நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை விட அதை எப்படி மேலாண்மை செய்கிறோம் என்பது தான் வருங்காலத்தில் நம் செல்வத்தை நிர்ணயம் செய்ய போகிறது. அதிக வருமானம் என்பதை விட, புத்திசாலித்தனமான நிதி முடிவுகளே நீண்டகால செல்வத்திற்கு கை கொடுக்கும்.
பிரபல நிதி ஆலோசகர் நிதின் கவுஷிக், எக்ஸ் தளத்தில் ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் 48 வயதான ஒரு நிபுணர் எவ்வாறு ஒழுக்கமான முதலீடு மற்றும் சரியான நேரத்தில் மறுசீரமைப்பு மூலம் பல ஆண்டுகளின் நிதி நிச்சயமற்ற தன்மையிலிருந்து நம்பிக்கையையும், தெளிவையும் பெற்றார் என்பதை விளக்கியுள்ளார். "ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் இரண்டு கட்டங்களில் தைரியமாக செயல்பட முடியும். ஒன்று 30 வயதில், இன்னொன்று 50 வயதில். முதல் கட்டம் செல்வத்தை உருவாக்கும். இரண்டாவது அதை மீண்டும் நிலைநிறுத்தும்" என்று கவுஷிக் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நல்ல வருமானம் ஈட்டியும், கடந்த 25 ஆண்டுகளாக தனிப்பட்ட செல்வத்தில் பெரிய வளர்ச்சி காணாத ஒரு 48 வயது நிபுணரின் கதைதான் இது. ஆண்டுக்கு ரூ.45-50 லட்சம் சம்பாதித்த போதிலும், "25 வருடங்களாக நான் பணம் சம்பாதித்துவிட்டேன். இப்போது பணம் எனக்காக எப்படி சம்பாதிக்கும்?" என்ற கேள்வி அவரைத் தொந்தரவு செய்தது என்று கவுஷிக் கூறுகிறார். அந்த சமயத்தில், அவர் 90 லட்சம் பணத்தை வருங்கால வைப்பு நிதியில் (PF) வைத்திருந்தார். அது பாதுகாப்பானது என்றாலும், நீண்டகால பணவீக்கம் மற்றும் ஓய்வூதியத் தேவைகளுக்கு அது போதுமானதாக இல்லை.
"பாதுகாப்பு மட்டுமே பணவீக்கத்தை வெல்லவோ அல்லது 25 ஆண்டுகள் ஓய்வுபெற்ற வாழ்க்கைக்கு நிதியளிக்கவோ முடியாது" என்று குறிப்பிட்ட கவுஷிக், இது அவரது நிதியை மறுசீரமைப்பதற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் தொடக்கம் என்றார். கவுஷிக் பின்வருமாறு அவருக்கு முதலீட்டு உத்தியை தந்தாராம்: பன்முகப்படுத்தப்பட்ட பங்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் 60% (ப்ளூ-சிப், ஃப்ளெக்ஸி-கேப், மிட்-கேப்), ஹைப்ரிட் மற்றும் கடன் நிதிகளில் 25%, நிலையான வருமானத்திற்காக REIT-களில் 10%, மற்றும் நெகிழ்வுத்தன்மைக்காக 5% பணமாக வைக்கப்பட்டது என்கிறார்.
நான்கு ஆண்டுகளில், போர்ட்ஃபோலியோவின் ஒவ்வொரு பகுதியும் கணிசமாக வளர்ந்தது. பங்கு மியூச்சுவல் நிதிகள் ரூ54 லட்சத்திலிருந்து ரூ98.23 லட்சமாக உயர்ந்தது (16% CAGR). ஹைப்ரிட் மற்றும் கடன் நிதிகள் ரூ22.5 லட்சத்திலிருந்து ரூ33.06 லட்சமாக வளர்ந்தது (10% CAGR). REIT-கள் ரூ9 லட்சத்திலிருந்து ரூ12.25 லட்சமாக ஆனது (8% CAGR). பணமாக இருந்த நிதிகள் ரூ4.5 லட்சத்திலிருந்து ரூ5.27 லட்சமாக அதிகரித்தது (4% CAGR) என்கிறார்.
மொத்தமாக, போர்ட்ஃபோலியோ ரூ90 லட்சத்திலிருந்து ரூ1.48 கோடியாக உயர்ந்தது. இது சுமார் 15% ஒட்டுமொத்த CAGR-ஐக் குறிக்கிறது. இது எந்தவிதமான பதட்டமான விற்பனையோ அல்லது ஊக வணிகமோ இல்லாமல் அடையப்பட்டது. தற்போது 52 வயதான அந்த வாடிக்கையாளர், ஓய்வுபெறும் வயதை நெருங்கும்போது மிகவும் நிம்மதியாக இருக்கிறார் என்று கவுஷிக் குறிப்பிடுகிறார்.
முக்கியமாக, தற்போதைய போர்ட்ஃபோலியோ ஆண்டுக்கு 12% என தொடர்ந்து வளர்ந்தால், 60 வயதிற்குள் அவரது செல்வம் ரூ 3 கோடியைக் கடக்கலாம் என்று கவுஷிக் கணக்கிடுகிறார், "கூடுதலாக ஒரு பைசா கூட முதலீடு செய்யாமல்".
”ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் இரண்டு முறை தைரியமாக இருக்க முடியும் - 30 வயதில், அவன் வாழ்க்கையை கட்டியெழுப்பும் போதும், 50 வயதில், பொறுப்புகள் குறையும்போதும், தெளிவு கூர்மையாகும்போதும். முதல் முறை, வளர்ச்சியைத் துரத்துகிறீர்கள். இரண்டாவது முறை, சுதந்திரத்தைத் துரத்துகிறீர்கள் என்கிறார்."செல்வத்தை உருவாக்குவது சந்தையின் உச்சங்களைத் துரத்துவதை விட, ஒழுக்கம், நிலையான சொத்து ஒதுக்கீடு மற்றும் பொறுமையே முக்கியம் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications