மாதம் ரூ.2000 முதலீடு செய்யணுமா? எதில் முதலீடு செய்யலாம்.. எது லாபகரமானது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிலவி வரும் நெருக்கடியான நேரத்தில் எப்போதும் நம் கையில் சிறிதேனும் காசு இருக்க வேண்டும் என பலரும் நினைத்திருப்போம். இதற்கு மக்களை பாடாய்படுத்தி வரும் கொரோனாவும் ஒரு முக்கிய காரணம்.

 

பணத்தினை சேமிப்பது என்றால் அந்த காலத்தில் நமது பாட்டிமார்கள் சமயலறையில் கணவன்மார்களுக்கு தெரியாமல் சேமித்தார்களே அப்படியல்ல. நீங்கள் சேமிக்க வேண்டிய பணம் சேமிப்பாகவும் இருக்க வேண்டும். முதலீடாகவும் இருக்க வேண்டும். அதாவது பாதுகாப்பான முதலீடாக, முதலீட்டு பங்கமில்லாத முதலீடாகவும், கணிசமான வருவாயுடனும் இருக்க வேண்டும்.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது என்னால் மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். ஆனால் அதனை எதில் முதலீடு செய்யலாம்? எது லாபகரமானதாக இருக்கும்? பாதுகாப்பானது எது? என்பதை தான் இந்த கட்டுரையில் பார்கக் இருக்கிறோம்.

எஸ்ஐபி சிறந்த ஆப்சன்

எஸ்ஐபி சிறந்த ஆப்சன்

அந்த வகையில் பல நிபுணர்களும் பரிந்துரைப்பது எஸ்ஐபி (SIP investment). நீங்கள் சிறிய அளவில் முதலீடு செய்ய விருப்பினால் அதற்கு முதல் ஆபசன் எஸ்ஐபி எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தான். ஏனெனில் இதில் குறைவான அபாயம் உள்ளது. ஆனால் நல்ல வருவாய் பெருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதிலும் வங்கி வட்டியுடன் ஒப்பிடும்போது இதில் வருமானம் அதிகம்.

என்னென்ன ஃபண்டுகள் பரிந்துரை?

என்னென்ன ஃபண்டுகள் பரிந்துரை?

லார்ஜ் கேப் ஃபண்டுகள்

 • Kotak Bluechip Fund
 • Invesco India Largecap Fund
 • UTI Master share Fund
 • Indiabulls Bluechip Fund
 • ICICI Prudential Bluechip Fund
மிட் கேப்

மிட் கேப்

 • Invesco India Mid Cap Fund
 • DSP Mid Cap Fund
டெப்ட் ஃபண்டுகள்
 

டெப்ட் ஃபண்டுகள்

 • Aditya Birla Sun Life Liquid Fund
 • Nippon India Liquid Fund
 • PGIM India Insta Cash Fund
 • Mahindra Manulife Liquid Fund
 • Axis Liquid Fund
பத்திரங்கள்

பத்திரங்கள்

 • Aditya Birla Sun Life Corporate Bond
 • Nippon India Corporate Bond
 • Invesco India Corporate Bond Fund
 • Aditya Birla Sun Life Retirement Fund
பங்கு சந்தையில் முதலீடு

பங்கு சந்தையில் முதலீடு

எனக்கு லாபம் அதிகம் வேண்டும். நான் ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளேன் என்றால், நீங்கள் பங்கு சந்தையிலும் முதலீடு செய்யலாம். எனினும் நீங்கள் தொடர்ந்து பங்கு சந்தையுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அதாவது தொடர்ந்து கண்கானிக்க வேண்டும். ஈக்விட்டி பங்குகளில் நீண்டகால முதலீடுகளை செய்வதன் மூலம் நீங்கள் நல்ல லாபத்தினை பெற முடியும். ஆனால் இது பங்கு சந்தையில் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இதனை தேர்தெடுக்க வேண்டும்.

அரசின் பிபிஎஃப் திட்டம்

அரசின் பிபிஎஃப் திட்டம்

நீண்டகால நோக்கங்களுக்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம், இந்த பிபிஎஃப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Want to invest Rs.2000 per month? Which fund should i choose?

Investment updates.. Want to invest Rs.2000 per month? Which fund should i choose?
Story first published: Monday, March 22, 2021, 15:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X