கொரோனவின் வருகைக்கு பிறகு மக்களிடத்தில் செலவுகள் குறைந்துள்ளது. மாறாக சேமிப்பு, முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உண்மையில் கொரோனாவுக்கு பின்னர் அத்தியாவசியம் தவிர, மற்ற செலவுகளுக்கு மக்கள் யோசிக்கின்றனர் எனலாம். குறிப்பாக இந்த காலகட்டத்தில் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது எனலாம்.
பொதுவாகவே இளமை காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. முதுமை காலத்திலாவது எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான் பலரின் எண்ணமும். அப்படி இருப்பதற்கு நிதி ரீதியாக பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலே ஓரளவுக்கு பிரச்சனைகள் குறையும்.
SCSS திட்டம்
இதற்காக இன்றைய காலகட்டத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதிலும் மூத்த குடிமக்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும் கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் இன்றும் அதிகம் விரும்பப்படுவது அஞ்சலக திட்டங்கள் தான். அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு என சிறப்பான திட்டமாக இருப்பது SCSS திட்டம் தான்.
நிபந்தனை இது தான்
இந்த திட்டம் அஞ்சலக திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சேமிப்புத் திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.
வயது வரம்பு
இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணைய ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான். எனினும் இந்த சேமிப்பு கணக்கில் HUF & NRI-கள் இணைய முடியாது.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த பணம் ஒரு வைப்புத் தொகையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
வட்டி விகிதம் எவ்வளவு?
இந்த திட்டத்தில் காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. கடந்த சில காலாண்டுகளாகவே வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக வட்டி விகிதமானது 7.40% ஆக தொடர்ந்து உள்ளது. இதன் மூலம் நல்லதொரு வருவாயினை ஓய்வூகாலத்திலும் பெற முடியும்.
SCSS முதிர்வுகாலம்
இந்த SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தில் முன் கூட்டியே கணக்கினை முடித்துக் கொள்ளவும் வழி உண்டு. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் அனுமதிக்கப்படுகிறது. இதற்கும் கட்டணம் உண்டு.
வரி சலுகை உண்டா?
மூத்த குடி மக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு. இது 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கோரலாம். அதோடு இந்த வைப்பு தொகையின் மூலம் ஈட்டப்பட்ட வட்டி முழுமையாக வரி விதிக்கப்படக்கூடியது தான். அதோடு டிடிஎஸ்ஸூம் பிடித்தம் செய்யப்படும். வருமான வரி விதிக்கப்பட்டாலும், 15h அல்லது 15g படிவத்தை வழங்க வேண்டும்.
வங்கிகளில் தொடங்கலாம்
இந்த சேமிப்பு திட்டமானது பல முன்னணி பொதுத்துறை மற்றும் சில தனியார் வங்கிகளிலும் வழங்கப்படுகிறது. ஆக வங்கிகளிலும் இந்த சேமிப்பு திட்டத்தினை நீங்கள் பெற்று பயனடையலாம். உண்மையில் இதுபோன்ற சேமிப்பு திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் வயதான காலத்தில் யாரையும் சாராமல் வாழ பயன்படும்.
ரூ.14 லட்சம் எப்படி சாத்தியம்
நீங்கள் ஓய்வுபெற்ற தொகையில் 10 லட்சம் ரூபாயினை இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.4% என வைத்துக் கொள்வோம். இதில் 5 ஆண்டுகள் முதிர்வின் போது 14,28,964 ரூபாயாக இருக்கும். உங்களுக்கு 4,28,964 ரூபாய் வட்டியாக கிடைக்கும்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications