நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போது பணம் சம்பாதிக்கவில்லை என்றால், நீங்கள் இறக்கும் வரை வேலை செய்ய வேண்டியிருக்கும். இது வெறும் வாசகம் மட்டுமல்ல. உலகப்புகழ் பெற்ற ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி நமக்கு தரும் வாழ்நாள் எச்சரிக்கை. பல தசாப்தங்களுக்கு முன்பு அவர் சொன்ன முதலீட்டு தத்துவங்கள், இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திலும் ஏன் இவ்வளவு வலுவாக பொருந்துகின்றன?
பலர் சம்பளத்திற்காக உழைக்கிறார்கள். ஆனால் பணக்காரர்கள் பணத்தை தங்களுக்காக உழைக்க வைக்கிறார்கள். இந்த சிறிய வித்தியாசம் தான் ஒரு நடுத்தர வர்க்கத்திற்கும், பெரும் செல்வந்தருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை உருவாக்குகிறது. கியோசாகியின் முதலீட்டு யோசனைகள் வெறும் கோட்பாடுகள் மட்டுமல்ல. அவை உங்கள் பொருளாதார சுதந்திரத்திற்கான முக்கிய வழிகாட்டிகள் எனலாம்.

சம்பளத்தை மட்டுமே நம்பி இருக்கும் அந்த ரேஸில் வெற்றி பெறுவது என்பது கடினம். சம்பளம் எனும் ரேஸில் உடன் பாசிவ் வருமானத்தையும் சேர்க்க வேண்டும். அப்போது தான் எளிதாக இலக்கை அடைய முடியும். ஆக உங்கள் உழைப்பு இல்லாமல், மாதம் தோறும் பணம் வந்து சேரும் விதமான வருமானத்தை உருவாக்குவது எப்படி? இதற்கு ராபர்ட் கியோசாகி கூறும் முக்கிய யோசனைகள்.
சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கி, அதை வளர்ப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் அது உங்கள் வாழ்வையே மாற்றக் கூடிய வல்லமை கொண்டது என்று கூறும் கியோசாகி, ஊழியர்கள் தங்கள் நேரத்தை பணத்திற்காக விற்கிறார்கள். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அவர்களின் வேலை செய்யும் நேரம் முடிந்துவிட்டால் வருமானமும் நின்றுவிடும். அவர்கள் நேரத்தை செலவழித்து பணத்தை பெறுகிறார்கள். ஆனால் தொழில் முனைவோர் அப்படியில்லை. அவர்கள் நேரத்தை விற்பதில்லை, மாறாக அவர்கள் ஒரு அமைப்பை உருவாக்குகிறார்கள். அந்த அமைப்பு வேலை செய்யும் போது, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும் அல்லது வேலையில் இல்லாத நேரத்திலும் பணம் வந்து கொண்டே இருக்கும். இது உங்களையும், உங்கள் தலைமுறையையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும். இருப்பினும் இது எல்லோருக்கும் வெற்றிகரமாக அமைவதில்லை. ஆக பாசிவ் வருமானத்திற்காக ரியல் எஸ்டேட் மற்றும் பேப்பர் சொத்துகள், கமாடிட்டிகள் மற்றும் ஆன்லைன் மணி, ஆரோக்கியமான உடல் நலம் என சில பரிந்துரைகளை கொடுத்துள்ளார்.
பாசிவ் வருமானத்துக்கு ரியல் எஸ்டேட் என்பது ஒரு சிறந்த வழி. நீங்கள் வாடகை வருமானம் தரக்கூடிய ஒரு சொத்தில் முதலீடு செய்தால் அது லாபகரமானது. அது மாத மாதம் வாடகை என்ற பெயரில் வருமானம் ஈட்ட உதவும். இதில் வரியும் நீண்ட கால அடிப்படையில் குறைவு. இதன் மூலம் படிப்படியாக உங்கள் 9 டூ 5 வேலையை விட முடியும். ஒரு தொழிலை செய்ய முடியாத பலருக்கும் இது ஏற்ற ஒன்றாக இருக்கும். அடுத்து பேப்பர் சொத்துக்கள். அதாவது பங்குகள், பத்திரங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற தொடர் முதலீடுகள் பாசிவ் வருமானத்திற்கான அம்சங்களாக இருக்கும். இதன் மூலம் பணம் இருக்கும் போது இளமை காலத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், தேவைப்படும் அதிலிருந்து வருமானம் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் தினசரி அலுவலகம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
பணவீக்கத்தால் உங்கள் பணத்தின் மதிப்பு குறையலாம். ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம், வெள்ளி மற்றும் ஆயில் போன்றவற்றை வாங்கி ஹோல்டு செய்யலாம். இதை வெறுமனே வாங்காமல், உங்கள் முதலீட்டுடன் கூடாக வாங்க வேண்டும். ஏனெனில் பொருளாதாரம் எப்போதும் வளர்ச்சி பாதையில் இருக்கும் என்று கூறிவிட முடியாது. உங்களுக்கு கால அவகாசம் என்பது அதிகம் கிடைக்காது. ஆக செய்வதை சரியாக திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். அதையும் இளமை காலத்தில் இருந்தே தொடங்க வேண்டும். உங்கள் வருமானத்தையும் நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்க வேண்டும்.
பணம் முக்கியம் தான். ஆனால் உங்களுடைய உடல்நிலை மோசமாக இருக்கும் போது அது பயனற்றது. பணத்தை வெறுமனே சம்பாதித்து உடல் நலம் சரியில்லாமல் போனால் அதை அனுபவிக்கவும் முடியாது. ஆக உங்கள் சொத்தை மேம்படுத்துவதில் உங்கள் உடல் நலமும் முக்கியம். அதுவும் சிறந்த சொத்து தான். அது தான் உங்களை மகிழ்ச்சியான பாதைக்கு அழைத்து செல்லும். ஆக நிதி சொத்துகளுடன், ஆரோக்கியம் என்னும் சொத்தையும் மேம்படுத்துங்கள் என கூறுகிறார்.
மேற்கண்ட பாசிவ் வருமான திட்டங்களோடு ஆன்லைன் வருமானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது யூடியூப், ஆன்லைன் கன்டென்ட், ஆன்லைன் விற்பனை என அனைத்தும் உங்கள் வருமானத்தை உயர்த்துவதற்கான வழிகள். ஆக அதையும் உங்களுடைய பாசிவ் வருமான திட்டங்களில் சேர்த்து கொள்ளலாம். ஏனெனில் இன்றைய இணைய உலகம் என்பது பெரியது. அது உலக அளவில் எளிதாக உங்களை கொண்டு சேர்க்கும். ஆக உங்கள் வருமானமும் பெரிதாக இருக்கும்.
அடிப்படையில் உங்களுடைய நல்ல உறவுகளும் உங்களுக்கான முக்கிய சொத்துக்கள் தான். உங்களுடைய நெட்வொர்க், பர்சனல் பிராண்டிங், நம்பிக்கை என்பது உங்களுடைய வணிகத்தை எளிமையாக கொண்டு சேர்க்க உதவும் முக்கிய பாதைகள். அவை உங்களுக்கு புதிய புதிய பாதைக்கு வழிகாட்டும். ஆக உங்களுடைய வருமானத்தை எளிதாக அதிகரிக்க முடியும். இதுவும் உங்கள் நீண்ட கால வெற்றிக்கான ஒரு முக்கிய வழிகாட்டி என்கிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications