேண்டும் என்பது தான் அது. ஆனால் பணம் பெருக வேண்டும், அதே சமயம் ஒரு ரூபாய் கூட நஷ்டமாகி விடக் கூடாது என்ற பயம் கலந்த தயக்கம் எப்போதும் நமக்குள்ளே இருக்கும்.

பங்குச் சந்தை ரிஸ்க் இல்லை, ஏமாற்றும் போலி நிறுவனங்கள் என்ற பயம் இல்லை. இந்திய அரசாங்கத்தின் நேரடி பாதுகாப்பில், உங்கள் சேமிப்பு ஒரு ஆலமரம் போல வளர்ந்து, வெறும் 5 ஆண்டுகளில் 36 லட்சம் ரூபாய் வரை உங்கள் கைகளில் கிடைக்கப் போகிறது என்றால் அது எவ்வளவு பெரிய நிம்மதி? இனி நம் எதிர்காலத்திற்காக என்ன செய்யப் போகிறோம் என்று இரவு தூக்கத்தை தொலைக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு, இந்த திட்டம் ஒரு பெஸ்ட் ஆப்ஷன் எனலாம். உங்கள் கனவுகளை நனவாக்க போகும் அந்த திட்டம் எது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ரிஸ்க் எடுக்க எல்லாம் விருப்பமே இல்லை. ஆனால் ஒரளவுக்கு வருமானம் போதும் என நினைப்பவர்களுக்கு, தேசிய சேமிப்பு பத்திரம் (NSC) திட்டமானது ஏற்றது எனலாம். ஏனெனில் அஞ்சலகத்தின் மூலம் வழங்கப்படும் இந்த திட்டத்தில் சந்தை அபாயம் கிடையாது. நிலையான வருமானம் கிடைக்கும். வரி சலுகையும் கிடைக்கும்.
என்.எஸ்.சி எனப்படும் இந்த பத்திர திட்டத்தை அஞ்சலகம் மூலம் வழங்கப்படுவதால், பாதுகாப்புக்கு பிரச்சனையே இல்லை. அதோடு சந்தை பற்றிய அச்சமும் பட தேவையில்லை. தற்போதைய சூழலில் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த வட்டி விகிதமானது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படலாம். இருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த திட்டத்தில் உள்ள ஒரு முக்கிய அம்சமே கூட்டு வட்டி தான். இந்த வட்டியானது ஆண்டுக்கு ஒரு முறை அசலுடன் சேர்க்கப்பட்டு. அடுத்த ஆண்டு வட்டிக்கும் சேர்த்து வட்டி கணக்கிடப்படும்.

உதாரணத்திற்கு உங்கள் முதலீடு 25 லட்சம் ரூபாய் என வைத்து கொள்வோம். இந்த திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போது வட்டி விகிதம் 7.7% என்பதை கணக்கிட்டால் கிடைக்கும் வட்டி வருமானம் சுமார் 11.47 லட்சம் ரூபாயாகும். ஆக 5 ஆண்டுகள் முடிவில் 36.47 லட்சம் ரூபாய் கார்ப்பஸ் தொகையானது கிடைக்கும்.
இந்த கணக்கை நீங்கள் 1000 ரூபாயில் இருந்தே தொடங்கி கொள்ளலாம். இதில் அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. ஆக உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ, அவ்வளவு செய்து கொள்ளலாம். அதற்காக உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலத்திற்கு சென்று அடிப்படையான கே.ஒய்,சி ஆவணங்களை கொடுத்து தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் எந்த ஒரு இந்திய குடிமகனும் இணையலாம். மைனர் குழந்தைகள் பெயரிலும் தொடங்கி கொள்ளலாம். ஆனால் குழந்தை 18 வயதை அடையும் போது தான் இந்த கணக்கு முதிர்வடையும்.
மொத்தத்தில் நீண்ட கால அடிப்படையில் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய திட்டமிடுபவர்களுக்கு ஏற்ற திட்டமாகும். இந்த பத்திர திட்டத்தில் கடன் வசதியும் உண்டு. ஆக சிறு மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications