வாடகை வீட்லதான் இருக்கோம்.. ஆனா மெட்ரோ சிட்டி வரி சலுகை நமக்கு மட்டும் கிடைக்க மாட்டேங்குது என்று பெங்களூரு, ஹைதராபாத் ஐடி ஊழியர்கள் இவ்வளவு காலம் ஆதங்கப்பட்டது அரசுக்கு கேட்டு விட்டது போலிருக்கிறது. 2026-ம் ஆண்டுக்கான புதிய வருமான வரி வரைவு விதிகளில் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. பல தசாப்தங்களாக சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த 50% HRA வரிச் சலுகை, இனி இந்தியாவின் வளர்ந்து வரும் 4 முக்கிய நகரங்களுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது.
நீங்கள் பெங்களூரு, ஹைதராபாத், புனே அல்லது அகமதாபாத்தில் வசிப்பவர் என்றால், இது உங்களுக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ் எனலாம். ஏனெனில் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரப்போகும் இந்த மாற்றத்தால், உங்கள் கையில் மிஞ்ச போகும் பணம் கணிசமாக உயரப்போகிறது. இந்த புதிய லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கிறதா? இந்த கூடுதல் வரி சலுகையை எப்படி பெறுவது? பழைய வரி முறைக்கு இது எப்படி புத்துயிர் கொடுத்துள்ளது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

சூப்பர் அறிவிப்பு!
சம்பளதாரர்கள் வீட்டு வாடகை படி (HRA) கணக்கிடும் போது, 50% சலுகை பெறும் மெட்ரோ நகரங்கள் பட்டியலில் இதுவரை டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை மட்டுமே இருந்தன. ஆனால் இனி அந்த பட்டியலில் பெங்களூரு, புனே, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களும் சேர்க்கப்படவுள்ளன. இதன் மூலம் இனி மேற்கண்ட 4 நகரங்களில் வசிப்பவர்களும் இனி அதிகப்படியான வீட்டு வாடகை படி வரி விலக்கு பெற முடியும்.
நீங்கள் ஒரு மாத சம்பளதாரராக இருந்து வாடகை வீட்டில் வசித்து வந்தால், உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியாக வரும் வீட்டு வாடகை படிக்கு வரி விலக்கு பெறலாம். இது வருமான வரிச் சட்டம் பிரிவு 10(13A)-ன் கீழ் வழங்கப்படுகிறது.
வரி விலக்கு எப்படிக் கணக்கிடப்படுகிறது?
HRA வரி விலக்கு என்பது நீங்கள் வாங்கும் முழு தொகைக்கும் கிடைக்காது. கீழே உள்ள மூன்று தொகைகளில் எது மிக குறைவாக இருக்கிறதோ, அந்த தொகைக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும்.
1. உங்கள் நிறுவனம் உங்களுக்கு வழங்கும் உண்மையான HRA தொகை.
2. நீங்கள் வசிக்கும் இடத்தை பொறுத்து அடிப்படை சம்பளத்தில் (Basic + DA)
பட்டியலில் உள்ள மெட்ரோ நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களோடு, தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத் நகரங்களுக்கு 50%, இதர நகரங்களுக்கு 40% வரி விலக்கு கிடைக்கும்.
3. நீங்கள் செலுத்திய உண்மையான வாடகை - அடிப்படை சம்பளத்தில் 10%.
Actual Rent Paid - (10% of Basic Salary + DA)
உதாரணத்திற்கு உங்கள் மாத அடிப்படை சம்பளம் 50,000 ரூபாய். நிறுவனத்திடம் இருந்து பெறும் HRA 20,000 ரூபாய் என வைத்துக் கொள்வோம். நீங்கள் சென்னையில் வசித்து கொண்டு மாதம் 15,000 ரூபாய் வாடகை செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நிபந்தனை 1: நிறுவனம் தரும் HRA - ரூ. 20,000
நிபந்தனை 2: 50% அடிப்படை சம்பளம் - ரூ. 25,000
நிபந்தனை 3: வாடகை - 10% அடிப்படைச் சம்பளம் (15,000 - 5,000 ரூபாய்) = ரூ. 10,000
இங்கு 10,000 ரூபாய் தான் மிகக் குறைந்த தொகை. எனவே, உங்களுக்கு மாதம் 10,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 1,20,000 ரூபாய்க்கு வரி விலக்கு பெற முடியும்.
கவனிக்க வேண்டியது என்ன?
நீங்கள் பழைய வரி முறையில் இருந்தால் மட்டுமே HRA வரிச்சலுகை கிடைக்கும். புதிய வரி முறையில் இந்த சலுகை கிடையாது. உங்களுடைய ஆண்டு வாடகை 1 லட்சம் ரூபாயை தாண்டினால், உங்கள் வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் பெற்றோருடன் வசித்து, அவர்களுக்கு முறைப்படி வாடகை செலுத்தியதற்கான ரசீதுகளை வைத்திருந்தால் கூட HRA விலக்கு கோரலாம். ஆனால் அந்த வாடகை தொகை உங்கள் பெற்றோரின் வருமானமாக கருதப்படும். சொந்த வீடாக இருந்தால் HRA விலக்கு கோர முடியாது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications