தற்போது பெரும்பாலான இளைஞர்கள் தங்களுடைய சம்பளத்தில் கணிசமான பகுதியை முதலீடுகளுக்கு என ஒதுக்குகிறார்கள் . மியூச்சுவல் பண்டுகள் மற்றும் எஸ்ஐபி முதலீடுகள் அனைத்தும் தற்போது மிகவும் எளிமையானதாக மாறிவிட்டன. நம்முடைய போன்களில் இருக்கக்கூடிய செயலிகள் வாயிலாகவே நம்மால் மிக எளிமையாக முதலீடுகளை மேற்கொண்டு விட முடிகிறது.
முதலீடு செய்யக்கூடியவர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்படும். எப்பொழுது என்னுடைய முதலீடு இரட்டிப்பாகும் , என்னுடைய வயதிற்கு நான் எவ்வளவு தொகையை முதலீடு செய்தால் ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் என பல்வேறு சந்தேகங்கள் எழும். அந்த சந்தேகங்களுக்கு தீர்வு தரக்கூடிய முக்கியமான சில விதிகளை தான் நம் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

விதி 72 : நாம் செய்யக்கூடிய முதலீடு எப்பொழுது இரட்டிப்பாக மாறும் என்பதை இந்த விதி 72 மிக எளிமையாக நமக்கு விளக்கி விடும் . உதாரணமாக நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் . உங்களுடைய அந்த முதலீடு எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதாவது 2 லட்சம் ரூபாயாக மாறும் என்பதை தற்போது கணக்கிடலாம். உங்களின் முதலீடு ஆண்டுக்கு ஆறு சதவீத வட்டி/வருமானம் தரக்கூடியது என்றால், அதனை 72/6 என வகுக்க வேண்டும் . இதில் கிடைக்கும் விடை 12 . அப்படி என்றால் 1 லட்சம் ரூபாய் 12 ஆண்டுகளில் 2 லட்சமாக மாறும்.
விதி 114 : விதி 72 எப்படி நம்முடைய பணம் எப்போது இரண்டு மடங்காகும் என காட்டுகிறதோ அதே போல விதி 114 பணம் எப்போது மும்மடங்காக மாறும் என்பதை நமக்கு கணக்கீடு செய்து தரும் . உதாரணமாக 1 லட்சம் ரூபாய் முதலீடு ஆண்டுக்கு 6 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு திட்டத்தில் முதலீடு செய்திருக்கிறீர்கள் எனும் போது , 114/6 கொண்டு வகுக்கும்போது நமக்கு கிடைப்பது 19. அப்படி என்றால் 19 ஆண்டுகளில் உங்களுடைய பணம் என்பது மும்மடங்காக பெருகும் .
விதி 144: உங்களுடைய பணம் எத்தனை ஆண்டுகளில் நான்கு மடங்காக பெருகும் என்பதை அறிந்து கொள்வதற்கு 144 என்ற எண் பயன்படும். மேலே கூறிய உதாரணத்தின் படி 144/6 என வகுத்தால் நமக்கு கிடைப்பது 24. அப்படி என்றால் 1 லட்சம் ரூபாய் முதலீடு 24 ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாயாக உயரும்.
விதி 70: எதிர்காலத்திற்கான பணத்தை முதலீடு செய்வது அவசியம் ஆனால் பணவீக்கத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒரு ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கக்கூடிய பொருளை உங்களுடைய ஓய்வு காலத்தில் பத்து ரூபாய் இருந்தால் தான் வாங்க முடியும் என்ற சூழல் உண்டாகலாம். இது தான் பணவீக்கம். இந்த பணவீக்கத்துக்கு ஏற்ப நம் முதலீடு இருக்கிறதா என கணக்கிட உதவுவது தான் விதி 70. உதாரணமாக உங்களிடம் 50 லட்சம் ரூபாய் இருக்கிறது என வைத்து கொள்வோம்.
இப்போது 50 லட்சம் ரூபாயாக இருக்கும் சொத்தின் மதிப்பு எதிர்காலத்தில் தற்போதைய 25 லட்சத்துக்கு நிகரான மதிப்பு கொண்டதாக எத்தனை ஆண்டுகளில் குறையும் என கணக்கிடலாம். அதற்கு பணவீக்க விகித்தத்தை 70 உடன் வகுக்க வேண்டும். பணவீக்க விகிதம் 5% என வைத்து கொண்டால் 70/ 5= 14. உங்களின் 50 லட்சம் ரூபாய் இன்னும் 14 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதைய 25 லட்சத்துக்கு நிகரான மதிப்புக்கு குறைந்துவிடும். இ
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications